Saturday, 26 November 2011

திருமலை நாயக்கர்அரண்மனை

மன்னன் திருமலை
கிபி 1627லில் இருந்து 1659வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆண்ட திருமலை நாயக்கரால் இவ்வரண்மனை எடுக்கப்பட்டது. தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது இதுவே. இவ்வரண்மனையைத் திருமலை மன்னர் 1639ல் இந்தோ-சாரசீனிக் முறைப்படி கட்டி முடித்தார். இதில் தம்முடைய 75ம் வயது வரை மனைவியருடன் வசித்தார்.
 
திருமலை மன்னன் கட்டியபோது இப்போது எஞ்சியுள்ளதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரியதாக இவ்வரண்மனை திகழ்ந்தது. இவ்வரண்மனையில் பல பகுதிகளைப் பற்றிய பண்டைய குறிப்புகள் உள்ளன. இங்கு சொர்க்க விலாஸம், ரங்க விலாஸம், என்று இரண்டு முக்கிய பகுதிகள் இருந்தன. தவிர, பதினெட்டுவித இசைக் கருவிகள் இசைக்கும் இடம், படைக்கலன் வைக்கும் இடம், பூஜை செய்யும் இடம், அரியணை மண்டபம், தேவியரின் அந்தப்புரம், நாடகசாலை, உறவினர்களும் பணிசெய்வார்களும் வசிக்கும் இடங்கள், வசந்தவாவி, மலர்வனங்கள் சுற்று மதிள் முதலியன இருந்தன. திருமலை நாயக்கர் சொர்க்க விலாஸத்திலும் அவர் தம்பி முத்தியாலு நாயக்கர் ரங்கவிலாஸத்திலும் வசித்தனர்.

 
இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் என்றும், தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே இந்தப் பாதையைப் பார்க்கலாம் என்றும் தகவல் எனக்குக் கிடைத்தது.
 
இப்பொழுது எஞ்சியுள்ள பகுதியே சொர்க்க விலாஸம் என்பது. இப்பொழுதுள்ள அரண்மனை நுழைவாயில் இக்கட்டத்தின் வடக்கில் இருந்தது. கட்டடத்தின் கிழக்கில் புறங்களில் பக்கத்துக்கு ஒரு சிகரமாக இரண்டு சிகரங்கள் இருக்கின்றன. இவற்றின் மேல் இருந்த ஸ்தூபிகள் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தன. தற்பொழுது வடபுறச் சிகரத்தில் ஒரு கடியாரம் வைக்கப்பட்டுள்ளது.
முற்றம் உள்ளே நுழைந்தும் ஒரு பெரும் முற்றவெளியும் சுற்றிலும் உயரமான தூண்கள் தாங்கிய கட்டடமும் உள்ளன. மேற்கில் வேலைப்பாடுடைய ஒரு கட்டப் பகுதி உள்ளது.
 

முற்றத்தின் வடக்கிலும் தெற்கிலும் நடுவில் சாலை வடிவமான மிகவும் உயர்ந்த கட்டப் பகுதிகள் இருக்கின்றன. இவற்றின் ஸ்தூபிகளும் பொன்னால் செய்யப்பட்டிருந்தன. தாங்கும் சட்டங்கள் இல்லாத அந்த குவிந்த கூரை கட்டடக்கலையில் ஒரு மைல் கல் ஆகும்.

சொர்க்கவிலாஸம்
இரண்டு குதிரைச் சிற்பங்கள் அலங்கரிக்கும் படிகளின் வழியே, மேற்கில் எழில் வாய்ந்த பகுதியை அடையலாம். இதுவே சொர்க்க விலாஸம் என்பது. மிகவும் நெடிய தூண்களும், எழிலார்ந்த சுதை வேலைப்பாடுகளும் குவிந்து மேலே தோன்றும் விமானங்களும் கலைத் திறனின் எடுத்துக்காட்டுகள். பார்க்கப் பார்க்க பரவசம் ஊட்டுபவை.



இப்பகுதியின் நடுவில் மிகவும் விலாஸமான இடமும் அதன் மேல் கவிந்து உயர உயரச் செல்லும் விதானமும் நாம் சொர்க்கத்தில் நிற்கிறோமோ என்னும் வியப்பைத் தோற்றுவிக்கும். ஆதலின்தான் இதை சொர்க்க விலாஸம் என்று மன்னன் அழைத்து மகிழ்ந்திருந்தான் போலும். இதன் மேலிருந்த ஸ்தூபிகளும் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தன.
 


இவ்விடத்தில் கல்பீடத்தின் மேல் நடுவில் யானைத் தந்தத்திலான நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த ஒரு சாலை (மண்டபம்) வைக்கப்பட்டிருந்தது. அதன் நடுவில் இரத்தினங்களால் செய்யப்பட்ட அரியணை இருந்தது. அதன் மீதமர்ந்துதான் திருமலை மன்னன் செங்கோல் நடத்தினான்.


செங்கோல் விழா
ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவில் எட்டாம் நான் திருமலை மன்னன் அங்கயற்கண்ணி அம்மைக்கு கோயிலில் முடிசூட்டு விழா நடப்பித்து அங்கு அம்மனிடமிருந்து செங்கோலைப் பெற்று வீதி உலாவாகக் கொணர்ந்து இவ்வரண்மனையில் இந்த சொர்க்க விலாஸத்தில் சிறப்பாக அலங்கரித்த அரியணையில் செங்கோலை அமர்த்தி தான் அருகில் கீழே அமர்வார். செங்கோலுக்குச் சிறப்பாக வழிபாடுகள் வழங்கப்படும். அன்று முழுவதும் செங்கோல் அரியணையில் இருக்கும். மறுநாள் திருமலை மன்னர் செங்கோலுக்கு மறுவழிபாடு செய்து, கோயிலுக்கு எடுத்துச் சென்று அன்னையின் அடியில் வைத்து வணங்குவது வழக்கம். அன்னையின் அடியானாக நாட்டை ஆள்வதை இது குறிக்கும்.
நவராத்திரி விழா
நவராத்திரி விழாவில் ஒன்பது நாட்களும் திருமலை மன்னர் சிறப்பாக தன்னை அலங்கரித்துக்கொண்டு இங்கு அரியணையில கொலு வீற்றிருப்பார். மாற்றரசர்கள் எல்லாம் இங்கு அவருக்குத் திறை செலுத்துவர்.
அந்தப்புரம்
சொர்க்க விலாஸத்தின் மேற்கில் அந்தப்புரம். தென் மேற்கில் கருங்கல் தூண்கள் கொண்ட ஒரு இடம் இருக்கிறது. இங்கு இரண்டு அறைகள் இருந்தன. இப்பொழுது உள்ளது ஒன்றின் பகுதியே. இங்கு அரச மாதேவியரும் பிற பெண்டிரும் இசையும் தென்மேற்கு மூலையில் அரண்மனையின் மேலே செல்ல படிகள் இருக்கின்றன. அங்கே பல பகுதிகளில் சுற்றி வர வசதி இருக்கிறது. திருமலை மன்னர் தன் மனைவியருடன் மேலே சென்று சுற்றிவரும்போது கீழிருந்து மக்கள் கண்டு வணங்குவர்.
நாடகசாலை
சொர்க்க விலாஸத்தின் வடமேற்கில் கிழக்கு மேற்காக நீண்ட, மிகவும் எழில் வாய்ந்த ஒரு பகுதி இருக்கிறது. இதன் நடுப்பகுதி தாழ்ந்தும் சுற்றிலும் திண்ணைபோல் உயர்ந்தும் உள்ளன. தூண்களையும் மேல் பகுதிகளையும் அழகிய சுதை உருவங்கள் அலங்கரிக்கின்றன. இதன் மேற்கில் இருபுறமும் மேலே செல்வதற்கு மாடிப்படிகள் உள்ளன. இதுவே நாடகசாலை என்று குறிக்கப்படுவது. மாலை நேரங்களில் திருமலை மன்னன் தன் பெண்டிருடனும் உற்றார் உறவினருடனும் இங்கு போந்து நாட்டிய மகளிர் ஆடும் பல கூத்துகளை தீவர்த்தி வெளிச்சத்தில் கண்டு களிப்பது வழக்கம்.
ஆயுதசாலை முதலியன
அந்தப்புரத்தின் மேற்கில் ஆயுதசாலை இருந்தது. நாடகசாலையின் மேற்கில் 'வசந்தவாவி' என்னும் நீர்த்தடம் இருந்தது. இதற்கும் வடக்கில் மல்யுத்தம் செய்யுமிடம் ஆட்டுக்கிடாய் சண்டை செய்யுமிடம் முதலியன இருந்தன. இவற்றிற்கும் மேற்கில் உற்றார் உறவினர் வசிக்கும் நீண்ட பல கட்டடங்கள் இருந்தன.
தேவி பூசைக்கோயில்
நாடகசாலையின் வடகிழக்கில், கிழக்கு நோக்கிய கோயில் ஒன்று இருந்தது. இதன் முகப்பிலும் உள்ளும் கருங்கல் பணிகள் நிறைந்திருந்தன. இங்கு இராஜராஜேஸ்வரியயும் மற்ற பிற தெய்வங்களையும் திருமலை நாயக்கர் நாள்தோறும் வணங்குவர். இக்கோயிலின் முன்னர் ஒரு நீராவியும் மலர்வனமும் இருந்தன.
ரங்கவிலாஸம்
இக்கோயிலின் வடக்கில் ஒரு சந்துத் தெருவில் நெடிய பத்துத் தூண்கள் இன்றும் நிற்கின்றன. இவை மறைந்த அரண்மனையின் பகுதியே. இவற்றின் மேற்கில்தான் ரங்கவிலாஸம் இருந்தது. சொர்க்க விலாஸம் போல இது அமைந்திருக்க வேண்டும். இதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்தார். இதன் மேற்கில் சந்திரிகை மேடை என்னம் ஒரு கட்டடம் இருந்தது.இவற்றின் வடக்கில் தெற்கு மாசி வீதியை நோக்கி ஒரு நுழைவாயில் இருந்தது. இங்கு "காவல் ராஜாக்கள்" இருந்தனர். பல பரிச்சின்னங்களும் ஆயுதங்களும் இங்கு வைக்கப்பட்டிருந்தன. அரண்மனை வாயில் பத்து தூண்களின் கிழக்கில் அரண்மனையின் நுழைவாயில் இருந்தது. அதன் முகப்பு சிறந்த வேலைப்பாடுகளுடன் திகழ்ந்தது. அங்கு 18வித இசைக்கருவிகள் இசைக்கும் இடமிருந்தது. இப்பகுதியையே நவ்பத்கானா என்று கூறுவர். இது இருந்த இடமே நவ்பத்கானா தெரு என்று அழைக்கப்படுகிறது. ஒரு நூறு ஆண்டுகளுக்கும் முன்னர் கூட இக்கட்டடம் இருந்தது. ஆனால் பழுதடைந்திருந்தது. 1858ல் பழுது பார்க்கப்பட்ட போதிலும் இது அதிகநாள் நிற்கவில்லை. இதற்கம் கிழக்கில்தான் பல்லக்கு முதலிய பரிகலன்கள் வைக்கப்பட்டிருந்தன.
சுற்று மதிள்
இவை அனைத்தையும் சுற்றி ஒரு மதிள் இருந்தது. இதைப் பாரிமதிள் என்பர். சென்ற நூற்றாண்டில் கூட எஞ்சியிருந்த இம்மதிள் 900 அடி நீளமும் 660 அடி அகலமும் 40 அடி உயரமும் இருந்ததாம். மிகவும் அபாய நிலையிலிருந்ததால், 1837ல் இச்சுவர் இடித்துத் தள்ளப்பட்டதாம். இம்மதிளுக்கு வெளியில், மேற்கில் மலர் வனங்கள் இருந்தன. இவற்றின் நடுவில் ஒரு கட்டடம் இருந்தது. அதில் திருமலை மன்னன் மனைவியருடன் தங்குவது வழக்கமாம்.
அரண்மனைப் பகுதி மறைவு
இவ்வெழில் வாய்ந்த அரண்மனையின் பகுதியை திருமலை மன்னரின் பெயரன் சொக்கநாத நாயக்க மன்னனே இடித்தான். மதுரையிலிருந்து திருச்சிக்கு அதன் தலைநகரை மாற்றியபோது இங்கிருந்து இடித்த பொருள்களை திருச்சி எடுத்துச் சென்று அங்கு ஒரு அரண்மனை எடுக்க முயன்றான். அவன் முயற்சியில் கலை அதிக இடம் பெறவில்லை. சென்ற நூற்றாண்டில் கூட இடிந்த சில பகுதிகள் நின்று கொண்டிருந்தன. காலப்போக்கில் பல பகுதிகள் அழிந்துவிட்டன.
அரண்மனை பிழைத்தது
கிபி 1857லேயே இப்போது எஞ்சியுள்ள சொர்க்க விலாஸத்தின் பல பகுதிகள் விரிசல் கண்டிருந்தன. கிபி. 1858ல் பெய்த கடும் மழையில் மேற்குப் பகுதியில் ஒரு சுவர் வீழ்ந்தது. பல பகுதிகளுக்குச் சேதம் ஏற்பட்டது. 1868ல் சென்னை கவர்னராயிருந்த லார்டு நேபியர் இவ்வரண்மனையின் அழகைக் கண்டு இதில் மிகவும் ஏடுபாடு கொண்டு இதை உடனடியாகக் காக்க இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு இதை உடனடியாகக் காக்க வகை செய்தார். 1872க்குள்ளாக இரண்டு லட்சம் ரூபாய் செலவில் பழுதுபார்க்கப்பட்டது. இடிந்த சில பகுதிகள் கட்டப்பட்டன. மேலே விரிசல் கண்ட பகுதிகளில் இரும்புக்கம்பிகள் போட்டு முறுக்கப்பட்டன. சுதை வேலைகள் பழுதுபார்க்கப்பட்டன. வண்ணங்கள் ஓரளவிற்கு முன்போல் தீட்டப்பட்டன. 1970 வரை நீதிமன்றங்கள் இவ்வரண்மனையில் இயங்கிவந்தன. பிறகு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இவ்வரண்மனையைத் தன்வசம் தக்கவைத்துள்ளது.

தினந்தோறும் 08-00 மணிமுதல் 17-00 வரை சுற்றுலாவினருக்காக திறந்திருக்கும் இம்மண்டபத்தில் ஒளி/ஒலிக்காட்சி தினந்தோறும் இருமுறை நடத்தப்பெறுகிறது. ஆங்கிலத்தில் மாலை 6-45க்கும் தமிழில் இரவு 8-15க்கும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இக்காட்சிகளை நடத்துகிறது. இக்காட்சிகளின் எழில்மிகு தோற்றம் அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. திருமலை மன்னரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளையும், அவரது ஆளுமைத்திறனையும், சிலப்பதிகார நினைவுகளையும் இக்காட்சிகள் நினைவுபடுத்துகின்றன. கைகேமராக்களைக் கொண்டு செல்வதில் தடை இல்லை. ஆனால் வீடியோ காமிராக்களுக்கு சிறப்பான அனுமதி மேலிடத்திலிருந்து பெறவேண்டும். அரண்மனைக்கு வெளியே மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஒரு பாதிநாளை அமைதியுடனும் வியப்புடனும் கழிக்க இந்த பழைமையான சின்னம் சிறந்த இடமாகும்.
 

வரலாற்று சிறப்பு மிக்க திருமலை நாயக்கர் மஹால் பற்றி ஒரு பார்வை

17 Aug 2011
மதுரை, மீனாட்சிக்கு மட்டும் பெயர் போனதல்ல! நாயக்கர் மஹாலுக்கும் பெயர் போனதுதான். 17ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னரால் கி.பி.1636 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரால் இஸ்லாமிய, திராவிட, ஐரோப்பிய கட்டிடக் கலைகளை பின்பற்றி கட்டப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை அறிந்திராதவர் எவரும் இல்லை என நினைக்கிறேன். அக்கோவிலில் இருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால்.  உள்ளே செல்லும்போது நீங்கள் 3700 சதுர கி.மீ பரப்பளவுடன் கூடிய மஹாலின் மத்தியில் அமைந்துள்ள மைதானம் போன்ற அமைப்பை காண முடியும். அதை சுற்றிலும் வட்ட வடிவில் பிரமாண்டமான தூண்கள் மஹாலை தூக்கி நிறுத்துகின்றன. தற்போது அந்த இடம் பூங்காவாக மாறியுள்ளது.

இந்த மஹால் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சொர்க்க விலாசம் மற்றொன்று ரங்க விலாசம். இதில் சொர்க்க விலாசம் அரசவையாக பயன்படுத்தப்பட்டது.  அனைத்து கட்டிடங்களும் இந்த இரண்டு பகுதிகளுக்குள் அடங்கிவிடும்.  மஹாலின் சிறப்பம்சமே அங்கு இருக்கும் பிரமாண்ட தூண்கள்.  பல தூண்களை நீங்கள் என்ன நினைத்தாலும் கட்டிப்பிடிக்க முடியாது, அவ்வளவு பெரிய தூண்கள். (என்னே நாயக்கரின் கட்டிடக்கலை).  அந்த காலங்களில் வசதிகள் இல்லாத நிலையிலும் நமது மன்னர்கள் பிரமாண்டத்தையே விரும்பினர் என்பதற்கு இதுவே நல்ல எடுத்துக்காட்டாகும்.  ஆனால் நாமோ இன்று வசதிகள் இருந்தும் சிறிய கட்டிடங்களை எழுப்பிவருகிறோம்.

இந்த மஹால் முழுவதும் செங்கல் போன்ற கற்கலால் கட்டப்பட்டது.  மொத்த மஹாலும் சுண்ணாம்பு மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பூசப்பட்டுள்ளது. இந்த மஹாலில் மொத்தம் 248 தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றொன்றும் 58 அடி நீளமும் 5 அடி விட்டமும் கொண்டது.  தற்போது உள்ள கட்டிடத்தை விட 4 மடங்கு பெரிதாக கட்டபட்டது இந்த மஹால் என்று ஆராய்ச்சி கூறுகிறது.  

தற்போது தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இந்த மஹால் இயங்குகிறது.  தினமும் கண்கவர் ஒளி மற்றும் ஒலிக் காட்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறுகிறது.  முக்கியமாக சிலப்பதிகாரத்தை பற்றி இந்த காட்சிகள் நடத்தப்படுகின்றன.  இந்த மஹாலைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள மஹாலுக்கே சென்று வாருங்கள்.

என் வீட்டிலிருந்து வெளியேறி சிறிது தூரம் நடந்து ஒரு இடது பக்கம் திரும்பி, இன்னும் சிறிது தூரம் நடந்து ஒரு வலது பக்கம் திரும்பி...அதே போல் மற்றொரு முறை செய்தால் நாயக்கர் வீடு! மதுரையில் பிறந்து வளர்ந்த நான், போன முறை மதுரை சென்ற போது என் நினைவு தெரிந்து 3வது முறையோ, 4வது முறையோ நாயக்கர் வீட்டுக்குச் சென்று வந்தேன்! வேலு நாயக்கர் பம்பாயை அல்லவா உலுக்கிக் கொண்டிருந்தார்! அவர் எங்கே இப்படி என்று முழிப்பவருக்கு, நான் சொல்வது வேலு நாயக்கரைப் பற்றி அல்ல, திருமலை நாயக்கரைப் பற்றி! [ஆஹா! என்ன ஹாஸ்யமா எழுதுறான் இந்தப் பையன்!] நான் சென்று வந்தது திருமலை நாயக்கரின் அரண்மனை! அரண்மனை என்ற வார்த்தை பெரிதாய் இருப்பதால் நாம் இந்தப் பதிவிற்காக அதை வீடு என்று வைத்துக் கொள்வோம்! [நாயக்கருக்கு என்ன கஷ்ட காலம் பாருங்கள்!]

அந்த வீட்டில் பல சரித்திரப் புகழ் மிக்க நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன..அதாவது 1994 ஆம் ஆண்டு பம்பாய் படத்தின் "கண்ணாலனே" பாட்டின் படப்பிடிப்பு நடந்த போது மணிரத்னம் ஒரு முறை என்னை பார்த்தால் போதும், அடுத்த அர்விந்த் சாமி நான் தான் என்று நினைத்தேன்! என் கஷ்ட காலமோ என்னமோ அன்று டியுஷனில் கணக்கு பரிட்சை இருந்ததால் தமிழ்நாடு பிழைத்தது...பிறகு கல்லூரிக் காலத்தில் நேருக்கு நேராய் சிம்ரனை தரிசிக்க முயன்று அந்த வீட்டு மதில் மேல் வந்தியத் தேவனை போல் ஏறிக் குதித்து [நல்ல வேளை அகழியை மூடி விட்டார்கள்!] அருகில் செல்லும்போது சே! ஒரு பெண்ணைப் பார்ப்பதற்கு இத்தனை பாடா என்று கேனத்தனமான ஞானோதயம் பெற்று அந்த சந்தர்ப்பத்தையும் கோட்டை விட்டவன்! இது தான் எனக்கும் நாயக்கரின் வீட்டுக்கும் உள்ள சரித்திரப் பின்னனி!

இதற்கு மேலும் என் சரித்திரத்தைக் கூறி உங்களை சித்தரவதை செய்ய விரும்பவில்லை..எங்கே, என் போட்டோகிராபி திறமையை பார்த்து வாயடைத்துப் போங்கள் பார்ப்போம்!!


இருவர் சேர்ந்தது பிடித்தாலும் முழுதாய் இந்தத் தூண்களை பிடிக்க முடியாது!

மற்றொரு சரித்திர நிகழ்வு...

விண்டோ ஏசீ?


ஒட்டடை அடித்தவன் நிலை என்ன ஆயிருக்கும்?



இது நடன நாட்டிய கலா மண்டபம்!

ஒளியை நிறம் பிரித்திருக்கிறார் நாயக்கர்!

பார்வதி தேவி என்று ஞாபகம்!

தங்கப்ப தக்கம்!

Sunday, 20 November 2011

திரு கிருஷ்ணசாமி குள்ளப்ப நாயக்கர்

திரு கிருஷ்ணசாமி குள்ளப்ப நாயக்கர்

மதுரைக்கு பக்கத்தில் வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள சந்தையூர் ஜாமீன்தாரர் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தை சேர்ந்த இவரை பற்றிய மதுரை ஆவணகளில் உள்ள செய்தியை தமிழ் ஆக்கம் செய்து உங்களுக்கு சமர்பிகின்றேன் .
 
சந்தையூர் ஜமின் வரலாறு :
 
சந்தையூர் ஜமின் ஏனைய கம்பளத்தார் ஜமின்களை போல மிகபழமை வாய்ந்தது . துவாபர யுகத்தில் இக்கம்பள மக்கள் கிருஷ்ணரை வணங்கியதாகவும் விஷ்ணு இவர்களுக்கு ஆசி வழங்கி என்றும் குறைவு இல்லாமல் இருப்பீர் என்றும் , நீங்கள் சொல்லும் வாக்கு பலிக்கும் என்றும் கூறியதாக இக்குல மக்களால் நம்பபடுகிறது .

சுமார் ஆயிரம் வருடம் முன்பு தமிழ்நாட்டு எல்லை பகுதியில் உள்ள ஆந்திர மாநிலம் சந்திரகிரி மற்றும் சில ஊர்களை குள்ளப்ப நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்துள்ளார் . இவ்வாறாக இருக்கையில் விஜயநகர மன்னரை ( சொந்தகாரரை ) பார்க்க சென்றுள்ளார் குள்ளப்பர் , ஆனால் விஜயநகர கோட்டைக்கு அவ்வளவு எளிதாக யாரும் செல்ல முடியாது . கோட்டை வாசலில் சோமன் என்ற வீரன் ஒருவன் இருப்பான் அவனிடம் சண்டையிட்டு அவனை வென்றால் தான் கோட்டைக்குள் யாரும் செல்ல முடியும் . யாராலும் அடக்கமுடியாத அந்த சோமனை குள்ளப்ப நாயக்கர் மற்றும் அவரின் 8 சகோதரர்கள் அடக்கி மன்னரை சந்தித்தனர் . இவர்களின் வீரத்தை கண்டு வியந்த மன்னர் இவர்களுக்கு சாமரம் , அணிகலன் போன்ற பரிசுகளை கொடுத்து பாராட்டி அனுப்பினார் .

முகமதியர்களின் படையெடுப்பில் தெற்கு நோக்கி கம்பளத்தார்கள் வருகையில் குள்ளப்ப நாயக்கர் வம்சமும் தமிழகத்தில் மதுரைக்குப் பக்கத்தில் வந்து குடியேறினர் . மதுரை பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட நேரம் என்பதால் இவ்வம்சத்தை சேர்ந்தவர்கள் பாண்டியரிடம் சென்று தாங்கள் வாழும் பகுதியை தாங்களே ஆள வேண்டும் என்றும் தங்களின் முன்னிலமையையும் எடுத்து கூறினர். பாண்டியர் கம்பளதார்களிடம் நீங்கள் மதுரை பகுதியில் உள்ள கள்ளர்களை அடக்கி காவல் செய்வீர் என்றும் , திசைகாவல் பொறுப்பை கம்பளதார்களுக்கு வழங்குகின்றேன் என்று கூறினார் .

கம்பளத்தார்கள் அங்குள்ள கள்ளர்களை அடக்கி " கருக்கோட்டன் பட்டியில் "" கோட்டை அமைத்து கி.பி.1102 - 1900  வரை இவர்களே இப்பகுதிக்கு ஆட்சி செய்து வந்துள்ளனர் . அரசர்களாகவும் , ஆங்கிலேய ஆட்சி காலத்தில் ஜமின்களாகவும் இருந்து வந்துள்ளனர் .
பரவலாக கிருஷ்ணசாமி குள்ளப்ப நாயக்கரை பற்றிய ஆவணங்கள் அதிக அளவில் உள்ளன ( ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழந்தவர் ) என்பதால் இருக்க கூடும் .

மிகவும் வீரமிக்கவர் என்றும் , அனைவரிடமும் பாசம் செலுத்துபவர் என்றும் , கம்பளத்தார் சட்டதிட்டங்களை கடுமையாக கடைபிடிப்பவர் என்றும் ஆங்கிலேயன் இவரை பற்றி எழுதி உள்ளான் .

உண்மை வரலாறு :
1000  வருடங்களுக்கு முன்பே வந்தவர்கள் கம்பளத்தார்கள்
- தமிழகத்தில் குடியேறிய முதல் வேற்று மொழி பேசக்கூடியவர்கள் .
- வடுகர் என்று முதலில் அழைக்க பட்டவர்கள் ( வடக்கில் இருந்து வந்தவர்கள் )
- கம்பளதார்களின் உதவியால் தான் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி வந்தது , அதனால் தான் பெரும்பாலான பாளையம் இவர்களால் ஆளப்பட்டுள்ளது . கம்பளத்தார் என்பது ஒரு இட பெயர் , இவர்களின் ஜாதி என்று பார்த்தல் காப்பு பலிஜா இனத்தை சேர்ந்தவர்கள் .
- வடுகர் என்றால் முரடர் என்று யாழ்ப்பான அகராதி கூறுகின்றது . முதலில் வந்த வடுகர் ( கம்பளத்தார் ) மிகவும் முரட்டு தனமாக இருந்ததால் ஆட்சி அதிகாரங்களை கடுமையாக வீரத்தால் பல போரில் வென்றதால் இவ்வாறு பொருள்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .

- தமிழ்நாட்டில் 15 ஆம் நூற்றாண்டில் குடிபெயர்ந்தவர்கள் தற்போதுள்ள காப்பு , பலிஜா , கவரா இனத்தை சேர்ந்தவர்கள் . இவர்களும் கம்பளத்தார்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் 500 வருட காலங்களில் தெலுங்கு அதிக வளர்ச்சி அடைந்த காரணத்தால் பலிஜா , கவரா வகுப்பினர் சற்று நல்ல தெலுங்கில் பேசுவர் . கம்பளத்தார் வரும் காலத்தில் தெலுங்கும் , தமிழும் கலந்த நிலையில் தற்போது இவர்கள் பேசும் மொழியை போல தான் ஆந்திராவில் பேசி இருப்பர் என்று ஆராய்ச்சி மக்கள் கூறுகிறார்கள் . கம்பள மக்கள் பிற இனத்தை சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் கூட சேர்க்காமல் வாழ்ந்து வந்ததால் இன்றும் இவர்கள் பழமையோடும், வீரத்தோடும் வாழ்கிறார்கள் .

- இவ்வாறு பலிஜா , கவரா , கம்பளத்தார் ஒரே ஜாதியினர் என்றாலும் மொழியில் சிறிது வேறுபாடு , நாயக்கர்கள் பொதுவாக அதிக ஜாதி பற்று கொண்டவர்கள் என்பதால் ஒரே கிளை , வம்சம் பார்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர் .
பிற இனத்தை சேர்ந்தவர்களான் தெலுங்கு செட்டியார் , கம்மா , ஆரிய வைசியர் போன்றோர் 17 ஆம் நூற்றாண்டில் வந்தவர்கள் .

ஆயிரம் வருடங்களாக தமிழ் மண்ணில் நிலைத்து , 800  வருடம் தமிழகத்தை ஆட்சி செய்து அதற்கு முன்னும் ஆந்திராவை ஆட்சி செய்தும் வரலாறு நெடுகிலும் ஆட்சி செய்தே அதிகாரம் படைத்தே வாழ்ந்த ஒரு இனத்தை யாராவது சொல்ல முடியுமா ?

பலிஜா /கவரா /காப்பு :


=>ஆந்திரா , ராயலசீமா பகுதியிலே வாழ்ந்த திராவிட இனத்தை சேர்ந்தவர்கள் இந்நாயுடுக்கள் .
=> இவர்களே திராவிட நாட்டில் பெருன்பான்மை மக்கள்
காப்பு =கவரா=பலிஜா=வடுகர்=தெலுகா=பாளையகாரா=முடி
ராசுலு=முத்தரையர்.
=>இவர்கள் அனைவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் , பல பெயர்களில் திராவிட நாடு , தெற்கு இந்தியா முழுவதும் வாழும் பெருன்பான்மை இனத்தவர்கள் .
=>விஜயநகரம்,கம்பளநாடு, காகதிய போன்றவற்றை ஆண்டவர்கள் இவர்களே .
 
பலிஜா = சமஸ்க்ரகத்தில் வாநிஜியா (வாணிகம் ) செய்பவர்கள்
கவரா=கவுருவமாக வாழ்ந்தவர்கள் ( மகாபாரதம் கவுருவர்கள் இவர்களே என்று நம்ப படுகிறது )
வடுகர்=தமிழக மக்கள் தெலுங்கு நாயுடுக்களை அழைக்கும் பெயர் (வடுகர்=வடக்கர் (வடக்கிலிருந்து வந்தவர்கள் )
இவர்களே தமிழகம் போன்ற தெற்கு இந்தியாவில் வாழ்ந்த உயர் ஜாதியினர் . தாங்கள் கடவுளுக்கே பிறந்தவர்கள் என்றும் , எங்களுக்கு மேல் உயர் ஜாதி உலகத்திலேயே இல்லை என்று என்னும் இனத்தவர் .
மதுரை நாயக்கர்கள்
தஞ்சை நாயக்கர்கள்
கண்டி நாயக்கர்கள் (இலங்கை )
செஞ்சி நாயக்கர்கள்
விஜயநகர நாயக்கர்கள்
தெலுங்கு சோழர்கள் போன்று இருந்தவர்கள் தற்போதைய நாயுடு/நாயக்கர் இனத்தவர்கள் .
பிரிவுகள் :
வரலாற்றின் படி ;
காப்பு =====> கம்பளத்தார், பலிஜா,கவரா, கஜுழு பலிஜா (வளையல் நாயக்கர் ), தொட்டிய நாயக்கர் , கோட்டை பலிஜா , லிங்க பலிஜா , தொழுவ நாயக்கர் , காட்டு நாயக்கர் போன்று நிலங்களுக்கு ஏற்றவாறு ஒரே இனத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு பெயர்களோடு இன்று வரை வாழுகிறார்கள் 
 
 
.
=> இவ்வினத்தில் பிறந்தவர்கள் அனைவரும் வீரர்கள் என்றும் , மானம் ஒன்றையே உயிராக மதிக்கும் வழக்கம் உடையவர்கள் என்றும் , வாணிகம் செய்வதிலும் வல்லவர்கள் என்றும் , சரித்திரத்தில் இவ்வினதவர்களே பெரும் பங்கு கொண்டவர்கள் என்றும் , அழகு ,ஆற்றல் அனைத்திலும் திறமை பெற்றவர்கள் என்றும் , ஆட்சி செய்வதில் வல்லவர்கள் என்றும் பல தலைவர்கள் , புலவர்கள் , மகான்கள் இவர்களை கூறியிருப்பது இவர்களின் பெருமையை காட்டும் ஒன்று .
=>இவர்கள் அனைத்து துறைகளிலும் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்று எண்ணுபவர்கள் , எனவே தான் இவர்களின் முன்னோர் அனைவருமே சாதனை படைத்தது வந்து உள்ளனர் 
 
 
 எடுத்துக்காட்டு பல உள்ளன :
=> இந்தியாவிலேயே முதல் முறையாக விடுதலை போராட்டத்துக்கு குரல் கொடுத்தவர்கள் இவ்வினத்தை சார்ந்த வீர மறவர் வம்சம் , வீர நாயக்கர் குலம் பிறந்த " வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர் ",

=> வெள்ளைகாரனுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த உமைத்துரை.
=>தமிழ் வளர்த்த எட்டயபுரம் "ஜெகவீர பாண்டிய எட்டப்பன் "
=>பல கோவில்களை கட்டி வீரமிக்கவராய் வாழ்ந்த போடி நாயக்கனூர் "காமராஜ பாண்டிய நாயக்கர் "

=>தென் நாட்டிலேயே இந்து ஆட்சியை 1000 வருடங்களுக்கு மேல் போர் ஏதும் நடத்தாமல் அமைதியான ஆட்சியை தந்த " ஸ்ரீ கிருஷ்ணா தேவராயர் நாயுடு "
=>தமிழகத்தில் தெற்கு இந்தியாவில் உள்ள பல கோவில்களை கட்டிய விஜயநகர நாயக்கர் ஆட்சி இவர்களுடயதே

=>உலக புகழ் பெற்ற மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை இன்று உலகத்தோர் வியக்கும் வண்ணம் கட்டிய பாண்டிய , நாயக்க அரசர்களும் இவர்களே .

=>திண்டுக்கல் கோட்டை ,திருச்சி மலை கோட்டை போன்ற எண்ணற்ற கோட்டைகளை கட்டி நவாபுகளின் கொட்டத்தை அடக்கி அவர்களை ஓட வெய்த்த "விசுவநாத நாயக்கர் "
=>தமிழக அரசு சின்னமாக விளங்கும் திருவில்லிபுத்தூர் "ஆண்டாள் "கோவிலை கட்டியது நாயக்கர்களே ..

=>மதுரை மாரியம்மன் கோவில், திருவண்ணாமலை கோவில் , திருப்பதி , தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் போன்று எண்ணற்ற ஆயிரகணக்கான கோவில்களை தமிழகம் , தெற்கு இந்தியாவில் கட்டிவித்து இந்து மதத்தையும் , தமிழ் மொழியையும் , சமுக இணக்கத்தையும் உருவாக்கிய ஒரே அரசு "நாயக்கர்களின் " அரசு .
=> இது அக்காலத்திய நாயக்கர்களின் உயர்வு . இன்றும் இம்மக்கள் உயர்ந்த இடத்திலேயே இருக்க விரும்புகிறார்கள் உதாரணமாக :

->தமிழக அரசியலில் ஏன் இந்தியா அரசியலுக்கே தந்தையாக இருப்பவர் நாயக்கர் இனம் தந்த "பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் " அவர் ஜாதிய எல்லைகளுக்கு கடந்து இருந்த போதிலும் , அவர் இல்லை என்றால் இன்று தமிழகத்தின் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று தெரியாது .
=>இன்று அளவும் அவரின் பெயர் சொல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்ய முடியாத அளவுக்கு பெயரை வாங்கியவர் . இன்றளவும் விஜயகாந்த் - தே.மு.தி.க தலைவர் 

நாயக்கர்களில் சாதித்தவர்கள் :


விடுதலை போராட்டம் :
- வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கர்
-ஊமைத்துரை
-கோபாலசாமி நாயக்கர் ( திண்டுக்கல் )
காலம் போற்றும் அரசர்கள் :
-ஸ்ரீ கிருஷ்ணதேவராயர்
-கனகேந்தி அனுமந்து - பாலநாடு அரசு
-விசுவநாத நாயக்கர்
-குமார கம்பணன்
-திருமலை நாயக்கர்
-ராணி மங்கம்மாள்
-ராணி கங்காதேவி ( மதுர விஜயம் எழுதிய அரசி )
-ராணி ருத்ரம்மா (காகதிய அரசி )
அரசியல் :
- தந்தை பெரியார் ஈ.வே .ராமசாமி நாயக்கர் (தி.க.தலைவர் ,சமுக போராளி )
-வங்கவேடி மோகன ரங்கா -ஆந்திராவின் சிம்ம குரல்

கம்பளத்தார்"


=>இவர்கள் நாயுடுகளிலையே பழமையான இனத்தவர்கள் , இவர்கள் தமிழகத்தின் பெருன்பான்மை ஜாதி .
கம்பளத்தார் =(கம்பள நாட்டினர் , கம்பளியை போர்த்தி வந்தனர் )
தொட்டிய நாயக்கர் =(தொட்டைய்ய நாயக்கர் (தெலுங்கு ), தமிழில் பெரிய நாயக்கர் )
சில்லவார், கொல்லவார், தொக்கலவார் என்பது இவர்களின் குடும்ப பெயர் .
துளுவ நாயக்கர் = துளுவ வம்சத்தினர்
ராயர்கள் = ராஜாக்கள்
முத்தரையர் = சேரர் , சோழர் ,பாண்டியர்களை வீழ்த்தி மூன்று தரையையும் ஆண்டதால் )
அம்பலகாரர்= தலைவர்
சேர்வைகாரர்=குதிரை படை தலைவர்
ராஜகம்பளம்= ராஜாக்கள்
=>இவர்கள் கி.பி. 1000 போல் தமிழகத்திற்கு வந்து எந்த தமிழ் சாதியினரையும் தன் இனத்தவர்களோடு கலக்க விடாமல் மிக ஒழுக்கமாகவும் , கண்டிப்பாகவும் வாழ்ந்து பழக்க வழக்கங்களை மாற்றாமால் இன்று வரை வாழ்கிறார்கள் .
=>இவர்கள் இங்குள்ள வெள்ளாளர்களை , பிராமணர்களை அடக்கி இவர்களே இந்நிலத்தை ஆள தொடங்கினர் .

எட்டப்பன் உருவான கதை*

எட்டப்பன் உருவான கதை*

எட்டயபுர மன்னர்களின்
அரச வம்சத்தினரின் பெயர் பட்டியலை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்த
பரம்பரையினரின் தொடக்க கால வரலாற்று விஷயங்களைத் தெரிந்து கொள்வதும்
இந்தக் கட்டுரை தொடருக்கு முக்கியமானதாக அமைகின்றது.
இவர்களது இனம் மற்றும் மொழி பற்றி குறிப்பிடும் போது Etaiyapuram Past and
present இவ்வாறு குறிப்பிடுகின்றது.



"The chief castes are, Naidus or Naicks of the Kambalam,
sections of the Vaduga caste; all three are agricultural, and Telugu
speaking, but differ in most other respects.  The Poligar of Etaiyapuram
belongs to the Kambala subdivision of the Vaduga caste. the Vadugas are, as
the name indicates, North country people, and hence foreigners...(Page 4)
இவர்களின்  மூதாதையர் வடக்கிலிருந்து வந்தவர்கள்; தெலுங்கைத் தாய்மொழியாகக்
கொண்டவர்கள். இவர்கள் கம்பளத்து நாயக்கர் எனச் சொல்லப்படும் ஒரு
குழுவினர்.    வடக்கிலிருந்து பெரும் அளவில் தெற்கு நோக்கி  பெயர்ந்து
வந்தவர்களில் இந்த கம்பளத்து நாயக்கர் குழுவினரின் எண்ணிக்கை அதிகம்.  அவ்வாறு
வந்தவர்களில் பெறும்பாலோர் மதுரைக்கு மேற்கே அடைக்கலம் தேடி வந்து அங்கே
குடியேறியுள்ளனர். 



16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு வந்த பலர்
இப்பகுதிகளில் தங்கி ஆட்சி செயயத் தொடங்கினர்.
நாயக்கர்களின் ஆட்சியின் போது கம்பளத்தார்கள் அரசனிடம் தஞ்சம் புகுந்து
அரச படைகளில், அரசரின்
அரசாங்கத்தில் என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
10வது பட்டமாகிய  குமார முத்து நாயக்கருக்கு இரண்டு மகன்கள். இவர்கள் நல்லம
நாயக்கர், வடலிங்கம நாயக்கர் ஆகியோர். நல்லம நாயக்கர்  விஜயநகரை ஆண்டு வந்த
சம்பு ராஜா அரண்மனையில் நிகழ்ந்த ஒரு விழாவில கலந்து கொள்ள வந்திருக்கின்றார்.
விஜயநகர ராஜாவின் கோட்டையின் தெற்கு வாசல் சோமன் என்ற ஒரு வீரனின் பாதுகாப்பில்
இருந்திருக்கின்றது. அந்த சோமனுக்கு 8 தம்பிகள். அவன் ஒரு மகாபெரிய வீரன்;
பலசாலியானவன். 




அவன் காலில் எப்போதும் ஒரு தங்கச் சங்கிலி
பொருந்தியிருக்குமாம்.  அப்போதிருந்த நடைமுறைப்படி  ராஜாவைப் பார்க்க
வருபவர்கள்  சோமனை மல்யுத்தத்தில் எதிர்த்து வென்று உள்ளே சென்று ராஜாவைப்
பார்க்கலாம். அல்லது அவன் காலில் அணிந்திருக்கும் அந்தத் தங்கச்
சங்கிலிக்குக் கீழே குணிந்து அவனுக்குப் பணிந்து சென்று பார்க்கலாம். இதில்
ஏதாவது ஒரு வழியில் தான் அரசனைப் பார்க்க முடியும் என்பது சட்டம்.
அரசரைப் பார்க்க விருப்பம் கொண்டிருந்த நல்லம நாயக்கர் சோமனுடன் மல்யுத்தம்
செய்வது என்று முடிவு செய்திருக்கின்றார். 



அவரும் பெரிய பலசாலியாக
இருந்திருக்க வேண்டும். மல்யுத்ததில் வென்று சோமனின் கழுத்தை தனது வாளால் வெட்டி
அந்தத் தலையை ஒரு கூரான ஈட்டியில் குத்தி எடுத்துக் கொண்டு அரசரைப் பார்க்கச்
சென்றிருக்கின்றார்.
ம்கா வீரனான நல்லம நாயக்கரின் வீரத்தைப் புகழ்ந்து பாராட்டிய அரசர் சோமனின் தலை
போன்ற ஒரு வடிவத்தைத் தங்கத்தால் செய்து அதனை நல்லம நாயக்கர் காலில் கட்டிக்
கொள்ள வேண்டும் என்று கூறியதோடு சோமனை இழந்து ஆதரவற்று இருந்த அவனது எட்டு
சகோதரர்களுக்கும் நல்லம நாயக்கரே பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கூற,  நல்லம
நாயக்கர் அந்த எட்டு சகோதரர்களையும் தத்தெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
இதனால் எட்டுபேர்களுக்கும் அப்பனானவன் எட்டப்பன் என்று அன்றிலிருந்து அவர்
பெயர் வழங்கப்பட்டிருக்கின்றார்.
இதனை Etaiyapuram Past and Present இப்படிக் கூறுகின்றது.
"




..and since he had spared the eight brothers of the defeated and dead
Soman, and had so adopted them, he would take the name of Ettappan
(Ettu=eight), (appan=father) in addition to the patronymic. The King also
granted him the privilege of two state fans, &c., in  addition to giving him
some lands and villages. Nallama Nayakar was taken round in procession and
granted leave to return to Chandraghiri. Since that time, the name Ettappan
is used by all legitimate successors to the Etaiyapuram Zamindhar .." (Page
14)
இதன் தொடர்ச்சியாக வம்சமணிதீபிகை நூலின் குறிப்பு இப்படி அமைகின்றது.
"..அதுமுதல்நாளது வரை எட்டப்பனென்ற பட்டப்பெயரானது இந்த இராஜாவின் வம்சத்திற்
பிறந்த இராஜாக்களுக்கு வழங்கி வருகின்றது. அப்படியே சோமத்தலைவிருதும் முதலில்
இந்த இராஜாவின் காலிற் கட்டின காமணன் தளவாய் வம்ஸசத்தர்களாலேயே பட்டாபிஷேக
காலத்தில் இராஜாக்களுடைய இடது காலிற் கட்டப்பட்டும் சந்திரகாவிக்
கொடியென்றவிருதும் முன்பிடித்தவன் வம்சஸ்தர்களாலேயே பிடிக்கப்பட்டும்
வருகிறது." (பக்கம் 28)
அன்று நல்லம நாயக்கர் காலில்
அணிந்திருத்த சோமனின் தலையின் வடிவமாக செய்யப்பட்ட தங்கச் சங்கிலி எட்டயபுர
அரச வம்சத்தினருக்கு மிக முக்கியச் சின்னமாக இன்றளவும் அமைந்திருக்கின்றது.
 




ஒவ்வொரு  பட்டாபிஷேகத்தின் போதும் இந்தச் சங்கிலி புதிய மன்னரின் காலில்
பொருத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது என்ற செய்தி வியக்க வைக்கின்றது.
ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாக இந்தச் சின்னங்கள் இப்பரம்பரையினரால்
பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது முக்கியமான விஷயமன்றோ..!

நாயக்கர் / நாயுடு பூர்வீகம் :

நாயக்கர் / நாயுடு பூர்வீகம் :

இவர்களின் பூர்வீகம் என்று அறியும் போது ஆந்திராவில் இருந்த ஆதி மக்கள் . மேற்கு சாளுக்கியர்கள் , சாத்வகனாக்கள் என்று பல அரசுகளை கி.பி. 600 களிலேயே இவ்வினத்தவர்கள் ஆண்டதுக்கான சான்று கண்டு புடிக்க பட்டுள்ளது .
=>தற்போது தெலங்கானா என அழைக்கப்படும் பகுதியை இவர்கள் கி.பி. 300 களிலேயே ஆண்டு உள்ளதாய் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .
தமிழகத்தில் :
=>நாயக்கர் / நாயுடு என சொல்லப்படும் இவர்கள் தமிழகத்திற்கு வந்த கதை விந்தை மிக்கது .
=> கி.பி. 1000-1002 வருடங்களில் இசுலாமியர்களின் ஆட்சி இந்தியா முழுவதையும் சீரழித்து கொண்டு இருந்தது .அப்போது கம்பள நாடு என சொல்லப்படும் ( தற்போதைய ஆந்திரா , கர்நாடக எல்லையில் உள்ள ஹம்பி எனும் நகரம் ) அக்காலகட்டத்தில் இது மிக பெரிய நகரம் . வாணிகம் ,நாகரிகம் , அரசியல் ,கல்வி என்று அனைத்திலும் முன்னேறிய நாடு கம்பள நாடு .அதை அக்காலத்தில் பலிஜா/கவரா/வடுகர்/கம்பளம் ( அனைத்தும் ஒன்றே ) இனத்தவர்கள் ஆண்டு வந்தனர் . கம்பள நாட்டில் இருந்த நாகரிக மக்களே தற்போதைய நாயக்கர் / நாயுடு மக்கள் .
=>இவர்கள் அழகில் சிறந்தவர்களாகவும் , ஆற்றல் , அறிவு முதலியவற்றில் தலையாயவர்களாக இருந்தனர் என்றும் , வீரத்தில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது என்றும் வரலாற்று பேராசிரியர் லிங்கட்டோன் அவர் நூலில் எழுதி உள்ளார் .
"வேலும் வாழும் தாங்கிய நாயக்கர் வீழ்ந்தது கிடையாது , வீரர்கள் நிறைந்த திராவிட நாட்டை வென்றவர் கிடையாது "
என்பது நாயகர்களின் புகழ்ச்சி பாடல் .
=> இப்படிப்பட்ட அழகுள்ள கம்பளத்து நாயக்கர்களை பெண் கேட்டான் இசுலாமிய அரசன் ஒருவன் . இதை சற்றும் எதிர் பார்க்காத கம்பள நாட்டு வீர மறவன் , நாயக்க அரசன் "பால்ராஜ்" மானமே இழந்து விட்டதாக எண்ணி மிகவும் வருந்தினார் .
=> போரினால் நாயுடு மக்களை ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி , பெண் கேட்டால் இவர்களின் மானம் போய் விடும் அதுவே நமக்கு போதும் என்று எண்ணி இசுலாமிய அரசன் இந்த செயலை செய்தான் என்று தெரிகிறது .
=> அப்போது பால்ராஜ் , இசுலாமிய அரசனால் நம் பெண்களுக்கு ஏதேனும் மானம் போய் விட்டால் அதற்கு பிறகு நாயக்கராய் இருப்பதே பலனில்லை என்று எண்ணி கம்பள நாட்டில் வாழும் நாயக்கர் / நாயுடு மக்களை தமிழகம் நோக்கி அனுப்பி வித்தார் ..
=> இம்மக்களே தற்போதைய "கம்பளத்தார்" ,தொட்டிய நாயக்கர் , சில்லவார், கொல்லவார், தொக்கலவார், முத்தரையர் , ராயர் , தொழுவ (துளுவ ) நாயக்கர் இன மக்கள்