Wednesday, 7 December 2011

ராமகிரி பாளையம்,அம்பாத்துறை பாளையம்

ராமகிரி பாளையம்

திண்டுக்கலில் இருந்து குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் சாலையில் அமைத்துள்ள இவ்வூர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது , ராமகிரியை சாமா நாயக்கர்கள் என்ற ராஜகம்பளம் குடியினர் 40 தலைமுறையாக ஆட்சி செய்து வந்துள்ளனர் , இவ்வூரில் ஒரு கோட்டை உருவாக்கி அங்கு தங்கள் இன மக்களையும் சுற்று பட்டிகளில் வாழும் பிற மக்களையும் நிர்வாகித்து வந்துள்ளனர் , இவர்களுக்கு இரும்பு முறுக்கி சாமா நாயக்கர் , தலைவெட்டி சாம நாயக்கர் என்ற பட்டங்களும் உண்டு . இவர்கள் பழனி கோவிலுக்கு பல சாத்திரங்களை கட்டி உள்ளனர் , இவர்கள் கலியான நரசிம்ம சாமி கோவிலை அமைத்ததோடு பல தானங்களையும் செய்து வந்துள்ளனர் , இவர்கள் பல ஊர்களை உருவாக்கி உள்ளனர் மேலும் பிற்காலத்தில் தமிழகதிற்கு குடியேறிய தங்கள் இனத்தவர்களான வடுகர்என்று சொல்லும் நாயக்கர் இன மக்களை தாங்கள் வாழும் பகுதியில் குடியமர்த்தினர் .
அம்பாத்துறை பாளையம்:
 கி.பி,1600 இல் விசுவநாத நாயக்கர் அவர்களால் நிறுவப்பட்ட 72 பாளையங்களில் அம்பாத்துறையும் ன்று , கி,பி.௧௮௦௧ முதல் இது ஜமினாக இருந்து வந்துள்ளது . பாளையம் மற்றும் ஜமின் நிர்வாகத்தை செய்தவர்கள் கம்பளத்து நாயக்கர் என்று சொல்லும் நாயக்கர் இனத்து மக்களே , ஜமின் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இன்றும் அப்படி உள்ளது , இங்குள்ள காளியம்மன் கோவில் , காட்டு மாரியம்மன் கோவில் போன்றவற்றை இவர்களே கட்டி உள்ளனர் . விருப்பாச்சி கோபால நாயக்கர்ஆங்கிலேயருக்கு எதிராக பாளயகார்களைக் கொண்டு கூட்டமைப்பு ஏற்படுத்தும் நிலையில் இந்த பாளையகார்களும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர் , மேலும் இவர்கள் மதுரை நாயக்கர் மன்னர்களிடம் நெருங்கிய மக்களாகவும் இருந்து வந்துள்ளனர் .

நத்தம் பாளையம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊர் , நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது , கி. பி. 10 ஆம் நூறாண்டில் பிராமணர்களும், வணிகர்களும் ( செட்டியார்களும் ) வாழ்ந்த பகுதியாக இது இருந்து வந்தது . கி.பி. 11 நூற்றாண்டில் ஆட்சி செய்த சுந்திர சோழ பாண்டியன் பிராமணர்களுக்கும் , வணிகர்களுக்கும் இப்பகுதியில் பல மானியங்களை தந்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது . நத்தம் பகுதியை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் லிங்க நாயக்கர் ஆட்சி செய்துள்ளார் , இவர் கட்டிய கோட்டை இன்றும் இடிந்த நிலையில் உள்ளது , பிறகு இப்பகுதிக்கு காவலுக்காக கள்ளர் மற்றும் வலயர்களை நியமித்துள்ளார் ,

[தொகு]செப்பேடுகள்

லிங்க நாயக்கரினை பற்றிய பல செப்பேடுகள் இந்த பகுதியில் கிடைத்துள்ளது , இவர் ராஜகம்பளம் என்ற நாயக்கர் பிரிவினை சேர்ந்தவர் , மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் அவர்களுக்கு தளவாயாக பணி புரிந்தவர் இவரை தொட்டியர் என்றும் ஒரு செப்பேட்டில் அழைக்கப் படுகிறார் , மதுரை ஆட்சியை தானே கைப்பற்றிவிட எண்ணி பல சூழ்சிகளை சொக்கநாத நாயக்கருக்கு எதிராக செய்தவர் என்றாலும் சொக்கநாதர் இவரின் சூழ்ச்சியை முறியடித்தார் . வடக்கில் இருந்து மதுரைக்கு வரும் வழியில் நத்தம் உள்ளதால் வடக்கில் இருந்து வரும் அனைத்து படை எடுப்புகளையும் சந்தித்து உள்ளது , இதனால் தங்கள் இனத்தவர்களோடு கள்ளர்கள் , வலையர்கள் , குடும்பர்கள் போன்றோரையும் காவலுக்காக நியமித்துள்ளார் . இங்கு வீரக்குடி வெள்ளாளர் என்று அழைக்கப்படும் பிள்ளைமார் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு பல மானியங்களை அளித்துள்ளார் , மேலும் குடும்பர்களுக்கு வாய்க்கால் மேற்பார்வை செய்ய பட்டயம் செய்துள்ளார் , இது இன்றும் இங்குள்ள குடும்பர் ( பள்ளர் ) இனத்தவர்களிடம் உள்ளது ,

[தொகு]கோவில்களை அமைத்தல்

கி.பி,1773 இல் சில்லிளிங்கய்ய நாயக்கர் இப்பகுதியை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் நிலையில் நத்தம் கயிலாசநாதர் கோவில் மண்டபங்களை அமைத்துள்ளார் . கி..பி.1791 இல் கல்வெட்டு ஒன்று சில்லப்பா நாயக்கர் பட்டியை சேர்ந்த முத்துலிங்க நாயக்கர் கோவில்பட்டி சாத்திரத்தை மானியமாக தந்ததை கூறுகிறது , லிங்க நாயக்கர் சுவர் ஓவியங்களை பல அமைத்துள்ளார் , லிங்க நாயக்கரின் உருவமும் இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது . தெலுங்கு எழுத்துகளால் இவரின் பெயர் இருந்துவந்துள்ளது என்பதில் இருந்து தெலுங்கு மொழியை எழுத தெரிந்தவர்களாக இங்குள்ள நாயக்கர்கள் அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர் . பலர் இப்பாளையத்தை ஆட்சி செய்தாலும் லிங்க நாயக்கரை பற்றிய செய்தி மட்டுமே அதிக அளவில் காணப்படுகிறது .

[தொகு]மேற்கோள்கள்

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
பகுப்பு: 
 

ஆயக்குடி பாளையம்

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கிழக்கில் இருக்கும் இவ்வூர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்து வந்தது . இப்பாளையத்தை ஆட்சி செய்தவர்கள்ராஜகம்பளம் என்று அழைக்கப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினை சேர்ந்தவர்கள் . இவர்கள் பல கிராமங்களை உருவாக்கி உள்ளனர் மேலும் தங்களை தீவிர வைனவர்களாய் காட்டிக்கொள்ள அகோபிள நாயக்கர் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் .

பொருளடக்கம்

  [மறை

[தொகு]பாளைய வரலாறு

இப்பாளையத்தின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆந்திர பகுதியில் அரசாட்சி செய்தவர்கள் . இசுலாமிய மன்னனான பாதுசா , நாயக்கர் வீட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதாகவும் . பெண் கொடுக்க மனம் இல்லாமல் நாயக்கர் வம்சாவளியினர் இடம்பெயர்ந்து ஆணைகொண்டி தேசத்தில் இருந்த விஜயநகரம்பகுதிக்கு செல்கின்றனர் . இதனை கேள்விப்பட்ட விஜயநகர மன்னர் அச்சுத தேவராயர் இந்த நாயக்கர்களை தம்முடைய படையில் சேர்த்து பல வெகுமதிகளை தந்துள்ளார் . இவர்கள் அகோபளம் என்ற ஊரில் இருந்து வந்தனர் . இவர்கள் பிறகு தெற்கு நோக்கி நகர்ந்து ஆயக்குடி பகுதியில் பலர் குடியேறினர் .

[தொகு]பெரிய ஒபயகொண்ட நாயக்கர்

முதலாவதாக இந்த பாளையத்தை உருவாக்கியவர் பெரிய ஒபய கொண்ட நாயக்கர் , இவர்கள் அகோபிளம் என்ற ஊரில் இருந்து வந்ததால் தங்களை அகோபளியர் என்று அழைத்துக்கொள்கின்றனர் . இவர் மகன் ஒபய கொண்டாம நாயக்கர் அகோபளிசுவரர் பெருமாள் கோவில் கட்டினார் , குட்டப்பள்ளம் , பெரும் பள்ளம் , கவுஞ்சி ஆகிய ஊர்களை உருவாகினர் . இவரது மகன் கொண்ட நாயக்கர் ஒபுளாபுரம் என்ற ஊரினை அமைத்து அங்கு கோட்டை ஒன்றையும் கட்டினார் , ஐந்தாவதாக பட்டம் ஏற்ற குமாரக் கொண்டாம நாயக்கர் புது ஆயக்குடி என்ற ஊரினை உருவாக்கி அங்கு விறுகுளம் என்ற குளத்தினை வெட்டி உள்ளார் ,

[தொகு]விவசாயத்தை பெருக்கினர்

6 வது பட்டக்காரர் முத்து கொண்டாம நாயக்கர் பெரிய குளம், நடுக்குளம் என்ற குளங்களை வெட்டி தண்ணீர் வருவதற்காக வருதாபடி மாற்றில் அணை ஒன்றை கட்டினார். 7 அவது பட்டக்காரர் பகடல் கொண்டாம நாயக்கர் மேலக்கோட்டை என்ற கோட்டையை அமைத்து ஊர்களை கோட்டையை சுற்றி அமைத்தார் . குமார நாயக்கர் குளம் ஒன்றையும் அமைத்தார் . 8 வது மன்னர் ஒபுள கொண்டாம நாயக்கர் எர்ரம் நாயக்கர் பட்டி , கஞ்ச நாயக்கர் பட்டி , உருகுவார் பட்டி , கரிசல்குளம் போன்ற ஊர்களை உருவாக்கினார் , 9 வது பட்டம் பெற்றவர் ஏற்ர கொண்டாம நாயக்கர் பொட்டம்பட்டி கிராமத்தையும் , ஆயக்குடி சேர்ந்த தேவ நாயக்கர் குளம் ஒன்றையும் அமைத்துள்ளார் , 10 வது பட்டதரான முத்தியாலு கொண்டாம நாயக்கர் கணக்கம் பட்டி கிராமத்தையும் , பட்டிகுளம், மாப்ளை நாயக்கர் குளம் முதலியவற்றை அமைத்துள்ளார் , 11 வது அரசர் கொண்டாம நாயக்கர் சித்த வலசை மற்றும் 18 கிராமங்களை உருவாக்கினார் . 12 வது குமார் கொண்டாம நாயக்கர் கோம்பை பட்டி ஊரினையும் , ஊமை குமார சேர்வைகார குளம் , செவ்வப்ப நாயக்கர் குளம் முதலியவற்றை உருவாக்கினார் , 13 வது பட்டர் கொண்டாம நாயக்கர் சேர்வை காடுகளை வெட்டி விளை நிலங்களாக பல ஊர்களை உருவாக்கினார் .

[தொகு]போரில் பங்கு கொள்ளல்

14 வது குமார கொண்டாம நாயக்கர் பாப்பன் குளம் வாய்கால் அமைத்ததோடு அக்ரகாரம் முதலியவற்றை அமைத்து பிராமணர்களை , பண்டாரங்களை குடி அமர்த்தி உள்ளார் . ஏழை பிராமணர்களுக்கு பல தானங்களை தந்துள்ளார் , பெருமாள் குளம் , பசளை நாயக்கர் பட்டி முதலிய கிராமங்களையும் உருவாக்கி உள்ளார் , இவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலம் . மைசூர் படைக்கு எதிராக நடைபெற்ற மூக்கருப்பு போரில் ஆயக்குடி பாளையமும் மதுரை நாயக்கர்களுக்கு உதவி உள்ளது , தஞ்சைக்கு எதிரான மதுரை நாயக்கர் போரிலும் பங்கு கொண்டுள்ளது , 15 வது கருத்த கொண்டாம நாயக்கர் வெப்பம் வலசை , செல்லப்பக் கவுண்டன் வலசை கிராமங்களை உருவாக்கி உள்ளார் , 16 வது பட்டதரசர் குமார கொண்டாம நாயக்கர் வேட்டை ஆடுவதில் வல்லவர் , 17 வது ஒபுள கொண்டாம நாயக்கர் இவரது காலத்தில் பல்லாயிரம் வீரர்களை விருப்பாச்சி கோபால நாயக்கர் படைக்கு தந்து உள்ளார் , கோபால நாயக்கரும் இவரும் உறவினர்கள் . ஆங்கிலேயரை எதிர்த்து வந்ததால் இப்பாளையம் அழிக்கப்பட்டது.

[தொகு]மேற்கோள்கள்

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
பகுப்பு

அம்மையநாயக்கனூர் பாளையம்


திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊர், நாயக்கர் ஆட்சிக்காலத்தில் சிறப்பு பெற்ற பாளையமாகவும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜமினாகவும் இருந்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ,

பொருளடக்கம்

 [மறை

[தொகு] பாளையம் உருவாகுதல்

பாளையத்தின் முன்னவரான பெஞ்சை மாகையா நாயக்கர் அவர்கள் கி.பி.1435 இல் விஜயநகர மன்னரிடம் போர் வீரர்களாக பணிபுரிந்தவர்கள் . விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் ஒன்றாக இருந்து வந்தது . இவர்கள் மதுரைக்கு காவல் என்ற உரிமையை பெற்றுவந்தனர் . இவர்கள் ராஜகம்பளம் என்ற நாயக்கர் இனத்தின் உட்பிரிவினர் . மதுரைக்கு காவலாக இவர்கள் இருந்ததால் பெஞ்சை மாகையா நாயக்கர் மற்றும் அவர் சார்த்த கம்பளத்து நாயக்கர்கள் மதுரைக்கு வடமேற்கில் சிறுமலை மற்றும் சுற்றில் உள்ள சில கிராமங்களில் குடியமர்ந்தனர் . இதில் இவர்கள் ஒரு கோட்டையை உருவாக்கி அம்மைய நாயக்கனூர் பாளையத்தை உருவாக்கினர் ,

[தொகு] ஊர்களை உருவாக்குதல்

வேடசந்தியூர் , வெள்ளோடு , பச்சைமலன் கோட்டை ம,சம்புதரைகோட்டை, ஒருதநாட்டு கிராமம் , பாளயக்கவுண்டன் பட்டி , எதுலூட்டு , சிதர்னத்தம். மேட்டுப்பட்டி , மட்டப்பாறை , பள்ளப்பட்டி , குள்ளல்குண்டு , குலசேகரன் பேட்டை , தனிசியம் முதலிய ஊர்களை நிர்வகித்தும் , உருவாகியும் வந்துள்ளனர் . 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மகன் அம்மைய லக்கம்மா நாயக்கர் பதவிஏற்றார் . இவரின் மனைவியின் பெயர் ஏற்ரம்மா . இவர்காலத்தில் கதிரீஸ்வருக்கு கோவில் அமைக்கப்பட்டது . இவருக்கு பின் இவரது மகன் வள்ளால மக்கைய நாயக்கர் மற்றும் அவரின் துணைவியார் காமுலம்மாள் ஒருத்தநாட்டு கிராமத்தில் குருநாதசாமி கோவில் அமைத்துள்ளார் , சந்தையூர் கிராமத்தில் கதிலி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு மண்டபம் கட்டி உள்ளார் ,

[தொகு] கள்ளர்களை அடக்குதல்

அம்மைய நாயக்கனூருக்கு பக்கத்தில் இருந்த கள்ளர்கள் கர்நாடக மன்னரின் கால்நடைகளை திருடிச்சென்று விட்டனர் . இதனை அறிந்த வள்ளால மாகைய நாயக்கர் மற்றும் சில சேர்வைகாரர்களை அழைத்து கள்ளர்களை அடக்கி அவர்களிடம் இருந்த கால்நடைகளை மீட்டு கர்நாடக மன்னரிடம் தந்து உள்ளார் , இதனால் மனம் மகிழ்ந்த அவர் வீர வள்ளால மாக்கையா நாயக்கர் என்ற பட்டத்தினை நாயக்கருக்கு தருகிறார் . இவர் கல்லூத்து யோவார்பட்டி , பேதகாளிங்கம்மா நாயக்கர் பட்டி , குய்யம்மா நாயக்கனூர் போன்ற கிராமங்களை உருவாக்கி உள்ளார் . மதுரையில் உள்ள கூடல் அழகுப்பெருமாள் கோவிலில் நடைபெறும் தேரோட்டத்தை இவரே ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதால் இன்றும் இவர் வாரிசுதாரர்களுக்கு முதல் மரியாதையும் , இவர்கள் தேங்காய் தொட்டவுடன் தான் வடம் இழுப்பார் மேலும் இவர்களுக்கு பரிவட்டமும் கட்டப்படுகின்றன .

[தொகு] கோவில்களை அமைத்தல்

இவருக்கு அடுத்து இவர் மகன் கொந்தி பொம்ம நாயக்கர் அவரின் மனைவி வீரமுத்தம்மா இவர்களுக்கு பொன்னையா நாயக்கர் , காமைய நாயக்கர் என்ற மகன்கள் இருந்தனர் , இவரது காலத்தில் குருவி துறை சித்திரத்து வல்லவர் தேர் உருவாக்கப்பட்டுள்ளது . இவரது காலத்தில் போயர் என்று சொல்லப்படும் ஒட்டர்கள் அதிக அளவில் இங்கு குடியமர்ந்தனர் மேலும் அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் உரிமையும் கிடைத்துள்ளது . இதற்கு பின் பெரியமுதல்ல நாயக்கர் கதிரி நரசிங்கப்பெருமாளுக்கு பல விலை உயர்ந்த பொருட்களை தந்துள்ளார் , சந்தையூர் பகுதியில் கம்பளதார்களின் குல தெய்வமான கன்னிமார் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது . குருநாதசாமி கோவிலுக்கும் பல தானங்களை தந்துள்ளார் . குழந்தைவேலு நாயக்கர் என்ற 16 வது பட்டதுக்காரர் குலசேகரன் கோட்டையில் மலை மேல் பொன்னும் பெருமாள் கோவிலுக்கு கலசக்கம்பம் மற்றும் தானங்கள் தந்துள்ளார் , பழனி தலத்தில் முன் மண்டபமும் கட்டி உள்ளார் .

[தொகு] கதலி நரசிங்கப் பெருமாள் கோவில்

கோவிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் உள்ளனர். பெருமாள் தேவியர் இருவருடன் நிற்கிறார். இங்குச் சிவன் பெயர் கதலீஸ்வரர். பெருமாள் பெயர் கதிர் நரசிங்கப் பெருமாள்.கோவிலின் பெயர் கதலி நரசிங்கப் பெருமாள் கோவில். தமிழ்நாட்டில் அரியும் அரனும் ஒரே கருவையில் அமர்ந்திருக்கும் கோவில் இது ஒன்றுதான்.இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவிலை அமைத்தது இந்த பாளயக்கார்களே.

[தொகு] அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர்

சுமார் 400 வருடங்களுக்கு முன்பு பாளையகார் காமைய சாமி நாயக்கர் கனவில் ஆஞ்சிநேயர் தோன்றி வைகை ஆற்றில் தான் சுயம்புவாக உள்ளதாகவும் கோவில் அமைத்து வழிபடவும் சொல்ல காமைய சாமி நாயக்கரும் கோவில் அமைத்து வீர ஆஞ்சிநேயர் என்று பெயர் சூடி வழிபட்டு வந்தார் , இம்மாவட்டத்தில் உள்ள பழமையான ஆஞ்சிநேயர் கோவில் எனபது சிறப்பு , மேலும் இந்த பாளையதினை ஆட்சி செய்தவர்கள் பல கோவில்கள், ஊர்களை அமைத்துள்ளனர் . மேலும் பல்வேறு சமுக மக்களையும் தாங்கள் அமைத்த ஊர்களில் குடியமர்த்தினர் .

[தொகு] மேற்கோள்கள்

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
  • [[1]]
  • [[2]]

திருமலை போடி நாயக்கர்

ஆந்திரம் மாநிலத்தில் இருந்து பதினோராம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்த ராஜகம்பளம் மக்கள் மேற்கு மற்றும் கொங்கு பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர் . இவ்வாறாக குடிபெயர்ந்த ஒரு கூட்டத்தினர் தான் போடிநாயக்கனூர் பகுதியை ஆட்சி செய்த வம்சாவளியினர் .இவர்கள் வேகிளியார் சில்லவார் என்னும் உட்பிரிவைனை கொண்ட வம்சாவளியினர் . [1].

பொருளடக்கம்

 [மறை

[தொகு] கேரளா வர்மா

அக்காலத்தில் இப்பகுதி கேரளா வர்மா என்பவற்றின் கட்டுபாட்டில் இருந்தது , ராஜகம்பளம் மக்கள் இங்கு வந்து இவற்றை வென்று தங்களது பகுதிகளாக்கிக் கொண்டனர் . இங்கு இவர்கள் தனியாக சுயாட்சி செய்து வந்துள்ளனர் . சக்க நாயக்கர் என்பவர் இங்கு சிறு ஆட்சியினை செய்து வந்துள்ளார் . பாண்டியர்களிடம் நன்மதிப்பு பெற்று வந்தனர் .

[தொகு] திருமலை போடி நாயக்கர்

முத்து முள்ளக்கான் என்பவன் ராயரின் எல்லைகளுக்குள் மிகுந்த படைகளுடன் செல்லத் திட்டமிட்டு வருகையில் அவனுக்கு எதிராக நின்று திருமலை நாயக்கரை காத்ததால் இவருக்கு மன்னர் திருமலை என்ற பட்டத்தினை தருகின்றார் . இவருடைய குடும்பத்தினர் திருமலை என்ற பட்டத்தினை தங்களது முன்னால் சூடிகொள்கின்றனர்.

[தொகு] முதல் பாளையம்

அரியநாத முதலியார் மதுரை பாளையங்களை பிரிக்க திட்டம் இட்டபொழுது முதல் பாளையமாக பிரிக்கப்பட்ட பகுதி இவர்களுடையது தான் . திருமஞ்சனம் காடு என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பிறகு இவர்களின் குடும்ப பெயரான போடி என்பதை இனைத்து போடிநாயக்கனூர் என்று பெயர் மாற்றம் செய்தனர் .

[தொகு] திருமலை பங்காரு முத்து நாயக்கர்

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையம் என்ற முறை கொண்டு வந்த பின்னர் முதல் முதலாக பொறுப்பேற்றவர் இவரே . இவர் பெரியகுளம் பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் கட்டியதோடு மண்டபபடியும் அளித்துள்ளார். இவர் இக்கோவிலுக்கு தேர் , மற்றும் பிரமோற்சவம் செய்ய பல பொருட்களை வழங்கி உள்ளார் . பல நந்தவனங்களை அமைத்துள்ளார் . இவர் புகழ்பெற்ற சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் அமைத்துள்ளார் . இவருக்கு பிறகு பொறுப்பேற்ற திருமலை போடி நாயக்கர் , ஜக்கன்ன நாயக்கர் , ராஜு நாயக்கர் பொறுப்பேற்றனர். இவர் குலசேகர தம்பிரான் என்ற மன்னனை வென்றுள்ளார் .[2]

[தொகு] கண்கொடுத்த அய்யன்

போடிநாயக்கனூர் மன்னர்கள் ஏனைய ராஜகம்பளம் மக்களை போலவே கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள் . மாந்தரிகம் போன்றவற்றிலும் திறமையானவர்கள் . இவர்களின் குல தெய்வம் ஜக்கம்மா தேவி . ஒரு நாள் வேளாளர் குலத்தில் பிறந்த ஒரு பெண் கண்பார்வை இழந்தததால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனிடம் வேண்டுகிறார் . அன்று இரவு அப்பெண்ணின் கனவில் தோன்றிய அம்மன் போடிநாயக்கனூர் பகுதியை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் ராஜு நாயக்கர் என்பவரிடம் சென்று கண்பார்வை வேண்டும் என்று வேண்டினால் உன் பார்வை கிட்டும் என்று சொல்கிறார் . அப்பெண்ணும் அம்மன் சொல்வதை செய்ய அவருக்கு கண்பார்வை கிட்டுகிறது . அன்றிலிருந்து கண் கொடுத்த ராஜு நாயக்கர் அய்யன் என்று அழைக்கபட்டார் . மதுரை நாயக்கர்கள் இவரிடம் மிகுந்த மரியாதை கொண்டு இருந்தனர் . இவர் திருமலை நாயக்கருக்கு நெருக்கமான நண்பர் .

[தொகு] காமராஜ பாண்டிய நாயக்கர்

ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட பிறகு முதல் முதலாக சட்டப்பேரவை கூடத்தில் தமிழில் பேசி தனது தமிழ் பற்றினை வெளிப்படுத்தினார் . ஆங்கிலம் இவருக்கு தெரிந்திருந்த நிலையிலும் இவர் தமிழில் பேசினார் . இவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறிய குற்றங்கள் கூட நடைபெறவில்லை என்று ஆங்கிலேய கலக்டர் ரோஸ் பீட்டர் என்பவர் தனது நூலில் பதிந்துள்ளார் . இவர் வேட்டை ஆடுவதில் வல்லவர் . திருமலை போடி காமராசு பாண்டிய நாயக்கர் என்னும் வாரிசுதாரர் தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சத்திரம் , சாவடிகளை அமைத்துள்ளார் . இவர் பாதசாரிகளுக்கு விடுதிகள் அமைத்துள்ளார் . இவர் விவசாயத்திற்கு முன்னுரிமை தந்துள்ளார் . இவர் வெட்டிய கம்மாய் இன்றும் காமராசு பூபால சமுத்திர கம்மாய் என்று அழைக்கபடுகிறது . மரம் நடுதல் , காடுகளை பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினார் .

[தொகு] ஸ்ரீ காமுலு அம்மாள்

ஸ்ரீ காமுலு அம்மாள் கண்டமனூர் ஜமீனில் பிறந்து போடிநாயக்கனூர் பகுதிக்கு மணமகளாக வந்தவர். இவரின் மகளை சாப்டூர் ஜமீன்ந்தாருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர் போடிநாயக்கனூர் மற்றும் சுற்று புற மக்களின் நலனுக்காக மருத்துவமனை அமைத்துள்ளார். இவர் வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் , விக்னேஸ்வர கோவில் முதலியவற்றை அமைத்துள்ளார்; பல சத்திரங்களை கட்டயுள்ளார். கல்யாண மகால் அமைத்ததோடு விக்டோரியா மெமோரியல் பள்ளிக்கு அடிக்கல் நாட்டி பொருளுதவி செய்துள்ளார்.[3]

[தொகு] மேற்கோள்கள்

  1. http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false
  2. http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false
  3. http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false

விருப்பாட்சி பாளையம்

http://tawp.in/r/2vcm

பழனி [திண்டுக்கல் ]] சாலையில் சத்திரபட்டிக்கு மேற்கில் மூன்று கல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது . சுதரபாண்டியனின் கல்வெட்டில் குறிப்பிட்ட திருபாக்கியம் என்ற ஊரே இந்த விருப்பாட்சி . நாயக்கர் ஆட்சிக்காலத்தில் வருமானம் தரக்கூடிய ஜமினாக இருந்துவந்துள்ளது .

பொருளடக்கம்

 [மறை

[தொகு] திருமலை சின்னப்பா நாயக்கர்

இப்பாளையத்தை அமைத்தவர்கள் ராஜகம்பளம் என்று சொல்லப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினர் . இவர்கள் தங்களை தொட்டிய நாயக்கர்கள் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் . இவர்கள் விஜயநகர் மன்னரிடம் போர் வீரர்களாக பணியாற்றியவர்கள் . அடைப்பம் என்ற உரிமையையும் பெற்றவர்கள் , அடைப்பம் என்பது உயர் ஜாதியினருக்கு மட்டும் கிடைக்கும் உரிமை . கி.பி,1381 இல் தில்லி பாதுசாவின் சார்பாக பாலு சாயிபு என்பவர் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்துவர விஜயநகர பேரரசின் சார்பாக விருப்பாட்சி பாளையக்காரரின் முன்னோரான கம்பளத்தார்கள் மேலப்பட்டி சின்னப்பா நாயக்கர் படைநடத்தி பாலுசாயுபுவை ( இசுலாமியனை ) வெற்றிக்கண்டார் என்பதால் ராயர் மிகவும் மகிழ்ந்து சின்னப்பா நாயக்கருக்கு பல வெகுமதிகளை அளித்துள்ளார் . அத்துடன் மேலப்பட்டி சின்னப்பா நாயக்கரின் வம்சா வழியினர் தங்கள் பெயருக்கு முன் ராயரின் பெயரான திருமலை என்பதை பயன்படுத்திக்கொள்ள அனுமதியும் அளித்துள்ளார் என்பதால் விருப்பாட்சி பாளையத்தில் வரும் அனைவரும் தங்கள் பெயருக்கு முன் திருமலை என்பதை போடும் வழக்கம் கொண்டு இருந்தனர் .

[தொகு] தமிழகம் வருதல்

இசுலாமிய மன்னன் ஒருவன் இவர்கள் இன பெண்ணை திருமணம் செய்யக்கேட்டதாகவும் அதனால் தெற்கு நோக்கி வந்தனர் என்று கூறுகின்றனர் . இவர்கள் தெற்கு நோக்கி சின்னப்பா நாயக்கர் தனது இனத்தாருடன் வந்து உருவாக்கிய ஊர் தற்போது உள்ள குத்துளுப்பை என்பது .

[தொகு] பாளையகார்களின் வரலாறு

இவருடைய(சின்னப்பா நாயக்கர் ) தம்பி அப்பண்ண நாயக்கர் குத்துளுப்பைக்கு தெற்காக காடுவெட்டி வீடுகள் அமைத்து கொத்தப்பள்ளி தாதமபேட்டை என்ற ஊரை அமைத்து கோட்டை கட்டினார் . இவருடைய மற்றொரு தம்பி எர்ரன்ன நாயக்கர் குதுளுப்பைக்கு கிழக்காக ரெண்கமலைக்கு பக்கத்தில் இடையகோட்டை என்ற ஊரை உருவாக்கினர். தனது தம்பிகளின் இருப்பிடத்துக்கு மேற்காக ஒரு கோட்டையை அமைத்து பெரிய கோட்டை என்று பெயர் சூடினார் . இங்கு தனது குலதெய்வமான லேக்குவம்மாவுககும், கதிர நாதருக்கும் கோவில் கட்டி பூஜை செய்துவந்துள்ளார் . இன்றும் இவர்களின் வம்சாவளியினர் வழிபட்டு வருகின்றனர் . இவர் மேலும் வராககிரி மலை சாரலின் வீடுகள் அமைத்து பெருமாள் குளம் அமைத்து நீல மலை அழகருக்கும் , விருப்பாட்சி இசுவரனுக்கும் கோவில் அமைத்து விருப்பாட்சி என்ற பட்டணத்தை உருவாக்கினார் . இப்பகுதிக்கு கிழக்கில் கலக்கரப்பன் குன்றில் குழந்தை வேலப்பர் கோவிலும் , குழந்தை வேலர் மலையில் குழந்தை வேலர் கோவிலும் உருவாக்கினார் .

[தொகு] பல ஊர்களை உருவாக்குதல்

மேலும் தனது சொந்தகாரர்களை தனி தனியே ஊர்களை அமைத்து குடிபெற செய்தார் , சிக்கம்மா நாயக்கரின் பெயரால் சிக்கம்ம நாயக்கர் பட்டி என்றும் , கள்ளமந்த நாயக்கர் என்பவர் கள்ளிமந்தயம் என்றும் , கரியப்பா நாயக்கர் என்பவர் கரியாம்பட்டி என்ற ஊரையும் , புலியப்பா நாயக்கர் என்பவர் புலியூர் நத்தம் என்றதையும் , குறி சின்னம்மா நாயக்கர் கீரனூர் என்ற ஊரையும் , கொத்த வேலப்ப நாயக்கர் என்பவர் கொத்தயம் என்ற ஊரையும் , மஞ்ச நாயக்கர் என்பவர் மஞ்ச நாயக்கர் பட்டி , சிந்தலவாட நாயக்கர் என்பவர் சிந்தலவாடப்பட்டி , போடப்பா நாயக்கர் என்பவர் போடுவார் பட்டி என்பதையும் , பொருலாண்டி நாயக்கர் என்பவர் பொருளா நாயக்கர் பட்டி என்பதையும் , வேலப்ப நாயக்கர் என்பவர் குருமாபட்டி என்ற கிராமங்களையும் உருவாக்கியதாக பாளையப்பட்டு வம்சாவளி கூறுகிறது .

[தொகு] கதிர திருமலை சின்னப்பா நாயக்கர்

இவரது மகன் கதிர திருமலை சின்னப்பா நாயக்கர் மதுரை விசுவநாத நாயக்கர் அவர்களின் சிறப்பு நண்பராக இருந்தவர் , மேலும் இது சிறப்பு பாளையமாகவும் இருந்து வந்துள்ளது , அவரின் மகன் திருமலை குப்பண்ணா நாயக்கர் பெரிய மலையில் பெரியூர் என்ற ஊரை உருவாக்கினார் , அதில் மங்களநாத சாமி கோவில் அமைத்துள்ளார் . இதற்கு மேற்கில் பாச்சலூர் என்ற ஊரையும் , வடகாடு , கண்ணனூர் , வென்னமலை என்ற கிராமங்களை உருவாக்கி அதில் பழங்குடியினரை குடியமர்த்தி பழங்கள் , காய்கள் சாகுபடி செய்ய உத்தரவு இட்டுள்ளார் . இவருக்கு திருமலை பலபத்திர ராம சின்னப்பா நாயக்கர் பட்டக்காரர் என்றும் , ரெகுராம நாயக்கர் என்றும் இரண்டு மகன்கள் இருந்துவந்தனர் . முதலாவது மகன் பாளையத்தை ஆட்சி செய்ய , இளையவர் தானும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதால் ரெண்கமலைக்கு கிழக்காக கவுதமர் கோட்டை , குட்டம் , கல்வார்பட்டி, கூவனுத்து, புதுக்கோட்டை முதலிய கிராமங்களை உருவாக்கி அப்பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளார் , இவரது காலத்தில் நன்காஞ்சி ஆற்றில் அணை கட்டியதோடு வாய்க்காலும் வெட்டியுள்ளார் . இவர் சின்ன குளம் , பெரிய குளம் என்ற குளங்களையும் வெட்டி உள்ளார் . இவர் உம்பிளியரை ஒரு பகுதியில் குடி அமர்த்தி உம்பியார் பட்டி என்ற கிராமத்தை உருவாக்கினார் . கனககிரி குழந்தை வேலப்பருக்கு விக்ரகம் , ரதம் , தேரோட்ட நிகழ்வையும் செய்துள்ளார் .

[தொகு] பல இனத்து மக்களையும் குடியேற்றல்

திருமலை எர தம்ம சின்னப்பா நாயக்கர் காலத்தில் சடையான் குளம் , சடையன் அணை ஒன்றையும் ஏற்படுத்தி உள்ளார் , இக்குளத்திற்கு பின்னால் அழகு நாச்சியம்மா கோவில் , சிவன் கோவில் போன்றவற்றை அமைத்து அதில் பிராமணர் , இல்லத்து பிள்ளைமார் , பண்டாரம் போன்ற இனத்தோரை கோவில் நிர்வாகம் செய்ய கோவிலுக்கு சுற்றி குடியமர்த்தினார் . இவருக்கு பின் திருமலை வராககிரி சின்னப்பா நாயக்கர் காலத்தில் தாசரி நாயக்கர் என்பவரின் பெயரால் தாசரி பட்டி , புதுகோட்டை என்ற கிராமமும் , லக்கம்மா நாயக்கர் பெயரால் லக்கன்ன கோட்டை என்ற கிராமமும் , அதப்ப நாயக்கர் என்பவரின் பெயரால் அதிக்கோட்டை என்ற கிராமமும் , கொல்லம்மா நாயக்கர் என்பவர் கொல்லப்பட்டி , சின்னவேலப்பா நாயக்கர் சின்னவேலம்பட்டி , காளாஞ்சி நாயக்கர் காளாஞ்சி பட்டியையும் , அன்னம்மா நாயக்கர் அன்னம்மா நாயக்கர் என்ற ஊரினையும் , காபிலிய நாயக்கர் என்பவர் காபிலிய பட்டி , அப்பள்ள நாயக்கர் என்பவர் அப்பிளிகை , வீரப்ப நாயக்கர் என்பவர் வீரலப்பட்டி என்ற கிராமங்களை உருவாக்கி வந்துள்ளனர் ,. மேலும் தங்களுக்கு என்று பல இனத்து மக்களையும் இங்கு குடி அமர்த்தினர் , அக்கால கட்டத்தில் மேற்கு தமிழகம் பெரும்பாலும் ஊர்கள் இல்லாமல் காடுகளாக இருந்து வந்துள்ளன . இவ்வாறான குடியேறியவர்கள் பல கிராமங்களை உருவாக்கி அங்கு தங்களை குடி அமர்திக்கொண்டனர் .

[தொகு] விவசாயத்தை பெருக்கினார்

இவருடைய மகன் நயினாத்த திருமலை சின்னப்பா நாயக்கர் வைகாணி , மண்டவாடி , தங்கச்சி அம்மாபட்டி கிராமங்களை உருவாக்கி உள்ளனர் . இவருக்கு பாதை காவலர் என்ற பட்டமும் மதுரை மன்னர் முத்து வீரப்ப நாயக்கர் அவர்களால் வழங்கப்பட்டது . இவருடைய மகன் திருமலை குப்பள்ள சின்னப்பா நாயக்கர் நல்லதங்காள் ஓடை ஆற்றில் அணையை கட்டி வாய்கால் வெட்டி உள்ளார் , இவர் காலத்தில் கருங்குளம் , சிந்தல்வாடான் பட்டியில் உள்ள கவுண்டன் குளம் ( காபிலியர் குளம் ) , மஞ்சனாயக்கன் பட்டியில் செங்குளம் , பொடுவாற்பட்டியில் பெரிய குளம் ஆகிய பல குளங்களை வெட்டி நீர் பாசனத்துக்கு , விவசாயத்துக்கு பயன் பெயர் செய்துள்ளனர் .

[தொகு] மதுரையும் விருப்பட்சியும்

இவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி செய்து வந்துள்ளார் . மதுரை நாயக்கர்களுக்கும் மைசூருக்கும் நடந்த போரில் விருப்பாட்சி பாளையமும் பங்கு பெற்றது , அதே போல சேதுபதி மன்னரிடம் மதுரை நாயக்கர் போர் செய்த போதும் விருப்பாட்சி மதுரைக்கே சாதகமாக இருந்தது . இவரது மகன் திருமலை தாசரி சின்னப்பா நாயக்கர் கொத்தயம் கிராமத்தில் வேப்பங்குளம் , பொருலூரில் சின்னக்குளம் போன்றவற்றை வெட்டியுள்ளார் . இதற்கு பின் பட்டமேற்ற திருமலை பாபன்ன சின்னப்பா நாயக்கர் மதுரையில் சொக்கநாத நாயக்கர் மன்னராக இருந்தார் , அப்பொழுது தஞ்சை மற்றும் மதுரை நாயக்கர்களுக்கு போர் ஏற்பட மதுரைக்கு ஆதரவாக விருபாட்சி இருந்தது , இவரது மகன் திருமலை பாபன்ன சின்னப்பா நாயக்கர் குமாரர் விருப்பாட்சியில் கதிரனார் சிங்கப்பெருமாள் கோவில் , சிவன் கோவில் கட்டினார் , மேலும் பிராமணர் , பண்டாரங்களை குடி அமர்த்தினர் , இவருக்கு பின் திருமலை முத்துவேல் சின்னப்பா நாயக்கர் காலத்தில் பெரியக்கோட்டை கோவிலுக்கு ரத்தமும் , விக்ரகங்களும் செய்துள்ளார் , மேலும் ஏழை பிராமணர் , பண்டாரம் போன்றோர்களுக்கு மானியமாக பல நிலங்களை தந்துள்ளார் ,

[தொகு] மைசூர் கட்டுப்பாடு

இதன் பின் திருமலை வேங்கட சின்னப்பா நாயக்கர் நீலமலை அழகிரி கோவில் , மேலும் அங்கு தனது முன்னோர்களின் சிலைகள் முதலியவற்றை செய்தார் , ஏனைய ராஜகம்பளம் இனதோர்களை போலவே வேட்டை ஆடுவதில் ஆர்வம் கொண்டவர் , இவருக்கு பின் இவர் மகன் எதிராமானஜகிரி தமிழ் பற்று கொண்டவர் புலவர்கள் பலரை ஆதரித்துள்ளார் , இவரது பாட்டியான நல்லிகாமு வேங்கிமளைக்கு படிகள் அமைத்தும் , முத்து சமுத்திரம் என்ற பெயரில் ஒரு குளமும் வெட்டியுள்ளார் , அடுத்த பாளையக்காரர் வராககிரி சின்னப்பா நாயக்கர் காவேரியம்மா பட்டி , கரட்டுப்பட்டி , ரெட்டியாம்பட்டி ஊர்களை அமைத்து குளங்களை வெட்டி உள்ளார் , இதற்க்கு அடுத்து திருமலை தாசாரி சின்னப்பா நாயக்கர் காலத்தில் தான் மதுரை நாயக்கர் ஆட்சி முடிவு பெறுவதால் குழப்பங்களும் , சண்டைகளும் பாளையம் முழுவதும் இருந்தது , இதற்க்கு பின் இந்தபாளையம் மைசூர் கட்டுபாட்டில் வருகிறது . என்றாலும் வரி கட்ட மறுத்தே வந்துள்ளனர் , இவர்களின் வரி வாங்க மைசூர் மன்னர்கள் பல இடர்பாடுகள் செய்தனர் ,

[தொகு] விடுதலை போராட்டம்

இப்பாளையம் பிற்காலத்தில் பாளையக்கரர் கூட்டமைப்பு ஏற்படுத்தி ஆங்கிலேயருக்கு எதிராக போராடி மாண்ட பலரை தந்துள்ளது ,பார்க்கவும் :விருப்பாச்சி கோபால நாயக்கர்

Sunday, 27 November 2011

ராஜகம்பளத்து மக்கள் அணியும் காப்பு : தேவராட்டம் ஒரு சிறப்பு பார்வை


தற்போதைய செய்தி
ஜக்கம்மா தேவி என்பது ராஜகம்பளம் தொட்டிய நாயக்கர் சாதியினரால் வணங்கப்படும் குல தெய்வம். தொட்டிய நாயக்கர்களில் சிலர் குறி சொல்தல், கோடாங்கி சொல்தல், அருள் வாக்களித்தல், குடுகுடுப்பை சொல்தல், கைரேகை சோதிடம் பார்த்தல்,வேட்டை ஆடுதல் ,விவசாயம் செய்தல் மாந்திரீகம் செய்தல் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தேவி ஜக்கம்மாதான் முதல் தெய்வம். ஜக்கம்மா காளி தேவியின் அவதாரம் என்றும், இவர் போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா போன்ற வேறு சில பெயர்களாலும் இந்த மக்களால் அழைக்கப்படுகிறார்.

தேவி ஜக்கம்மா வரலாறு

கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆந்திராவில் இஸ்லாமியரின் படை எடுப்பால் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இதற்கு இஸ்லாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக கம்பள நாட்டை ஆண்டு வந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னர் இஸ்லாமியர்களிடம் இருந்து தங்கள் குல பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள தெற்கு நோக்கி தமிழகத்திற்கு செல்ல ஆணையிட, ஜக்கம்மா என்ற பெண் தலைமையில் கம்பளத்து சமுதாய மக்கள் சிலர் அங்கிருந்து தெற்கு நோக்கி தமிழகத்துக்கு வந்தனர்.
இப்படி வரும் வழியில் பல தடைகள் ஏற்பட்டதாகவும் , அதனை வீரம், மாந்தரிகம் போன்றவற்றால் கலைத்து அவர்களை ஜக்கம்மா காத்ததால் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இதனால் இவர் ராஜகம்பளம் சாதியினரால் குல தெய்வமாக வணங்கப்படுகின்றார். என்று இந்தஜாதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காப்பு இனத்தில் பிறந்த ஜக்கம்மாளுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்ததாகவும் , இந்தப் பிள்ளைகளின் வம்சம்தான் தற்போதைய ஒன்பது கம்பளத்து மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மாந்தரிகம்
ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை சோதிட நம்பிக்கையுடைய பலருக்கும் உண்டு. குடுகுடுப்பை, கைரேகை சோதிடம், மாந்தரிகம், கோடாங்கி பார்த்தல் போன்ற வேலைகள் ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்கப்படுகிறது.
இந்த ஜாதிமக்கள் சொல்லும் வாக்கு உண்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை முன்பு பலருக்கும் இருந்தது. எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள் எனப்படுபவர்கள். இவர்களும் கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களே.
ஜோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான் திருமண வைபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திருமணம் மட்டுமல்ல, இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.

கட்டபொம்மன்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சில மன்னர்களுள் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். இவர் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார். இவருடைய அரண்மனை அமைந்திருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைப் பகுதியில் ஜக்கம்மாவுக்கு கோவில் ஒன்றும் அமைத்திருந்தார். இவர் தினமும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதுடன் தன்னுடைய செயல்பாடுகளுக்கு இங்குதான் வேண்டிக் கொள்வார் என்பதும் ஒரு கும்மிப் பாடல் மூலம் தெரிகிறது .

கம்பளத்து மக்கள்

பொதுவாக தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம் சாதியினைச் சேர்ந்தவர்கள் ஜக்கம்மாவைக் குல தெய்வமாகக் கொண்டுள்ளதால் இவர்கள் சாதி விழாக்களில் ஜக்கம்மா வழிபாடும் ஒன்றாக உள்ளது.மாசி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது
திருவிழா
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் திங்கள் கிழமையில் ஜக்கம்மா உயிர் நீத்தார் என்ற நம்பிக்கையில் சித்திரை மாதத் திங்கள் கிழமைகளில் ஜக்கம்மாவுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பாஞ்சாலங்குறிச்சியிலிருக்கும் ஜக்கம்மா கோவிலில் கம்பளத்து சாதியினர் சிறப்பு வழிபாடுகளுடன் தேவராட்டம், சேர்வைஆட்டம், கும்மி போன்றவைகள் மூலம் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

ஜெக்கதேவியை எப்படி வழிபட வேண்டும்

தேவி ஜெக்கதேவிக்கு வேண்டுதல் சொல்லி இருந்தால் அந்த வேண்டுதலுக்கு “ அரக்கு மொக்கு “ என்று சொல்லி தான் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் அந்த மக்கள் .
.அப்படி நேர்த்தி கடன் இல்லை என்றால் “ சரத்து மொக்கு “ என்று சொல்லி வட்டமாக நின்று வணங்கி செல்வார்கள் .இந்த வழிபாடு கார்த்திகை மற்றும் மாசி மாத ஜக்கதேவி கோவிகளின் வழிபாடுகளில் காணலாம் .
ஆதி ஜெக்கு பெயர்வரக்காரணம்
உலகம் தோன்றும் போது அண்ட சராச்சரமும் இருண்ட பகுதியாக எவ்வித ஒளி ஒலியும் இல்லாமல் இருந்தது .அதனால் தான் ஆதி என்னும் பெண் தெய்வத்தை இரவுக்கு ஒப்பிடுகிறோம் .
அதன் பின் பலகோடி ஆண்டுகள் இருள் மயமாக இருந்து இருளின் மத்தியில் கண்ணுக்கு தெரியாத ஒரு மாய சக்தி அண்டத்தில் பல திசைகளிலும் பல கோணங்களில் அதன் சக்திதிக்கு ஏற்ப ஒரு மாய பொருளாக உருவாக்கி கொண்டு இருக்கும் போது அந்த அண்டங்களின் மத்தியில் ஒரு மென்மையான் ஒலி அ …அஅ…அஅஅ….. என்ற ஒலி தோன்றியவுடன் இருண்ட உருவம் இல்லாத பூமியின் ஆத்மா ஒளியின் மத்தியில் சிறிய சுடராக உருவான ஜோதியைத்தான்
ஆ + தீ =ஆதீ என்று ஆதி சக்தி
என்றும் ஆதி ஜெக்கு என்றும் நாம் அழைக்கின்றோம் .
ஆதி ஜெக்க தேவியின் அம்சத்தில் தோன்றிய துர்கைகள்
ஆதி ஜெக்க தேவியின் அம்சத்தில் தோன்றிய துர்கைகள் 9
அந்த தேவதைகளின் பெயர்கள் வருமாறு :
1. வன துர்க்கை – பிறவி பெருங்கடலை அளிப்பவள்
2.குளிகை துர்க்கை – திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்றவள்
3.ஜாத வேதா துர்க்கை – வாயுவுக்கு அருளியவள்
4.ஜீவளா துர்க்கை – பண்டா சுரனை வதம்புரிய அனல் பிரம்பாகி அரண் அமைத்தவள் .
5.சாந்தி துர்க்கை – தச்ச யாகத்தின் முடிவில் வெகுண்ட சிவனை சாந்தி படுத்தியவள் .
6.சபரி துர்க்கை – பார்த்தனுக்கு பாசுபதம் அளிக்க சென்ற சிவனுடன் வேட்டு வாசி வடிவில் சென்றவள் .
7.தீப துர்க்கை – குண்டலினி யோகிகளுக்கு ஒளியாய் நின்று உதவியவள் .
8.ஆசூரி துர்க்கை -அமுதம் தாங்கிய திருமாலுக்கு உதவியவள்
9.லவன துர்க்கை –லவணன் என்ற அசுரனை சத்ருக்கன் வென்று வர ராமர் வழிபட்டவர்கள்
தொம்மிதி பெத்தம்மாள்
ஆதி ஜெக்க தேவிக்கு 9 உடையப்பட்டவள் என்று தமிழிலும் ,தொம்மிதி பெத்தம்மாள் என்று தெலுங்கிலும் அழைக்கிறோம் .
தொம்முதி என்றால் 9 என்றும் பெத்தா என்றால் பெரியவள் என்றும் பொருள் .
ராஜகம்பளத்து மக்கள் அணியும் காப்பு

தற்போதைய செய்தி
ராஜகம்பள மக்கள் அணியும் இந்த காப்பு தெலுங்கில் (பந்தை ) என்று அழைக்கப்படுகிறது .இவர்கள் திருமணத்தின் போதும் ,திருவிழாக்களின் போதும் ,இவர்கள் இந்த காப்பை அணிகிறார்கள் .
தேவராட்டம் :
தற்போதைய செய்தி
ராஜகம்பள மக்களால் ஆடும் ஒரு கலை ஆட்டம் தேவராட்டம் .இவர்கள் தேவராட்டம் ஆடும் போது தலையில் ஒரு தலைப்பாகை அணிந்தும் ,வெள்ளை நிற உடை அணிந்தும் ,மேல் ஆடை அணியாமல் இந்த ஆட்டத்தை ஆடுகிறார்கள் .இதுவும் திருவிழாக்களில் அந்த மக்களால் சிறப்பாக ஆடபப்டும் ஒரு ஆட்டம் .இந்த ஆட்டத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆடுகிறார்கள் .

செஞ்சி - வேலூர் நாயக்கர்கள்

4.4
தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து நேரிட்ட பெருங்குழப்பத்தின்போது தமிழகத்தில் மதுரையிலும், தஞ்சையிலும், செஞ்சியிலும் விசயநகரப் பேரரசின் சார்பில் அரசு புரிந்துவந்த நாயக்கர்கள் தனித்தனியே தத்தம் நாட்டு மன்னர்களாக முடிசூட்டிக் கொண்டார்கள். ஆயினும், வேலூர் நாயக்கர்களும், மைசூர் உடையார்களும் தொடர்ந்து விசயநகரத்து மன்னரின் தலைமையை ஏற்று வந்தனர்.
4.4.1 செஞ்சி நாயக்கர்கள்
விசயநகரப் பேரரசின் கீழ் செஞ்சியானது படை பலத்திலும், அரசு ஆதிக்கத்திலும் உயர்ந்ததொரு நிலையைப் பெற்றிருந்தது. சிதம்பரத்தில் இரண்டாம் குலோத்துங்க சோழன் தில்லைக் கோயிலில் உள்ள கோவிந்தராசப் பெருமாளின் சிலையை அகற்றிவிட்ட பிறகு முதன்முதல் அங்கு மீண்டும் ஒரு சிலையை அப்பெருமாளுக்கு அமைத்துக் கொடுத்த பெருமை செஞ்சியின் தலைவன் கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவரையே சாரும். மேலும் சிதம்பரம் திருச்சித்திரக் கூடத்துக்கு இவர் பல பெரும் திருப்பணிகள் செய்தார். இவரது திருப்பணிகளைச் சிதம்பரம் தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக எதிர்த்தார்கள். எனினும் கிருஷ்ணப்ப நாயக்கரின் திருப்பணிகள் ஓயவில்லை. பல தீட்சிதர்கள் மகளிருடன் கோபுரத்தின் மேலேறிக் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதனாலும் கிருஷ்ணப்ப நாயக்கரின் உள்ளம் நெகிழவில்லை. அவர் வெகுண்டு தீட்சிதர்களின் மேல் துப்பாக்கியால் சுட்டார். இதில் பல தீட்சிதர்கள் குண்டடிபட்டு இறந்தனர். இதனால் இவர் துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் என்று அழைக்கப்பட்டார்.
வெள்ளாறு கடலுடன் கலக்கும் இடத்தில் கிருஷ்ணப்ப நாயக்கர் கிருஷ்ண பட்டினம் என்ற ஊர் ஒன்றை அமைத்து அதில் ஜெசூட் பாதிரியார்கள் என்று கூறப்படும் ஏசு சபையினர்களுக்கு மாதா கோயில்கள் கட்டிக்கொள்ள உரிமை வழங்கினார். அவ்வூர் இப்போது பறங்கிப்பேட்டை என்னும் பெயரில் விளங்கி வருகின்றது.
4.4.2 வேலூர் நாயக்கர்கள்
வேலூரில் சின்ன பொம்ம நாயக்கர் என்பவர் விசயநகர பேரரசின்கீழ் கி.பி.1582ஆம் ஆண்டு வரையில் அரசாண்டு வந்தார் என்பர். வேலூர்க் கோட்டையையும் அதனுள் இருக்கும் சலகண்டேசுவரர் கோயிலையும் கட்டியவர் இந்நாயக்கர்தான்.
மேலும் இவர் அப்பைய தீட்சிதர் என்ற புலவரின் புலமையைப் பாராட்டிக் கனகாபிடேகம் செய்தார்.

கட்டபொம்மன் கயத்தாறு







நாள் : 17.10.1799
இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
“விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.
இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.”
“மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்”.
- கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.
அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.
_______________________________________________
மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.
இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.
வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப், இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.
ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.
1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர், கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.
_______________________________________________
இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.
இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.
தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை ‘கொள்ளை’ என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.
தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.
இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.
இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன், ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.
பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணியபிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப்பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.
தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.
_______________________________________________
கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.
1799ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.
நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன். மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.
_______________________________________________
உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால், கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை இராமலிங்க முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.
முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.
தப்பிச் சென்றவர்களை கோலார்பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங் குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.
இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.
கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத்தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத் தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டை
கயத்தாறில் தன் மீது சுமத்தப்பட்ட ‘குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு “ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.
தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். “படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை” என்று அறிவித்தான் பானர்மேன்.
இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.
கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.
இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.