திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கிழக்கில் இருக்கும் இவ்வூர் நாயக்கர் ஆட்சிக்காலத் தில் பாளையமாக இருந்து வந்தது . இப்பாளையத்தை ஆட்சி செய்தவர்கள்ராஜகம்பளம் என்று
அழைக்கப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினை சேர்ந்தவர்கள் . இவர்கள் பல
கிராமங்களை உருவாக்கி உள்ளனர் மேலும் தங்களை தீவிர வைனவர்களாய்
காட்டிக்கொள்ள அகோபிள நாயக்கர் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் .
பகுப்பு:
பொருளடக்கம்[மறை] |
[தொகு]பாளைய வரலாறு
இப்பாளையத்தின்
வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆந்திர பகுதியில் அரசாட்சி செய்தவர்கள் .
இசுலாமிய மன்னனான பாதுசா , நாயக்கர் வீட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள
விரும்பியதாகவும் . பெண் கொடுக்க மனம் இல்லாமல் நாயக்கர் வம்சாவளியினர்
இடம்பெயர்ந்து ஆணைகொண்டி தேசத்தில் இருந்த விஜயநகரம்பகுதிக்கு
செல்கின்றனர் . இதனை கேள்விப்பட்ட விஜயநகர மன்னர் அச்சுத தேவராயர் இந்த
நாயக்கர்களை தம்முடைய படையில் சேர்த்து பல வெகுமதிகளை தந்துள்ளார் .
இவர்கள் அகோபளம் என்ற ஊரில் இருந்து வந்தனர் . இவர்கள் பிறகு தெற்கு
நோக்கி நகர்ந்து ஆயக்குடி பகுதியில் பலர் குடியேறினர் .
[தொகு]பெரிய ஒபயகொண்ட நாயக்கர்
முதலாவதாக
இந்த பாளையத்தை உருவாக்கியவர் பெரிய ஒபய கொண்ட நாயக்கர் , இவர்கள்
அகோபிளம் என்ற ஊரில் இருந்து வந்ததால் தங்களை அகோபளியர் என்று
அழைத்துக்கொள்கின்றனர் . இவர் மகன் ஒபய கொண்டாம நாயக்கர் அகோபளிசுவரர்
பெருமாள் கோவில் கட்டினார் , குட்டப்பள்ளம் , பெரும் பள்ளம் , கவுஞ்சி
ஆகிய ஊர்களை உருவாகினர் . இவரது மகன் கொண்ட நாயக்கர் ஒபுளாபுரம் என்ற
ஊரினை அமைத்து அங்கு கோட்டை ஒன்றையும் கட்டினார் , ஐந்தாவதாக பட்டம் ஏற்ற
குமாரக் கொண்டாம நாயக்கர் புது ஆயக்குடி என்ற ஊரினை உருவாக்கி அங்கு
விறுகுளம் என்ற குளத்தினை வெட்டி உள்ளார் ,
[தொகு]விவசாயத்தை பெருக்கினர்
6
வது பட்டக்காரர் முத்து கொண்டாம நாயக்கர் பெரிய குளம், நடுக்குளம் என்ற
குளங்களை வெட்டி தண்ணீர் வருவதற்காக வருதாபடி மாற்றில் அணை ஒன்றை
கட்டினார். 7 அவது பட்டக்காரர் பகடல் கொண்டாம நாயக்கர் மேலக்கோட்டை என்ற
கோட்டையை அமைத்து ஊர்களை கோட்டையை சுற்றி அமைத்தார் . குமார நாயக்கர்
குளம் ஒன்றையும் அமைத்தார் . 8 வது மன்னர் ஒபுள கொண்டாம நாயக்கர் எர்ரம்
நாயக்கர் பட்டி , கஞ்ச நாயக்கர் பட்டி , உருகுவார் பட்டி , கரிசல்குளம்
போன்ற ஊர்களை உருவாக்கினார் , 9 வது பட்டம் பெற்றவர் ஏற்ர கொண்டாம
நாயக்கர் பொட்டம்பட்டி கிராமத்தையும் , ஆயக்குடி சேர்ந்த தேவ நாயக்கர்
குளம் ஒன்றையும் அமைத்துள்ளார் , 10 வது பட்டதரான முத்தியாலு கொண்டாம
நாயக்கர் கணக்கம் பட்டி கிராமத்தையும் , பட்டிகுளம், மாப்ளை நாயக்கர்
குளம் முதலியவற்றை அமைத்துள்ளார் , 11 வது அரசர் கொண்டாம நாயக்கர் சித்த
வலசை மற்றும் 18 கிராமங்களை உருவாக்கினார் . 12 வது குமார் கொண்டாம
நாயக்கர் கோம்பை பட்டி ஊரினையும் , ஊமை குமார சேர்வைகார குளம் , செவ்வப்ப
நாயக்கர் குளம் முதலியவற்றை உருவாக்கினார் , 13 வது பட்டர் கொண்டாம
நாயக்கர் சேர்வை காடுகளை வெட்டி விளை நிலங்களாக பல ஊர்களை உருவாக்கினார் .
[தொகு]போரில் பங்கு கொள்ளல்
14
வது குமார கொண்டாம நாயக்கர் பாப்பன் குளம் வாய்கால் அமைத்ததோடு அக்ரகாரம்
முதலியவற்றை அமைத்து பிராமணர்களை , பண்டாரங்களை குடி அமர்த்தி உள்ளார் .
ஏழை பிராமணர்களுக்கு பல தானங்களை தந்துள்ளார் , பெருமாள் குளம் , பசளை
நாயக்கர் பட்டி முதலிய கிராமங்களையும் உருவாக்கி உள்ளார் , இவரது
காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலம் . மைசூர் படைக்கு
எதிராக நடைபெற்ற மூக்கருப்பு போரில் ஆயக்குடி பாளையமும் மதுரை
நாயக்கர்களுக்கு உதவி உள்ளது , தஞ்சைக்கு எதிரான மதுரை நாயக்கர் போரிலும்
பங்கு கொண்டுள்ளது , 15 வது கருத்த கொண்டாம நாயக்கர் வெப்பம் வலசை ,
செல்லப்பக் கவுண்டன் வலசை கிராமங்களை உருவாக்கி உள்ளார் , 16 வது
பட்டதரசர் குமார கொண்டாம நாயக்கர் வேட்டை ஆடுவதில் வல்லவர் , 17 வது ஒபுள
கொண்டாம நாயக்கர் இவரது காலத்தில் பல்லாயிரம் வீரர்களை விருப்பாச்சி கோபால நாயக்கர் படைக்கு தந்து உள்ளார் , கோபால நாயக்கரும் இவரும் உறவினர்கள் . ஆங்கிலேயரை எதிர்த்து வந்ததால் இப்பாளையம் அழிக்கப்பட்டது.
[தொகு]மேற்கோள்கள்
- திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
No comments:
Post a Comment