Wednesday, 22 May 2013

என்  இன்னிய  என்குல  மக்களுக்கு  வணக்கம் கல்வி  மற்றும் பொருளாதரத்தில்  நம் மக்கள் மிகவும் பின் தங்கிய நிலையில்  உள்ளனர்  இதற்கு  காரணம்  நாம்  என்ற ஒற்றுமை  இல்லாதனால் தான் ................................ பழமை பேசி  புதுமை  மறந்து விடுகிறோம் அந்த புதுமைகுஉள்ளும்  முழுமையாக புக முடியாமல் பழமையை மறந்து  விடுகிறோம்   நாம்  என்று  ஒன்று  பட்டால்  மட்டுமே   பழமையை மறக்காமல் புதுமையை  புகுத்த முடியும்.ஆதலால் நாம்  ஒன்றாக இணைவோம் காப்பு என்ற கம்பளதாரை கடவுளாலும்  கட்டுபடுத்த முடியாது கண்மூடி தனமாக இருபதை விட்டு நாம் அனைவரும் கட்டு கோப்பாக இருப்போம் அதனால் நாம்  அனைவரும் ஸ்ரீ கிருஷ்ண தேவராய சத்ரிய சேனை மூலமாக   ஒன்று இணைவோம் ...


நாடாண்ட  வம்சம்மடா எம் வம்சம்

இன்று நாதியற்று கெடக்குதடா நம் வம்சம்

சத்திரியன் என்று சரித்திரம் படைத்தோர்

இன்று சத்தமற்று கிடப்பதேனடா

வீடுகொரு  வேங்கையென  எழுந்துடுவோம்

வீரனவன்  நாயக்கன் என்று தெளிந்திடுவோம் ............... 

Saturday, 20 October 2012

நாயக்கன்


நாடாண்ட  வம்சம்மடா எம் வம்சம்

இன்று நாதியற்று கெடக்குதடா நம் வம்சம்

சத்திரியன் என்று சரித்திரம் படைத்தோர்

இன்று சத்தமற்று கிடப்பதேனடா

வீடுகொரு  வேங்கையென  எழுந்துடுவோம்

வீரனவன்  நாயக்கன் என்று தெளிந்திடுவோம் ...............

Sunday, 11 March 2012

விசயநகர் - நாயக்கர் காலம்

 விசயநகர் - நாயக்கர் காலம்
விசயநகரப் பேரரசர்கள் காலத்துச் செப்புத் திருமேனிகள் தமிழகக் கோயில்களில் கிடைக்கின்றன. நாகை மாவட்டம் திருக்கடவூரில் சிவபெருமான் கால சம்ஹாரம் செய்ததாகக் கதை ஒன்று சொல்லப்பட்டு வருகின்றது. இதற்கு ஏற்றாற் போல் விசய நகர ஆட்சிக் காலத்தில் பிரமாதமான கால சம்ஹார மூர்த்தியின் செப்புப்     படிமம் ஒன்று அமைக்கப்பட்டது. திருப்பதியில் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது தேவியரின் உயரமான படிமங்கள் இருப்பது போன்று காஞ்சி வரதராசப் பெருமாள் கோயிலில் அரசர், அரசியர் செப்புப் படிமங்கள் வணங்கிய     நிலையில் அமைக்கப் பட்டுள்ளன. நாயக்கர் காலத்தில் நடராசர் சிற்பங்கள் அமைக்கப் பட்டதோடு, அதற்காகப் பிரதானக் கோயிலுக்குள் தனிச்     சன்னதியும் அமைக்கப்பட்டது. வேலூர் என்ற இடத்தில் கி.பி.115இல் செய்விக்கப் பட்ட நடராசர் திருமேனி சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. திருவரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள சோமாஸ்கந்தர் திருமேனி இக்காலத்தில் செய்விக்கப் பட்டபோதும் இதில் சோழர் கலையின் வேலைப்பாடுகள் பின்பற்றப் பட்டன. இராமன்,     இலக்குவன், சீதை, அனுமன் செப்புத் திருமேனிகள் பல கோயில்களில் செய்து வைக்கப் பெற்றன. கிருஷ்ணரது     உருவங்கள் செய்விக்கப் பட்டன. பல கோயில்களில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகியோருக்குச் செப்புத்     திருவுருவங்கள் அமைக்கப்பட்டன. நாயக்கர் காலத்துக் காரைக்கால் அம்மையாரின் படிமம் ஒன்று கான்சாஸ் நகரத்தில் நெல்சன்- அட்கின்ஸ் கலைக்கூடத்தில் உள்ளது. நாகப்பட்டினத்தில் புத்தர் மற்றும் போதி சத்துவர் படிமங்கள் செய்விக்கப் பட்டன. நாயக்க மன்னர்களின் படிமங்களும் செய்யப்பட்டன. தஞ்சைக் கலைக் கூடத்தில் தஞ்சையை ஆண்ட விசய ராகவ நாயக்கரின் உருவச் சிலை உள்ளது.
 
சோமாஸ்கந்தர் திருமேனி

Wednesday, 7 December 2011

ராமகிரி பாளையம்,அம்பாத்துறை பாளையம்

ராமகிரி பாளையம்

திண்டுக்கலில் இருந்து குஜிலியம்பாறை வழியாக கரூர் செல்லும் சாலையில் அமைத்துள்ள இவ்வூர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது , ராமகிரியை சாமா நாயக்கர்கள் என்ற ராஜகம்பளம் குடியினர் 40 தலைமுறையாக ஆட்சி செய்து வந்துள்ளனர் , இவ்வூரில் ஒரு கோட்டை உருவாக்கி அங்கு தங்கள் இன மக்களையும் சுற்று பட்டிகளில் வாழும் பிற மக்களையும் நிர்வாகித்து வந்துள்ளனர் , இவர்களுக்கு இரும்பு முறுக்கி சாமா நாயக்கர் , தலைவெட்டி சாம நாயக்கர் என்ற பட்டங்களும் உண்டு . இவர்கள் பழனி கோவிலுக்கு பல சாத்திரங்களை கட்டி உள்ளனர் , இவர்கள் கலியான நரசிம்ம சாமி கோவிலை அமைத்ததோடு பல தானங்களையும் செய்து வந்துள்ளனர் , இவர்கள் பல ஊர்களை உருவாக்கி உள்ளனர் மேலும் பிற்காலத்தில் தமிழகதிற்கு குடியேறிய தங்கள் இனத்தவர்களான வடுகர்என்று சொல்லும் நாயக்கர் இன மக்களை தாங்கள் வாழும் பகுதியில் குடியமர்த்தினர் .
அம்பாத்துறை பாளையம்:
 கி.பி,1600 இல் விசுவநாத நாயக்கர் அவர்களால் நிறுவப்பட்ட 72 பாளையங்களில் அம்பாத்துறையும் ன்று , கி,பி.௧௮௦௧ முதல் இது ஜமினாக இருந்து வந்துள்ளது . பாளையம் மற்றும் ஜமின் நிர்வாகத்தை செய்தவர்கள் கம்பளத்து நாயக்கர் என்று சொல்லும் நாயக்கர் இனத்து மக்களே , ஜமின் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இன்றும் அப்படி உள்ளது , இங்குள்ள காளியம்மன் கோவில் , காட்டு மாரியம்மன் கோவில் போன்றவற்றை இவர்களே கட்டி உள்ளனர் . விருப்பாச்சி கோபால நாயக்கர்ஆங்கிலேயருக்கு எதிராக பாளயகார்களைக் கொண்டு கூட்டமைப்பு ஏற்படுத்தும் நிலையில் இந்த பாளையகார்களும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டனர் , மேலும் இவர்கள் மதுரை நாயக்கர் மன்னர்களிடம் நெருங்கிய மக்களாகவும் இருந்து வந்துள்ளனர் .

நத்தம் பாளையம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஊர் , நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்தது , கி. பி. 10 ஆம் நூறாண்டில் பிராமணர்களும், வணிகர்களும் ( செட்டியார்களும் ) வாழ்ந்த பகுதியாக இது இருந்து வந்தது . கி.பி. 11 நூற்றாண்டில் ஆட்சி செய்த சுந்திர சோழ பாண்டியன் பிராமணர்களுக்கும் , வணிகர்களுக்கும் இப்பகுதியில் பல மானியங்களை தந்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது . நத்தம் பகுதியை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் லிங்க நாயக்கர் ஆட்சி செய்துள்ளார் , இவர் கட்டிய கோட்டை இன்றும் இடிந்த நிலையில் உள்ளது , பிறகு இப்பகுதிக்கு காவலுக்காக கள்ளர் மற்றும் வலயர்களை நியமித்துள்ளார் ,

[தொகு]செப்பேடுகள்

லிங்க நாயக்கரினை பற்றிய பல செப்பேடுகள் இந்த பகுதியில் கிடைத்துள்ளது , இவர் ராஜகம்பளம் என்ற நாயக்கர் பிரிவினை சேர்ந்தவர் , மதுரை மன்னர் சொக்கநாத நாயக்கர் அவர்களுக்கு தளவாயாக பணி புரிந்தவர் இவரை தொட்டியர் என்றும் ஒரு செப்பேட்டில் அழைக்கப் படுகிறார் , மதுரை ஆட்சியை தானே கைப்பற்றிவிட எண்ணி பல சூழ்சிகளை சொக்கநாத நாயக்கருக்கு எதிராக செய்தவர் என்றாலும் சொக்கநாதர் இவரின் சூழ்ச்சியை முறியடித்தார் . வடக்கில் இருந்து மதுரைக்கு வரும் வழியில் நத்தம் உள்ளதால் வடக்கில் இருந்து வரும் அனைத்து படை எடுப்புகளையும் சந்தித்து உள்ளது , இதனால் தங்கள் இனத்தவர்களோடு கள்ளர்கள் , வலையர்கள் , குடும்பர்கள் போன்றோரையும் காவலுக்காக நியமித்துள்ளார் . இங்கு வீரக்குடி வெள்ளாளர் என்று அழைக்கப்படும் பிள்ளைமார் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு பல மானியங்களை அளித்துள்ளார் , மேலும் குடும்பர்களுக்கு வாய்க்கால் மேற்பார்வை செய்ய பட்டயம் செய்துள்ளார் , இது இன்றும் இங்குள்ள குடும்பர் ( பள்ளர் ) இனத்தவர்களிடம் உள்ளது ,

[தொகு]கோவில்களை அமைத்தல்

கி.பி,1773 இல் சில்லிளிங்கய்ய நாயக்கர் இப்பகுதியை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் நிலையில் நத்தம் கயிலாசநாதர் கோவில் மண்டபங்களை அமைத்துள்ளார் . கி..பி.1791 இல் கல்வெட்டு ஒன்று சில்லப்பா நாயக்கர் பட்டியை சேர்ந்த முத்துலிங்க நாயக்கர் கோவில்பட்டி சாத்திரத்தை மானியமாக தந்ததை கூறுகிறது , லிங்க நாயக்கர் சுவர் ஓவியங்களை பல அமைத்துள்ளார் , லிங்க நாயக்கரின் உருவமும் இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது . தெலுங்கு எழுத்துகளால் இவரின் பெயர் இருந்துவந்துள்ளது என்பதில் இருந்து தெலுங்கு மொழியை எழுத தெரிந்தவர்களாக இங்குள்ள நாயக்கர்கள் அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர் . பலர் இப்பாளையத்தை ஆட்சி செய்தாலும் லிங்க நாயக்கரை பற்றிய செய்தி மட்டுமே அதிக அளவில் காணப்படுகிறது .

[தொகு]மேற்கோள்கள்

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
பகுப்பு: 
 

ஆயக்குடி பாளையம்

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கிழக்கில் இருக்கும் இவ்வூர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்து வந்தது . இப்பாளையத்தை ஆட்சி செய்தவர்கள்ராஜகம்பளம் என்று அழைக்கப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினை சேர்ந்தவர்கள் . இவர்கள் பல கிராமங்களை உருவாக்கி உள்ளனர் மேலும் தங்களை தீவிர வைனவர்களாய் காட்டிக்கொள்ள அகோபிள நாயக்கர் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் .

பொருளடக்கம்

  [மறை

[தொகு]பாளைய வரலாறு

இப்பாளையத்தின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆந்திர பகுதியில் அரசாட்சி செய்தவர்கள் . இசுலாமிய மன்னனான பாதுசா , நாயக்கர் வீட்டு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதாகவும் . பெண் கொடுக்க மனம் இல்லாமல் நாயக்கர் வம்சாவளியினர் இடம்பெயர்ந்து ஆணைகொண்டி தேசத்தில் இருந்த விஜயநகரம்பகுதிக்கு செல்கின்றனர் . இதனை கேள்விப்பட்ட விஜயநகர மன்னர் அச்சுத தேவராயர் இந்த நாயக்கர்களை தம்முடைய படையில் சேர்த்து பல வெகுமதிகளை தந்துள்ளார் . இவர்கள் அகோபளம் என்ற ஊரில் இருந்து வந்தனர் . இவர்கள் பிறகு தெற்கு நோக்கி நகர்ந்து ஆயக்குடி பகுதியில் பலர் குடியேறினர் .

[தொகு]பெரிய ஒபயகொண்ட நாயக்கர்

முதலாவதாக இந்த பாளையத்தை உருவாக்கியவர் பெரிய ஒபய கொண்ட நாயக்கர் , இவர்கள் அகோபிளம் என்ற ஊரில் இருந்து வந்ததால் தங்களை அகோபளியர் என்று அழைத்துக்கொள்கின்றனர் . இவர் மகன் ஒபய கொண்டாம நாயக்கர் அகோபளிசுவரர் பெருமாள் கோவில் கட்டினார் , குட்டப்பள்ளம் , பெரும் பள்ளம் , கவுஞ்சி ஆகிய ஊர்களை உருவாகினர் . இவரது மகன் கொண்ட நாயக்கர் ஒபுளாபுரம் என்ற ஊரினை அமைத்து அங்கு கோட்டை ஒன்றையும் கட்டினார் , ஐந்தாவதாக பட்டம் ஏற்ற குமாரக் கொண்டாம நாயக்கர் புது ஆயக்குடி என்ற ஊரினை உருவாக்கி அங்கு விறுகுளம் என்ற குளத்தினை வெட்டி உள்ளார் ,

[தொகு]விவசாயத்தை பெருக்கினர்

6 வது பட்டக்காரர் முத்து கொண்டாம நாயக்கர் பெரிய குளம், நடுக்குளம் என்ற குளங்களை வெட்டி தண்ணீர் வருவதற்காக வருதாபடி மாற்றில் அணை ஒன்றை கட்டினார். 7 அவது பட்டக்காரர் பகடல் கொண்டாம நாயக்கர் மேலக்கோட்டை என்ற கோட்டையை அமைத்து ஊர்களை கோட்டையை சுற்றி அமைத்தார் . குமார நாயக்கர் குளம் ஒன்றையும் அமைத்தார் . 8 வது மன்னர் ஒபுள கொண்டாம நாயக்கர் எர்ரம் நாயக்கர் பட்டி , கஞ்ச நாயக்கர் பட்டி , உருகுவார் பட்டி , கரிசல்குளம் போன்ற ஊர்களை உருவாக்கினார் , 9 வது பட்டம் பெற்றவர் ஏற்ர கொண்டாம நாயக்கர் பொட்டம்பட்டி கிராமத்தையும் , ஆயக்குடி சேர்ந்த தேவ நாயக்கர் குளம் ஒன்றையும் அமைத்துள்ளார் , 10 வது பட்டதரான முத்தியாலு கொண்டாம நாயக்கர் கணக்கம் பட்டி கிராமத்தையும் , பட்டிகுளம், மாப்ளை நாயக்கர் குளம் முதலியவற்றை அமைத்துள்ளார் , 11 வது அரசர் கொண்டாம நாயக்கர் சித்த வலசை மற்றும் 18 கிராமங்களை உருவாக்கினார் . 12 வது குமார் கொண்டாம நாயக்கர் கோம்பை பட்டி ஊரினையும் , ஊமை குமார சேர்வைகார குளம் , செவ்வப்ப நாயக்கர் குளம் முதலியவற்றை உருவாக்கினார் , 13 வது பட்டர் கொண்டாம நாயக்கர் சேர்வை காடுகளை வெட்டி விளை நிலங்களாக பல ஊர்களை உருவாக்கினார் .

[தொகு]போரில் பங்கு கொள்ளல்

14 வது குமார கொண்டாம நாயக்கர் பாப்பன் குளம் வாய்கால் அமைத்ததோடு அக்ரகாரம் முதலியவற்றை அமைத்து பிராமணர்களை , பண்டாரங்களை குடி அமர்த்தி உள்ளார் . ஏழை பிராமணர்களுக்கு பல தானங்களை தந்துள்ளார் , பெருமாள் குளம் , பசளை நாயக்கர் பட்டி முதலிய கிராமங்களையும் உருவாக்கி உள்ளார் , இவரது காலத்தில் மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சிக்காலம் . மைசூர் படைக்கு எதிராக நடைபெற்ற மூக்கருப்பு போரில் ஆயக்குடி பாளையமும் மதுரை நாயக்கர்களுக்கு உதவி உள்ளது , தஞ்சைக்கு எதிரான மதுரை நாயக்கர் போரிலும் பங்கு கொண்டுள்ளது , 15 வது கருத்த கொண்டாம நாயக்கர் வெப்பம் வலசை , செல்லப்பக் கவுண்டன் வலசை கிராமங்களை உருவாக்கி உள்ளார் , 16 வது பட்டதரசர் குமார கொண்டாம நாயக்கர் வேட்டை ஆடுவதில் வல்லவர் , 17 வது ஒபுள கொண்டாம நாயக்கர் இவரது காலத்தில் பல்லாயிரம் வீரர்களை விருப்பாச்சி கோபால நாயக்கர் படைக்கு தந்து உள்ளார் , கோபால நாயக்கரும் இவரும் உறவினர்கள் . ஆங்கிலேயரை எதிர்த்து வந்ததால் இப்பாளையம் அழிக்கப்பட்டது.

[தொகு]மேற்கோள்கள்

  • திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி
பகுப்பு