ராமகிரி பாளையம்
திண்டுக்கலில் இருந்து குஜிலியம்பாறை வழியாக
கரூர் செல்லும் சாலையில் அமைத்துள்ள இவ்வூர்
நாயக்கர் ஆட்சிக்காலத்
தில் பாளையமாக இருந்தது , ராமகிரியை சாமா நாயக்கர்கள் என்ற
ராஜகம்பளம் குடியினர்
40 தலைமுறையாக ஆட்சி செய்து வந்துள்ளனர் , இவ்வூரில் ஒரு கோட்டை உருவாக்கி
அங்கு தங்கள் இன மக்களையும் சுற்று பட்டிகளில் வாழும் பிற மக்களையும்
நிர்வாகித்து வந்துள்ளனர் , இவர்களுக்கு இரும்பு முறுக்கி சாமா நாயக்கர் ,
தலைவெட்டி சாம நாயக்கர் என்ற பட்டங்களும் உண்டு . இவர்கள்
பழனி கோவிலுக்கு
பல சாத்திரங்களை கட்டி உள்ளனர் , இவர்கள் கலியான நரசிம்ம சாமி கோவிலை
அமைத்ததோடு பல தானங்களையும் செய்து வந்துள்ளனர் , இவர்கள் பல ஊர்களை
உருவாக்கி உள்ளனர் மேலும் பிற்காலத்தில் தமிழகதிற்கு குடியேறிய தங்கள்
இனத்தவர்களான
வடுகர்என்று சொல்லும் நாயக்கர் இன மக்களை தாங்கள் வாழும் பகுதியில் குடியமர்த்தினர் .
No comments:
Post a Comment