Sunday, 27 November 2011

ராஜகம்பளத்து மக்கள் அணியும் காப்பு : தேவராட்டம் ஒரு சிறப்பு பார்வை


தற்போதைய செய்தி
ஜக்கம்மா தேவி என்பது ராஜகம்பளம் தொட்டிய நாயக்கர் சாதியினரால் வணங்கப்படும் குல தெய்வம். தொட்டிய நாயக்கர்களில் சிலர் குறி சொல்தல், கோடாங்கி சொல்தல், அருள் வாக்களித்தல், குடுகுடுப்பை சொல்தல், கைரேகை சோதிடம் பார்த்தல்,வேட்டை ஆடுதல் ,விவசாயம் செய்தல் மாந்திரீகம் செய்தல் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தேவி ஜக்கம்மாதான் முதல் தெய்வம். ஜக்கம்மா காளி தேவியின் அவதாரம் என்றும், இவர் போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா போன்ற வேறு சில பெயர்களாலும் இந்த மக்களால் அழைக்கப்படுகிறார்.

தேவி ஜக்கம்மா வரலாறு

கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆந்திராவில் இஸ்லாமியரின் படை எடுப்பால் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இதற்கு இஸ்லாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக கம்பள நாட்டை ஆண்டு வந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னர் இஸ்லாமியர்களிடம் இருந்து தங்கள் குல பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள தெற்கு நோக்கி தமிழகத்திற்கு செல்ல ஆணையிட, ஜக்கம்மா என்ற பெண் தலைமையில் கம்பளத்து சமுதாய மக்கள் சிலர் அங்கிருந்து தெற்கு நோக்கி தமிழகத்துக்கு வந்தனர்.
இப்படி வரும் வழியில் பல தடைகள் ஏற்பட்டதாகவும் , அதனை வீரம், மாந்தரிகம் போன்றவற்றால் கலைத்து அவர்களை ஜக்கம்மா காத்ததால் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இதனால் இவர் ராஜகம்பளம் சாதியினரால் குல தெய்வமாக வணங்கப்படுகின்றார். என்று இந்தஜாதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் காப்பு இனத்தில் பிறந்த ஜக்கம்மாளுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்ததாகவும் , இந்தப் பிள்ளைகளின் வம்சம்தான் தற்போதைய ஒன்பது கம்பளத்து மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.
மாந்தரிகம்
ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை சோதிட நம்பிக்கையுடைய பலருக்கும் உண்டு. குடுகுடுப்பை, கைரேகை சோதிடம், மாந்தரிகம், கோடாங்கி பார்த்தல் போன்ற வேலைகள் ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்கப்படுகிறது.
இந்த ஜாதிமக்கள் சொல்லும் வாக்கு உண்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை முன்பு பலருக்கும் இருந்தது. எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள் எனப்படுபவர்கள். இவர்களும் கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களே.
ஜோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான் திருமண வைபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திருமணம் மட்டுமல்ல, இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.

கட்டபொம்மன்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சில மன்னர்களுள் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். இவர் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார். இவருடைய அரண்மனை அமைந்திருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைப் பகுதியில் ஜக்கம்மாவுக்கு கோவில் ஒன்றும் அமைத்திருந்தார். இவர் தினமும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதுடன் தன்னுடைய செயல்பாடுகளுக்கு இங்குதான் வேண்டிக் கொள்வார் என்பதும் ஒரு கும்மிப் பாடல் மூலம் தெரிகிறது .

கம்பளத்து மக்கள்

பொதுவாக தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம் சாதியினைச் சேர்ந்தவர்கள் ஜக்கம்மாவைக் குல தெய்வமாகக் கொண்டுள்ளதால் இவர்கள் சாதி விழாக்களில் ஜக்கம்மா வழிபாடும் ஒன்றாக உள்ளது.மாசி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது
திருவிழா
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் திங்கள் கிழமையில் ஜக்கம்மா உயிர் நீத்தார் என்ற நம்பிக்கையில் சித்திரை மாதத் திங்கள் கிழமைகளில் ஜக்கம்மாவுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பாஞ்சாலங்குறிச்சியிலிருக்கும் ஜக்கம்மா கோவிலில் கம்பளத்து சாதியினர் சிறப்பு வழிபாடுகளுடன் தேவராட்டம், சேர்வைஆட்டம், கும்மி போன்றவைகள் மூலம் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

ஜெக்கதேவியை எப்படி வழிபட வேண்டும்

தேவி ஜெக்கதேவிக்கு வேண்டுதல் சொல்லி இருந்தால் அந்த வேண்டுதலுக்கு “ அரக்கு மொக்கு “ என்று சொல்லி தான் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் அந்த மக்கள் .
.அப்படி நேர்த்தி கடன் இல்லை என்றால் “ சரத்து மொக்கு “ என்று சொல்லி வட்டமாக நின்று வணங்கி செல்வார்கள் .இந்த வழிபாடு கார்த்திகை மற்றும் மாசி மாத ஜக்கதேவி கோவிகளின் வழிபாடுகளில் காணலாம் .
ஆதி ஜெக்கு பெயர்வரக்காரணம்
உலகம் தோன்றும் போது அண்ட சராச்சரமும் இருண்ட பகுதியாக எவ்வித ஒளி ஒலியும் இல்லாமல் இருந்தது .அதனால் தான் ஆதி என்னும் பெண் தெய்வத்தை இரவுக்கு ஒப்பிடுகிறோம் .
அதன் பின் பலகோடி ஆண்டுகள் இருள் மயமாக இருந்து இருளின் மத்தியில் கண்ணுக்கு தெரியாத ஒரு மாய சக்தி அண்டத்தில் பல திசைகளிலும் பல கோணங்களில் அதன் சக்திதிக்கு ஏற்ப ஒரு மாய பொருளாக உருவாக்கி கொண்டு இருக்கும் போது அந்த அண்டங்களின் மத்தியில் ஒரு மென்மையான் ஒலி அ …அஅ…அஅஅ….. என்ற ஒலி தோன்றியவுடன் இருண்ட உருவம் இல்லாத பூமியின் ஆத்மா ஒளியின் மத்தியில் சிறிய சுடராக உருவான ஜோதியைத்தான்
ஆ + தீ =ஆதீ என்று ஆதி சக்தி
என்றும் ஆதி ஜெக்கு என்றும் நாம் அழைக்கின்றோம் .
ஆதி ஜெக்க தேவியின் அம்சத்தில் தோன்றிய துர்கைகள்
ஆதி ஜெக்க தேவியின் அம்சத்தில் தோன்றிய துர்கைகள் 9
அந்த தேவதைகளின் பெயர்கள் வருமாறு :
1. வன துர்க்கை – பிறவி பெருங்கடலை அளிப்பவள்
2.குளிகை துர்க்கை – திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்றவள்
3.ஜாத வேதா துர்க்கை – வாயுவுக்கு அருளியவள்
4.ஜீவளா துர்க்கை – பண்டா சுரனை வதம்புரிய அனல் பிரம்பாகி அரண் அமைத்தவள் .
5.சாந்தி துர்க்கை – தச்ச யாகத்தின் முடிவில் வெகுண்ட சிவனை சாந்தி படுத்தியவள் .
6.சபரி துர்க்கை – பார்த்தனுக்கு பாசுபதம் அளிக்க சென்ற சிவனுடன் வேட்டு வாசி வடிவில் சென்றவள் .
7.தீப துர்க்கை – குண்டலினி யோகிகளுக்கு ஒளியாய் நின்று உதவியவள் .
8.ஆசூரி துர்க்கை -அமுதம் தாங்கிய திருமாலுக்கு உதவியவள்
9.லவன துர்க்கை –லவணன் என்ற அசுரனை சத்ருக்கன் வென்று வர ராமர் வழிபட்டவர்கள்
தொம்மிதி பெத்தம்மாள்
ஆதி ஜெக்க தேவிக்கு 9 உடையப்பட்டவள் என்று தமிழிலும் ,தொம்மிதி பெத்தம்மாள் என்று தெலுங்கிலும் அழைக்கிறோம் .
தொம்முதி என்றால் 9 என்றும் பெத்தா என்றால் பெரியவள் என்றும் பொருள் .
ராஜகம்பளத்து மக்கள் அணியும் காப்பு

தற்போதைய செய்தி
ராஜகம்பள மக்கள் அணியும் இந்த காப்பு தெலுங்கில் (பந்தை ) என்று அழைக்கப்படுகிறது .இவர்கள் திருமணத்தின் போதும் ,திருவிழாக்களின் போதும் ,இவர்கள் இந்த காப்பை அணிகிறார்கள் .
தேவராட்டம் :
தற்போதைய செய்தி
ராஜகம்பள மக்களால் ஆடும் ஒரு கலை ஆட்டம் தேவராட்டம் .இவர்கள் தேவராட்டம் ஆடும் போது தலையில் ஒரு தலைப்பாகை அணிந்தும் ,வெள்ளை நிற உடை அணிந்தும் ,மேல் ஆடை அணியாமல் இந்த ஆட்டத்தை ஆடுகிறார்கள் .இதுவும் திருவிழாக்களில் அந்த மக்களால் சிறப்பாக ஆடபப்டும் ஒரு ஆட்டம் .இந்த ஆட்டத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆடுகிறார்கள் .

செஞ்சி - வேலூர் நாயக்கர்கள்

4.4
தலைக்கோட்டைப் போரைத் தொடர்ந்து நேரிட்ட பெருங்குழப்பத்தின்போது தமிழகத்தில் மதுரையிலும், தஞ்சையிலும், செஞ்சியிலும் விசயநகரப் பேரரசின் சார்பில் அரசு புரிந்துவந்த நாயக்கர்கள் தனித்தனியே தத்தம் நாட்டு மன்னர்களாக முடிசூட்டிக் கொண்டார்கள். ஆயினும், வேலூர் நாயக்கர்களும், மைசூர் உடையார்களும் தொடர்ந்து விசயநகரத்து மன்னரின் தலைமையை ஏற்று வந்தனர்.
4.4.1 செஞ்சி நாயக்கர்கள்
விசயநகரப் பேரரசின் கீழ் செஞ்சியானது படை பலத்திலும், அரசு ஆதிக்கத்திலும் உயர்ந்ததொரு நிலையைப் பெற்றிருந்தது. சிதம்பரத்தில் இரண்டாம் குலோத்துங்க சோழன் தில்லைக் கோயிலில் உள்ள கோவிந்தராசப் பெருமாளின் சிலையை அகற்றிவிட்ட பிறகு முதன்முதல் அங்கு மீண்டும் ஒரு சிலையை அப்பெருமாளுக்கு அமைத்துக் கொடுத்த பெருமை செஞ்சியின் தலைவன் கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவரையே சாரும். மேலும் சிதம்பரம் திருச்சித்திரக் கூடத்துக்கு இவர் பல பெரும் திருப்பணிகள் செய்தார். இவரது திருப்பணிகளைச் சிதம்பரம் தீட்சிதர்கள் மிகவும் கடுமையாக எதிர்த்தார்கள். எனினும் கிருஷ்ணப்ப நாயக்கரின் திருப்பணிகள் ஓயவில்லை. பல தீட்சிதர்கள் மகளிருடன் கோபுரத்தின் மேலேறிக் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொண்டனர். இதனாலும் கிருஷ்ணப்ப நாயக்கரின் உள்ளம் நெகிழவில்லை. அவர் வெகுண்டு தீட்சிதர்களின் மேல் துப்பாக்கியால் சுட்டார். இதில் பல தீட்சிதர்கள் குண்டடிபட்டு இறந்தனர். இதனால் இவர் துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் என்று அழைக்கப்பட்டார்.
வெள்ளாறு கடலுடன் கலக்கும் இடத்தில் கிருஷ்ணப்ப நாயக்கர் கிருஷ்ண பட்டினம் என்ற ஊர் ஒன்றை அமைத்து அதில் ஜெசூட் பாதிரியார்கள் என்று கூறப்படும் ஏசு சபையினர்களுக்கு மாதா கோயில்கள் கட்டிக்கொள்ள உரிமை வழங்கினார். அவ்வூர் இப்போது பறங்கிப்பேட்டை என்னும் பெயரில் விளங்கி வருகின்றது.
4.4.2 வேலூர் நாயக்கர்கள்
வேலூரில் சின்ன பொம்ம நாயக்கர் என்பவர் விசயநகர பேரரசின்கீழ் கி.பி.1582ஆம் ஆண்டு வரையில் அரசாண்டு வந்தார் என்பர். வேலூர்க் கோட்டையையும் அதனுள் இருக்கும் சலகண்டேசுவரர் கோயிலையும் கட்டியவர் இந்நாயக்கர்தான்.
மேலும் இவர் அப்பைய தீட்சிதர் என்ற புலவரின் புலமையைப் பாராட்டிக் கனகாபிடேகம் செய்தார்.

கட்டபொம்மன் கயத்தாறு







நாள் : 17.10.1799
இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்
“விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.
இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.”
“மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்”.
- கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.
அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.
_______________________________________________
மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.
18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.
இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.
வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப், இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.
ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.
1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர், கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.
_______________________________________________
இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.
இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.
தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை ‘கொள்ளை’ என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.
தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.
இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.
இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன், ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.
பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணியபிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப்பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.
தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.
_______________________________________________
கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.
1799ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.
நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன். மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.
_______________________________________________
உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால், கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.
இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை இராமலிங்க முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.
முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.
தப்பிச் சென்றவர்களை கோலார்பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங் குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.
இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.
கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத்தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை
கயத்தாறு கட்டபொம்மன் நினைவுத் தூண் - இடிக்கப்பட்ட பாஞ்சாலக்குறிச்சி கோட்டை
கயத்தாறில் தன் மீது சுமத்தப்பட்ட ‘குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு “ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.
தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். “படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை” என்று அறிவித்தான் பானர்மேன்.
இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.
கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.
இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.

Saturday, 26 November 2011

எட்டப்ப நாயக்கர்

http://tawp.in/r/2tk9


மதுரையில் நாயக்கர்கள் ஆட்சிக் காலம் ஏற்படும் முன்பே ராஜகம்பளம் மக்களின் பாளையங்கள் குறிப்பாக எட்டையபுரம், பாஞ்சாலங்குறிச்சி , போடிநாயக்கனூர், சேந்தமங்கலம் , சாப்டூர் போன்ற பாளையங்களில் எட்டையபுரம் என்னும் பகுதியல் எட்டப்பர் வம்சத்தினை சேர்ந்தோர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர் . மிகப்பெரிய பாளையங்களில் ஒன்றாக நாயக்கர்களின் ஆட்சி காலத்திலும் விளங்கியது எட்டையபுரம் .

பொருளடக்கம்

 [மறை

[தொகு] பூர்விகம்

ஆந்திரம் மாநிலம் சந்திரகிரி என்னும் பகுதியில் கி.பி, 856 இல் பெரியப்பா நாயக்கர் என்னும் சிற்றரசரால் நிறுவப்பட்ட ஆட்சியினர். இவர்கள் ராஜகம்பளம் இனத்தில் உள்ள சில்லவார் பிரிவில் உள்ளவர்கள். இசுலாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து இனத்தின் பெண்ணை கேட்டதாகவும் அதனால் தங்கள் இன பெண்களை காப்பாற்ற தெற்கு நோக்கி வந்ததாகவும் கூறப்படும் தொட்டிய நாயக்கர்களின் கதையினை போலவே இவர்களும் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் இவ்வினத்து மக்கள் மேற்கு பகுதிகளிலும், வளமான பகுதிகளிலும் குடிபெயர்ந்தனர் .

[தொகு] பாண்டியர்களிடம் நன்மதிப்பு

இவர்கள் தமிழகதிற்கு பதினோராம் நூற்றாண்டில் வருகையில் இங்கு பாண்டியர்களின் ஆட்சிக்காலம் நடைபெற்று கொண்டு இருந்தது . மதுரை பகுதிகளில் அதிகமாக குடிபெயர்ந்த இவர்கள் இயல்பாகவே முரட்டு குடியினர் என்பதால் மதுரை பகுதிகளில் திருட்டு தொழில் ஈடுபடும் சில சமுகத்தை சேர்ந்தவர்களை அடக்க பாண்டிய மன்னர்களால் "திசைக்காவல்" என்னும் பொறுப்பைப் பெற்றனர். இங்குள்ள கள்ளர்களை அடக்கி நாட்டினை காத்ததால் பாண்டியர்களின் நன்மதிப்பை பெற்றதோடு சில ஊர்களையும் பரிசாக பெற்றனர். தென் மதுரையில் இவ்வினத்தவர்கள் குடிபெயர்ந்து தங்கள் ஆட்சியினை அமைதுக்கொண்டனர்.[1]

[தொகு] நல்லம்ம நாயக்கர்

எட்டப்பர் வம்சத்தில் ஒருவரான நல்லம்ம நாயக்கர் சாத்தூர் பகுதியில் தங்கள் இனத்தவர்களோடு குடிபெயர்ந்து அங்கு நல்லம்ம நாயக்கர் கோட்டையினை அமைத்து சுயாட்சி செய்து வந்தார். அதற்கு அடுத்ததாக வந்த குமார எட்டப்ப நாயக்கர் இலம்புவனம் என்னும் பகுதியை ஆட்சி செய்துக் கொண்டு இருந்த அருஞ்சுன தேவன், முதால தேவன் என்பவர்களை வென்று தங்கள் ஆட்சிப் பகுதியை விரிவாக்கம் செய்தார். இதன் காரணமாக இலம்புவனம், சுரைக்காபட்டி, ஈரால் , பாண்டவமங்கலம், வாழம்பட்டி, ராமநூத்தூர், நடுவபட்டி, நம்பியபுரம் போன்ற பகுதிகள் எட்டயபுர மன்னர்களின் வசம் ஆகியது . இவ்வெற்றின் காரணமாக ”ஜெகவீர ராம பாண்டியர்” என்று அழைக்கப்பட்டார் . [2]

[தொகு] ஜெகவீர ராம கெஜல்லு எட்டப்ப நாயக்கர்

இவரது ஆட்சிக்காலத்தில் எட்டையபுரம் எல்லை தெற்கு நோக்கி விரிவாக்கம் கண்டது . சாயமலை , மணியாச்சி , கோவில்பட்டி, திருநெல்வேலி வடக்கு போன்ற பகுதிகளை கைப்பற்றுகிறார் . இளசை என்ற பெயரை கொண்ட சிறு ஊரினை ஜெகவீர ராம எட்டப்ப நாயக்கர் என்னும் 19 வது பட்டத்தரசர் ”எட்டையபுரம்” என்று பெயர் மாற்றம் செய்து அங்கு சிவன் கோவில், அரண்மனை அமைத்து ஆட்சி செய்தார் .

[தொகு] எட்டப்பர் - பெயர்க்காரணம்

விஜயநகர பேரரசை நிறுவ குமார கம்பணன் என்ற மன்னர் தெற்கு நோக்கி படையெடுத்து வருகையில் எட்டயபுர மன்னர்கள் அவருக்கு உதவினர் . போரில் எட்டயபுர மன்னர் இறக்கவே அவரின் எட்டு பிள்ளைகளுக்கும் நானே அப்பன் என்று குமார கம்பணன் தெரிவித்து ”எட்டப்பர்” என்ற அடைமொழியை இவ்வினத்தவர்கள் சூடி கொள்ளுங்கள் என்று கூறினார் . எனவே பிறகு வந்த அனைத்து வம்சத்தினரும் தங்கள் பெயருக்கு பின்னால் எட்டப்பர் என்று இட்டுகொண்டனர் .

[தொகு] எடவங்கை கெஜ்ஜலப்பா நாயக்கர்

வேட்டையாடுவதை குலத்தொழில் என்று கொண்ட இவ்வரசர்கள் ஒரு நாள் வேட்டைக்கு செல்கையில் எதிரியினர் தாக்க முற்பட்டபொழுது தனது இடது கையினால் தாக்க முற்பட்டவனை கொன்றதால் அன்று முதல் எடவங்கை நாயக்கர் என்று அழைக்கபட்டார் . இவருக்கு பல மனைவிகளும் , பல குழந்தைகளும் இருந்தனர்.

[தொகு] சமய நல்லிணக்கம்

ரண சூரப்ப நாயக்கர் என்பவர் கிறிஸ்தவ , இசுலாமிய மதத்தையும் , அவற்றை வழிபடுபவர்களுக்கு தீங்கு தராமலும் இருந்துவந்துள்ளார். இவர் கட்டிய திருச்சபை இன்றும் கண்டாம நாயக்கன் பட்டி பகுதியில் உள்ளது. இதன் காரணமாக அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயமான நாடார் , பள்ளர், பறையர் போன்றோர்கள் மதம் மாறினார். ஆனால் அடுத்ததாக ஆட்சி செய்த வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் இந்து மத வெறியராக இருந்தார். மதம் மாறியவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். குறிப்பாக நாடார் சமுதாயத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர் .

[தொகு] ஜெகவீர ராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர்

இவர் பல கோவில்களை கட்டயுள்ளார் . அன்னதானம் , நிலதானம் போன்ற பல பணிகளை செய்துள்ளார் . இவர் கட்டிய சில கோவில்கள் :
  • அய்யன் சுப்ரமணிய சாமி கோவில்
  • கழுகுமலை கோவில்
  • திருநெல்வேலி காந்திமதி அம்மன் அஷ்ட மண்டபம்
  • சுந்திர விலாசம்
  • கலியான மகால்
  • சுப்ரமணிய விலாசம்
  • பல ஏரிகள் , குளங்கள் அமைத்தல்.
இவருக்கு ஐந்து மகன்கள்
  • ஜெகவீர ராம குமார எட்டப்ப நாயக்கர்
  • வெங்கடேஸ்வரர்
  • எட்டு நாயக்கர்
  • முத்துசாமி பாண்டியன்
  • ராமசாமி பாண்டியன்
இவரது ஆட்சி காலத்தில் எட்டயபுர நாடு பல வளர்சிகளை கண்டது .

[தொகு] தமிழ் வளர்ச்சி

எட்டையபுரம் மன்னர்கள் அனைவரும் தமிழ்பற்று கொண்டவர்கள் . சுப்ரமணிய பாரதிக்கு ”பாரதி” என்ற பட்டம் தந்தவர்கள் எட்டயபுர மன்னர்கள். அதே போல சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், சீறாப்புராணம் இயற்றிய உமறு புலவர் போன்றவர்களை எட்டயபுர அரசவை ஆதரித்தது. கல்விநிலையங்கள் அமைத்து இலவச உணவுத்திட்டம் கொண்டு கல்வி பரப்பினர். பாண்டியர்களின் ஆட்சி காலத்திலேயே சுயாட்சி அதிகாரம் கொண்ட நாடு, நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் மிக சிறந்த பாளையங்களில் ஒன்றாக திகழ்ந்தது .

[தொகு] ஆங்கிலேயர் பற்றிய நிலைப்பாடு

எல்லை பிரச்சனை காரணமாக வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோர்களுக்கும் எட்டயபுர மன்னர்களுக்கும் மனகசப்பு இருந்து வந்தது . இவர்களின் இந்த பிரிவினை பயன்படுத்திக்கொண்ட ஆங்கிலேயர்கள் எட்டப்பரை தங்கள் வசம் கொண்டு வந்தனர், ஆனால் இன்றும் எட்டயபுர மக்கள் எட்டப்பரை தவறாக சொல்வதை கண்டிகின்றனர். இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் எட்டப்பர் துரோகம் செய்ய வில்லை என்று தெரிவிக்கின்றனர்.[3] கட்டபொம்மனுக்கும் எட்டப்பருக்கும் குடும்ப பிரச்சனை இருந்த காரணத்தால் பிரிய நேரிட்டது . ஆனால் எட்டயபுர அரசர்களும் விடுதலை விரும்பிகளாகவே இருந்து வந்துள்ளனர். ஜெகவீரபாண்டிய எட்டப்ப நாயக்கர் என்பவர் ஆங்கிலேயருக்கு வரிதர மறுத்து ராமநாதபுரம் மாவட்டம் பெருநாளி முதலிய ஊர்களுக்கு சென்று மறைந்து வரிதராமல் இருந்துவந்துள்ளனர். அவர் செல்லும்வழியில் அருப்புக்கோட்டை முதலிய ஊர்களுக்கு சென்று தங்கள் நாட்டிலும் இவ்வாறான கோட்டைகள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார்.[4]

[தொகு] ஜமீன் பகுதி

415429 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய நாடாக திகழ்ந்தது. வண்டல் மண், பருத்தி , கம்பு , சோளம் , மிளகாய் போன்றவை விளையும் பகுதி. இங்கு அதிகமாக ராஜகம்பளம், மணியக்கார தேவர், தாழ்த்தபட்டோர் வாழ்கின்றனர் .

[தொகு] படை பலம்

வலிமையான படைபலம் கொண்டு இருந்தனர் . அழகு முத்துக்கோன் என்ற சேர்வை படைத்தளபதியாக கொண்டு இருந்தனர் .[5]


http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

[தொகு] மேற்கோள்கள்

  1. http://princelystatesofindia.com/Polegars/ettayapuram.html
  2. http://www.archive.org/stream/aristocracyofsou00vadiuoft/aristocracyofsou00vadiuoft_djvu.txt
  3. http://historicalleys.blogspot.com/2008/12/cat-ettappa-dumby.html
  4. http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=5024&ncat=9
  5. http://www.mathavaraj.com/2009/08/2.html

திருமலை போடி நாயக்கர்

ஆந்திரம் மாநிலத்தில் இருந்து பதினோராம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்த ராஜகம்பளம் மக்கள் மேற்கு மற்றும் கொங்கு பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர் . இவ்வாறாக குடிபெயர்ந்த ஒரு கூட்டத்தினர் தான் போடிநாயக்கனூர் பகுதியை ஆட்சி செய்த வம்சாவளியினர் .இவர்கள் வேகிளியார் சில்லவார் என்னும் உட்பிரிவைனை கொண்ட வம்சாவளியினர் . [1].

பொருளடக்கம்

 [மறை

[தொகு] கேரளா வர்மா

அக்காலத்தில் இப்பகுதி கேரளா வர்மா என்பவற்றின் கட்டுபாட்டில் இருந்தது , ராஜகம்பளம் மக்கள் இங்கு வந்து இவற்றை வென்று தங்களது பகுதிகளாக்கிக் கொண்டனர் . இங்கு இவர்கள் தனியாக சுயாட்சி செய்து வந்துள்ளனர் . சக்க நாயக்கர் என்பவர் இங்கு சிறு ஆட்சியினை செய்து வந்துள்ளார் . பாண்டியர்களிடம் நன்மதிப்பு பெற்று வந்தனர் .

[தொகு] திருமலை போடி நாயக்கர்

முத்து முள்ளக்கான் என்பவன் ராயரின் எல்லைகளுக்குள் மிகுந்த படைகளுடன் செல்லத் திட்டமிட்டு வருகையில் அவனுக்கு எதிராக நின்று திருமலை நாயக்கரை காத்ததால் இவருக்கு மன்னர் திருமலை என்ற பட்டத்தினை தருகின்றார் . இவருடைய குடும்பத்தினர் திருமலை என்ற பட்டத்தினை தங்களது முன்னால் சூடிகொள்கின்றனர்.

[தொகு] முதல் பாளையம்

அரியநாத முதலியார் மதுரை பாளையங்களை பிரிக்க திட்டம் இட்டபொழுது முதல் பாளையமாக பிரிக்கப்பட்ட பகுதி இவர்களுடையது தான் . திருமஞ்சனம் காடு என்று அழைக்கப்பட்ட இப்பகுதி பிறகு இவர்களின் குடும்ப பெயரான போடி என்பதை இனைத்து போடிநாயக்கனூர் என்று பெயர் மாற்றம் செய்தனர் .

[தொகு] திருமலை பங்காரு முத்து நாயக்கர்

நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் பாளையம் என்ற முறை கொண்டு வந்த பின்னர் முதல் முதலாக பொறுப்பேற்றவர் இவரே . இவர் பெரியகுளம் பகுதியில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில் கட்டியதோடு மண்டபபடியும் அளித்துள்ளார். இவர் இக்கோவிலுக்கு தேர் , மற்றும் பிரமோற்சவம் செய்ய பல பொருட்களை வழங்கி உள்ளார் . பல நந்தவனங்களை அமைத்துள்ளார் . இவர் புகழ்பெற்ற சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் அமைத்துள்ளார் . இவருக்கு பிறகு பொறுப்பேற்ற திருமலை போடி நாயக்கர் , ஜக்கன்ன நாயக்கர் , ராஜு நாயக்கர் பொறுப்பேற்றனர். இவர் குலசேகர தம்பிரான் என்ற மன்னனை வென்றுள்ளார் .[2]

[தொகு] கண்கொடுத்த அய்யன்

போடிநாயக்கனூர் மன்னர்கள் ஏனைய ராஜகம்பளம் மக்களை போலவே கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்கள் . மாந்தரிகம் போன்றவற்றிலும் திறமையானவர்கள் . இவர்களின் குல தெய்வம் ஜக்கம்மா தேவி . ஒரு நாள் வேளாளர் குலத்தில் பிறந்த ஒரு பெண் கண்பார்வை இழந்தததால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மனிடம் வேண்டுகிறார் . அன்று இரவு அப்பெண்ணின் கனவில் தோன்றிய அம்மன் போடிநாயக்கனூர் பகுதியை ஆட்சி செய்துக்கொண்டு இருக்கும் ராஜு நாயக்கர் என்பவரிடம் சென்று கண்பார்வை வேண்டும் என்று வேண்டினால் உன் பார்வை கிட்டும் என்று சொல்கிறார் . அப்பெண்ணும் அம்மன் சொல்வதை செய்ய அவருக்கு கண்பார்வை கிட்டுகிறது . அன்றிலிருந்து கண் கொடுத்த ராஜு நாயக்கர் அய்யன் என்று அழைக்கபட்டார் . மதுரை நாயக்கர்கள் இவரிடம் மிகுந்த மரியாதை கொண்டு இருந்தனர் . இவர் திருமலை நாயக்கருக்கு நெருக்கமான நண்பர் .

[தொகு] காமராஜ பாண்டிய நாயக்கர்

ஆங்கிலேயர்கள் ஆட்சி ஏற்பட்ட பிறகு முதல் முதலாக சட்டப்பேரவை கூடத்தில் தமிழில் பேசி தனது தமிழ் பற்றினை வெளிப்படுத்தினார் . ஆங்கிலம் இவருக்கு தெரிந்திருந்த நிலையிலும் இவர் தமிழில் பேசினார் . இவரது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறிய குற்றங்கள் கூட நடைபெறவில்லை என்று ஆங்கிலேய கலக்டர் ரோஸ் பீட்டர் என்பவர் தனது நூலில் பதிந்துள்ளார் . இவர் வேட்டை ஆடுவதில் வல்லவர் . திருமலை போடி காமராசு பாண்டிய நாயக்கர் என்னும் வாரிசுதாரர் தேவதானப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சத்திரம் , சாவடிகளை அமைத்துள்ளார் . இவர் பாதசாரிகளுக்கு விடுதிகள் அமைத்துள்ளார் . இவர் விவசாயத்திற்கு முன்னுரிமை தந்துள்ளார் . இவர் வெட்டிய கம்மாய் இன்றும் காமராசு பூபால சமுத்திர கம்மாய் என்று அழைக்கபடுகிறது . மரம் நடுதல் , காடுகளை பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தினார் .

[தொகு] ஸ்ரீ காமுலு அம்மாள்

ஸ்ரீ காமுலு அம்மாள் கண்டமனூர் ஜமீனில் பிறந்து போடிநாயக்கனூர் பகுதிக்கு மணமகளாக வந்தவர். இவரின் மகளை சாப்டூர் ஜமீன்ந்தாருக்கு திருமணம் செய்து வைத்தார். இவர் போடிநாயக்கனூர் மற்றும் சுற்று புற மக்களின் நலனுக்காக மருத்துவமனை அமைத்துள்ளார். இவர் வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் , விக்னேஸ்வர கோவில் முதலியவற்றை அமைத்துள்ளார்; பல சத்திரங்களை கட்டயுள்ளார். கல்யாண மகால் அமைத்ததோடு விக்டோரியா மெமோரியல் பள்ளிக்கு அடிக்கல் நாட்டி பொருளுதவி செய்துள்ளார்.[3]




https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D

[தொகு] மேற்கோள்கள்

  1. http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false
  2. http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false
  3. http://books.google.co.in/books?id=oFwDWt2N29cC&pg=PA183&dq=bodinayakanur+nayak&hl=ta&ei=u3fDTr3VMcXqrQf3q7T0Cw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC4Q6AEwAQ#v=onepage&q&f=false

தமிழ்நாடு அரச வம்சங்களின் பட்டியல்

தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருந்த பல்லவ நாடு, பாண்டிய நாடு, சோழப் பேரரசுப் பகுதிகளில்
  1. பல்லவ மன்னர்கள்
  2. முதலாவது பாண்டியர்கள்
  3. சோழப் பேரரசர்கள்
  4. பிற்காலப் பாண்டியர்கள்
  5. மதுரை நாயக்கர்கள்
  6. தஞ்சை நாயக்கர்கள்
என்ற அரச வம்சத்தினர் ஆண்டு வந்திருக்கின்றனர். அந்த அரச வம்சங்களின் பட்டியல்
பல்லவ மன்னர்கள் | பல்லவ மன்னர்கள் | முதலாவது பாண்டியர்கள் | முதலாவது பாண்டியர்கள் | சோழப் பேரரசர்கள் | சோழப் பேரரசர்கள் | பிற்காலப் பாண்டியர்கள் | பிற்காலப் பாண்டியர்கள் | நாயக்கர்கள் | நாயக்கர்கள் | ஆதாரம்

http://ta.wikipedia.7val.com/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A_%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

மூக்கறுப்பு யுத்தம்

மூக்கறுப்பு யுத்தம்

Filed under: tamil — Administrator @ 4:56 pm
அன்பர்களே,
சேதுநாட்டின் போரியல் வரலாற்றைக் குறிக்கும் இன்னொரு
சம்பவமும் உண்டு.
இதுவும் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்ததுதான்.
சடைக்கத்தேவர் காலத்துக்கும் பின்னால் நடந்ததாக
இருக்கும்.
சடைக்கத்தேவர் போர் 1639-இல் நடந்தது.
இந்தப் போர் 1656 -இலிருந்து 1659க்குள் நடந்தது.
அப்படி எழுதினே?” என்று கேட்கலாம்.று கேட்கலாம்.
ஞாபகத்தில் இருந்து எழுதும்போது - அதுவும் வேகமாக
எழுதும்போது இந்த வருசமாசந்தேதி விடபட முடியும்தானே?
சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களின் பழங்கால
ப்லாஸ்ட்டிக் ஸர்ஜரி முறைகளைப் பற்றி ஒரு நீண்ட தொடரை
எழுதினேன்.
அது மலேசிய ரேடியோவிலும் ஒலிபரப்பாகியது.
அந்தத் தொடரில் ‘மூக்கறுப்பு யுத்தம்’ பற்றி எழுதியிருந்தேன்.
அதையே ‘War of the Noses’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில்
எழுதினேன். அது Tamilian Sagas என்ற தலைப்பில் நான் எழுதிய
தொடரில் ஓர் அங்கம்.
அதுவும் சில இணைய இதழ்களில் வெளியாகியது.
மேலே படிக்கவும்…..
இந்திய மருத்துவத்தில் உள்ள அவயச் சீரமைப்புச் சிகிச்சை
(plastic surgery)பற்றி மேலும் பார்ப்பதற்கு முன்னர், உங்களுக்கு
ஒரு கதையைச் சொல்கிறேன். வரலாற்றுக் கதை. இப்போதெல்லாம்
வரலாற்றுக் கதை என்ற பெயரில் புருடாக்கள் நிறைய உலவுகின்றன.
எவ்வளவு மோசமாக புருடா இருக்கிறதோ அவ்வளவுக்கு அவார்டுகள்,
புகழ் என்று குவித்துக்கொள்ளலாம்.
அத்தகைய புருடா இல்லை இது.
வரலாறு.
17-ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம்.
இடம் தமிழ்நாடு-கர்நாடகா.
அக்காலத்தில் நாயக்கர்களின் மதுரை நாடு - மைசூர்நாடு.
மதுரைநாட்டை ஆண்டுகொண்டிருந்தவர் திருமலை நாயக்கர்.
1623 இலிருந்து 1659 வரைக்கும் மதுரையை ஆண்டவர்.
‘ஆண்டவர்’ என்றால் ஆண்டவர்தான். அரசர்களிலேயே அவர்
ஒரு God-Father.
இவர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் தென்னாட்டு அரசியலில்
பூந்து விளையாடியவர்.
விஜயநகரப் பேரரசின் அங்கங்களாக விளங்கியவைதாம் மதுரை,
மைசூர், செஞ்சி, தஞ்சை ஆகிய நாடுகள்.
பேரரசுக்குக் கப்பம் கட்டி, படைகளையும் அனுப்பவேண்டிய
கட்டாயம்.
ஆனால் பேரரசு பலவீனம் ஆனபிறகு, நாயக்கர்கள் சரியாக நடந்து
கொள்ளவில்லை.
திருமலை நாயக்கர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச்
சேர்ந்துகொண்டும் தூண்டிவிட்டுக்கொண்டும் போர்புரிந்துகொண்டும்
குழப்படிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.
தமிழ்நாட்டைக் கைப்பற்ற எண்ணியிருந்த கோல்கொண்டா,
பீஜப்பூர் ஆகிய சுல்த்தான்களைத் தூண்டிவிடுவது; அவர்களுடன் சேர்ந்து
கொண்டு மற்ற நாடுகளுடன் போரிடுதல்; அதன்மூலம் அவர்களைப்
பலவீனப் படுத்துதல் போன்றவற்றைச் செய்துவந்தார்.
அவர் செய்த அரசதந்திரக் காரியங்களால் பெயரளவில் இருந்த
விஜயநகரப்பேரரசு அறவே அழிந்துபோயிற்று.
கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகிய சுல்தானியர்களுக்கு மேன்மேலும்
தமிழ்நாட்டின் பகுதிகள் அடிமையாகின.
அவர்களுக்குத்தான் அதிக லாபம்.
இப்படிப்பட்ட விஷமங்களால் துன்பத்துக்கு ஆளாகியவர்களில்
ஒருவர் மைசூர் நாட்டின் அரசர் கண்டீரவ நரச ராஜா. இவர் 1638 இலிருந்து
1659வரைக்கும் மைசூரை ஆண்டவர்.
திருமலை நாயக்கரைப் பழிவாங்கத் தருணம் பார்த்திருந்தார்
நரச ராஜா.
தக்க வாய்ப்புக் கிடைத்ததும் மதுரைநாட்டின்மீது படையெடுத்தார்.
மைசூர் படைகள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமங்கலத்தை
முதலில் பிடித்துக்கொண்டன. மதுரை நாட்டில் சேலம், தர்மபுரி, கரூர்,
திருச்சியிலிருந்து தெற்கில் உள்ள பிரதேசங்கள் எல்லாமே இருந்தன.
தஞ்சை, செஞ்சி ஆகியவை தனி நாடுகள்.
சத்தியமங்கலத்திலிருந்து மைசூர்ப்படைகள் மிகவேகமாக
மதுரையை நோக்கி வந்துவிட்டன.
அந்தப் போரில் மைசூர்ப் படைகள் பெரும் அட்டூழியங்களைச்
செய்தன. வழியில் பிடிபடுகின்றவர்களின் மூக்குகளையெல்லாம் அறுத்து
விட்டார்கள். அவ்வாறு அறுபட்ட மூக்குகளுக்குத் தக்க பரிசு கொடுக்கச்
செய்திருந்தார் நரச ராஜா. மேலுதட்டுடன் மூக்கு இருக்கவேண்டும்.
மேலுதட்டின்மீது மீசை இருந்தால், அந்த மூக்குக்கு அதிகப் பரிசு.
இப்படியே மைசூர்ப்படைகள் மதுரைக்கு மிக அருகில்
வந்துவிட்டன.
அப்போது திருமலை நாயக்கருக்கு எழுபத்தைந்து வயது.
அவர் கொஞ்சமும் போரிடவோ, படைகளைத் திரட்டவோ இயலாத
நிலை.
ஆபத்து நெருங்கியபோது, தன்னுடைய மூத்த ராணியாரைக்
கொண்டு ராமநாதபுரத்தின் ரகுநாத சேதுபதியிடம் உதவி கோரி
கடிதம் எழுதி அனுப்பச்செய்தார்.
அந்தக் கடிதத்தைக் கண்டதும் சேதுபதி இருபத்தையாயிரம்
பேர் கொண்ட நன்கு தேர்ச்சி பெற்ற படையொன்றை அனுப்பினார்.
ரகுநாத சேதுபதிக்கு டச்சுக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு
இருந்தது. டச்சுக்காரர்கள், இத்தாலியர்கள் முதலிய தளபதிகளைக்
கொண்டு தமது வீரர்களுக்கு மிக நவீனமான முறைகளில் பயிற்சி
யளிக்கச் செய்திருந்தார். மேலும் துப்பாக்கிகள் தாங்கிய படையும்
அவரிடம் இருந்தது. பீரங்கிகளும் இருந்தன. ஆறே மணி நேரத்தில்
இருபதினாயிரம் போர்வீரர்களைத் திரட்டக்கூடிய தயார் நிலையில்
தம் நாட்டை வைத்திருந்தார்.
மைசூர்ப் படை மதுரையிலிருந்து சில மைல்கள் தொலைவில்
இருக்கும்போது, ரகுநாத சேதுபதியின் படை, மைசூர்ப் படைகளுக்கும்
மதுரைக்கோட்டையின் சுவருக்கும் இடையே இன்னொரு சுவர் போல
அணிவகுத்துக் கொண்டது.
இதன் நடுவில் திருமலை நாயக்கர் முப்பத்தையாயிரம் வீரர்கள்
கொண்ட படையொன்றையும் திரட்டச்செய்தார்.
இந்தப் பெரும்படையைப் பார்த்த மைசூர் படைத்தளபதி இன்னும்
அதிகப் படைகளைக் கேட்டு மைசூருக்குச் செய்தியனுப்பினான்.
அதே நேரத்தில் மதுரை நாயக்கப் படையின் தளபதியையும்
கையூட்டுக் கொடுத்துத் தன் வசமாக்கிக் கொண்டான்.
ஆகவே நாயக்கப்படைகள் பின்வாங்கின.
???
மதுரையின் கதி அதுவாகவில்லை.
சேதுபதி, தம்முடைய படையைக் கொண்டு தடுத்து நிறுத்தப்பட்ட
மைசூர்ப்படைகளின் மீது கடுமையா தக்குதல்களை நடத்தினார்.
மைசூர்ப்படைகள் விரட்டப்பட்டன.
அவை மிக வேகமாகப் பின்னோக்கித் திரும்பி ஓடின.
திண்டுக்கல்லில் இருந்துகொண்டார்கள்.
மைசூரிலிருந்து வந்த இருபதினாயிரம் வீரர்கள் கொண்ட
உதவிப்படை அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டது.
கடும்போர் நடந்தது. இருதரப்பிலும் மொத்தம் பன்னிரண்டாயிரம்
வீரர்கள் இறந்தனர்.
அந்த நிலையில் தப்பினால் போதும் என்ற நிலைக்கு மைசூர்ப்
படை வந்துவிட்டது. எஞ்சியிருந்த வீரர்கள் மைசூரை நோக்கி ஓடினார்கள்.
அதன்பின்னர் திருமலை நாயக்கர், தம் தம்பி முத்தியாலு நாயக்கரின்
தலைமையில் ஒரு படையைத் திரட்டி, பதினெட்டுப் பாளையங்களின்
படைகளையும் துணைக்குக் கொண்டு, மைசூரின்மீது படையெடுக்கச்
செய்தார்.
அந்தப் படையினர் திருமலை நாயக்கரின் கட்டளையின்பேரில்
தங்களிடம் அகப்பட்ட மைசூர்க்காரர்களின் மூக்குகளை அறுத்தது.
அவ்வாறு ஓடிய மைசூர் வீரர்களைப் பிடித்து அவர்களின்
மூக்குகளையெல்லாம் சேதுபதி அறுத்துவிடச்செய்தார்.
அந்தப் போரில் மைசூர் மன்னன் கந்தல்களைக் கட்டிக்கொண்டு
ஒரு யானையின் மீதேறித் தப்பிச்சென்றான் என்றும் அவனுடைய தாயின்
மூக்கை முத்தியாலு நாயக்கரின் படையினர் அறுத்ததாகவும் சொல்வார்கள்.
ஆபத்துக்காலத்தில் உதவி செய்து, நாயக்கரின் பட்டமகிஷியின்
தாலியைக் காத்தமையால் ரகுநாத சேதுபதிக்கு, ‘திருமலை சேதுபதி’
என்றும் ‘ராணி தாலி காத்தார்’ என்றும் ‘ராணி சொல் காத்தார்’ என்றும்
பட்டங்களைத் திருமலை நாயக்கர் கொடுத்தார். அத்துடன் மதுரையில்
எத்தனைச் சிறப்பாக நவராத்திரி கொண்டாடப்பட்டதோ, அதே அளவு
சிறப்புடன் ராமநாதபுரத்திலும் கொண்டாடும் சிறப்புரிமையையும்
நாயக்கர் வழங்கினார்.
நாகரிகத்தின் இருப்பிடமாக விளங்கிய இரு புராதன நாடுகளின்
குடிமக்களில் ஒரு பெரும் எண்ணிக்கையினரை மூக்கறையர்களாக
ஆக்கிவிட்ட இந்தப் போர், ‘மூக்கறுப்பு யுத்தம்’ என்றும்
‘மூக்கறுப்பு வேட்டை’ என்றும் சிறப்புப் பெயர்களைப் பெற்றது.
யுத்தத்தில் பிடிபடுபவர்களின் மூக்கை அரிந்துவிடுவது ஒரு
வழக்கம். அது terrorisation என்னும் பீதியுறுத்தலின் அடிப்படையைக்
கொண்டது.


http://www.tamil.net/erumbugal/?p=138

"சென்னப்ப நாயக்கர் பட்டினம்"

by Malaysian Indian Gounder Sanggam on Monday, August 22, 2011 at 3:08am
வந்தவாசியை விஜயநகர பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்த நாயக்கரான சென்னப்ப நாயக்கரின் மகன்கள் வெங்கடாத்திரி  மற்றும் அய்யப்பன் ஆகியோரிடம் இருந்து 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி பிரான்சிஸ் டே என்னும் ஆங்கிலேயரால் வாங்கப்பட்ட பகுதியே "சென்னப்ப நாயக்கர் பட்டினம்" என்று அழைக்கப் பட்டது.

சென்னப்ப நாயக்கர் மகன் அய்யப்ப  நாயக்கரின் பெயரில் இருந்தே "அய்யப்பன் தாங்கல்" என்னும் ஊர் வழங்கப்படுகிறது.. தற்போதும் இவரின் வாரிசுகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை  கேட்டால் கூட சொல்வார்கள் சென்னப்ப நாயக்கர் ஒரு நாயக்கர் என்பதை.
  மேலும் சென்னப்ப நாயக்கர் பெயரை சென்னப்ப நாயக்குடு என்று வேறு எழுதி வருகிறார்கள்.

நமது முன்னோர் சென்னப்ப நாயக்கரின் பெயரில் வழங்கப்படும் நமது சென்னையின் பிறந்த நாளை உரிமையோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடுவோம். :)

வளர்க சென்னை..வாழ்க அதன் புகழ்...

-

மூன்று நாயக்க அரசுகள்


    இப்பாடத்தின் முற்பகுதியில் குமாரகம்பணன் தமிழகத்தின்மீது
படை எடுத்து வந்து முதலில் தொண்டை மண்டலத்தை ஆட்சி
செய்த சம்புவரையரைவென்று, பின்பு அவர்கள் துணையுடன்
பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மதுரை சுல்தான்களை ஒழித்து,
தமிழகம் முழுவதையும் விசயநகரப் பேரரசின் கீழ்க் கொண்டு
வந்ததைக் கண்டோம். இந்நிகழ்வுக்குப் பின்பு இரண்டாம்
தேவராயன் (கி.பி. 1426 - 1446) காலத்தில் இலக்கணன் என்பவன்
மதுரை நாட்டிற்கும், மாதண்ணன் என்பவன் தஞ்சை நாட்டிற்கும்
மகாமண்டலேசுவரர்களாகத் திகழ்ந்தனர். பதினாறாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் கிருஷ்ணதேவராயர் பேரரசராக இருந்த காலத்தில்
நரச நாயக்கன் சோழ நாட்டிற்கும், நாகம நாயக்கன் மதுரை
நாட்டிற்கும் மகா மண்டலேசுவரர்களாக விளங்கினர்.முரண்பட்டுச்
செயல்பட்ட நாகமநாயக்கரைக் கிருஷ்ணதேவராயர் நீக்கிவிட்டு,
அவர்     மகன் விசுவநாத நாயக்கரை மதுரை நாட்டு
மண்டலேசுவரராக நியமித்தார்.
    கிருஷ்ண தேவராயருக்குப் பின்பு விசயநகரப் பேரரசரான
அச்சுத தேவராயர் தமிழ் நாட்டு ஆட்சி முறையை மேம்படுத்த
எண்ணி கி.பி. 1535-இல் செஞ்சி, தஞ்சை, மதுரை என மூன்று
மண்டலங்களாகப் பிரித்து மூன்று மகாநாயக்கத் தானங்களைத்
தோற்றுவித்தார். வையப்ப நாயக்கர் என்பவரைச் செஞ்சி
நாயக்க மன்னராகவும், தனது உறவினரான செவ்வப்பநாயக்கரைத்
தஞ்சை     நாயக்க     அரசராகவும், முன்பே மதுரையில்
மண்டலேசுவரராகத் திகழ்ந்த விசுவநாத நாயக்கரை மதுரை நாயக்க
அரசராகவும் நியமித்தார். அப்போது முதல் தமிழகத்தில் நாயக்கர்
ஆட்சி முறை தொடர்ந்தது.

5.3.1 செஞ்சி நாயக்க அரசும் நாயக்கர்களும்

    வட தமிழகமான தொண்டை மண்டலப் பகுதி முழுவதும்
செஞ்சி மகாநாயக்க தானமாக (நாயக்க அரசுப் பகுதியாக)
விளங்கியது திண்டிவனத்திற்கு அருகிலுள்ள செஞ்சி மலையின் மீது
கோட்டை, அரண்மனை ஆகியவற்றை அமைத்து வையப்ப
நாயக்கர் முதல் நாயக்க மன்னராக ஆட்சி புரியத் தொடங்கினார்.
வையப்பநாயக்கருக்குப் பின்பு பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர்
என்னும் துபாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர், கொண்டமநாயக்கர்,
முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் குமார வேங்கடப்பா, முத்து
வேங்கடப்பா, செஞ்சி வரதப்பா, இராமபத்ர நாயக்கர் என்னும்
செஞ்சி நாயக்கர்கள் ஆட்சிசெய்ததாகக் கல்வெட்டுகள் மூலம்
அறிய முடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் படைகளின்
தாக்குதல்களால் செஞ்சி நாயக்க அரசு அழிந்தது.

5.3.2 தஞ்சை நாயக்க அரசும் நாயக்கர்களும்

    விசயநகரப் பேரரசர் அச்சுத தேவராயரின் மனைவி
திருமலாம்பாவின் தங்கை மூர்த்தி மாம்பா என்பவரை மணந்த
செவ்வப்ப நாயக்கர் தஞ்சை நாயக்க அரசின் முதல்
முதல்மகாநாயன்காரராக நியமனம் பெற்றார்.கி.பி. 1535-இல் தஞ்சை
நாயக்கராகப் பொறுப்பேற்ற இவரது கல்வெட்டுச் சாசனங்கள் கி.்பி.
1590 வரை காணப்பெறுகின்றன.     செவ்வப்பநாயக்கரின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1564
முதல்) தஞ்சை நாயக்க அரசின் பொறுப்புக்களை ஏற்ற அவரது
ஒரே மகனான அச்சுதப்ப நாயக்கர் கி.பி. 1600 வரை ஆட்சி
செய்தார். பின்பு அவரது மகனான இரகுநாத நாயக்கர் 1645 வரை
தஞ்சை அரசராக விளங்கினார். கி.பி. 1631 முதல் தன் தந்தை
இரகுநாதநாயக்கருடன் இணைந்து அரசுப் பொறுப்பை ஏற்ற
விசயராகவ நாயக்கர் 1675 வரை அப்பணியில் தொடர்ந்தார்.
    மதுரை நாயக்க அரசர் சொக்கநாதர் தஞ்சை அரசருக்குரிய
வல்லத்தைக் கைப்பற்றிய போது விஜயராகவ நாயக்கர் பீஜப்பூர்
படையின் உதவியை நாடினார். உதவிக்கு வந்த பீஜப்பூர் படையின்
தளபதிகளால் ஒருவரான ஏகோஜி எனும் மராட்டியர் தஞ்சை
நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரை கி.பி. 1675- ஆம் ஆண்டில்
சண்டையிட்டுக் கொன்று, தஞ்சையில் மராட்டியர் ஆட்சி
முறையைத் தோற்றுவித்தார்.

கோவிந்த தீட்சிதர்


    தஞ்சை நாயக்க அரசர்களான செவ்வப்பர், அச்சுதப்பர்,
இரகுநாதர் ஆகிய மூவருக்கும் பிரதானியாகவும் ஆசானாகவும்
விளங்கியவர் கோவிந்த தீட்சிதர் என்பவராவார். கி.பி. 1635 வரை
வாழ்ந்த இவர் தஞ்சை நாயக்க அரசர்களின் புகழுக்குக் காரணமாக
விளங்கினார். இவரைப் பெரிதும் மதித்த இரகுநாத நாயக்கன்
‘கோவிந்தய்யா’ என்று தமிழில் பெயர் பொறிக்கப் பெற்ற காசுகளை
வெளியிட்டுச் சிறப்பித்தார். சிறந்த புலவராகவும் அரசியல்
வழிகாட்டியாகவும் திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் தஞ்சை நாட்டில்
பல கோயிற் பணிகளைச் செய்துள்ளார்.

5.3.3 மதுரை நாயக்க அரசும் நாயக்கர்களும்


    கி.பி. 1535-இல் மதுரை நாயக்க மன்னராக நியமனம் பெற்ற
விசுவநாத நாயக்கரின் ஆட்சி கி.பி. 1564 வரை நீடித்தது.
இவருக்குப் பின்பு அவர் மகன் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
(கி.பி. 1564 - 1572), பின்பு அவரது மகன் வீரப்ப நாயக்கர் (கி.பி.
1572 - 1595), அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணப்பநாயக்கர் (கி.பி.
1595 - 1601) ஆகியோர் ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சிக்குப்
பின்பு முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1606 - 1609), முதலாம்
முத்து வீரப்ப நாயக்கர் (கி.பி. 1609 - 1623), திருமலை நாயக்கர்
( கி.பி. 1623 - 1659 ), சொக்க நாத நாயக்கர் (கி.பி. 1659 - 1682),
அரசி மங்கம்மாள் ( கி.பி. 1689 - 1706 ), விஜயரங்க சொக்கநாத
நாயக்கர் (கி.பி. 1706 - 1782), அரசி மீனாட்சி (கி.பி. 1782 - 1786)
ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக மதுரை நாயக்க அரசின்
பொறுப்பை ஏற்று ஆட்சி செய்தனர்.
தளவாய் அரியநாத முதலியார்
    மதுரை நாயக்க அரசின் முதல் நான்கு நாயக்க அரசர்களுக்கு
சிறந்த போர்த்தளபதியாகவும் அமைச்சராகவும் தொண்டாற்றியவர்
தளவாய் அரியநாத முதலியார் ஆவார். இவர் மதுரை நாயக்க
அரசை வலுவுடையதாக ஆக்குவதற்குக் காரணமாக விளங்கியவர்.
இவரது முயற்சியால் மதுரை நாட்டில் 72 பாளையங்கள் அமைக்கப்
பெற்றன. பாளையக்காரர்களின் துணையோடு நாயக்க அரசின்
படைபலத்தைப் பெருக்கினார். பல சீர்திருத்தங்களைக் கொண்டு
வந்து செம்மையான ஆட்சி நிகழ வழி வகுத்தார்.


5.3.4 மதுரை நாயக்க அரசும் நாயக்கர்களும்

    நாயக்க மன்னர்களின் ஆட்சி உரிமை தந்தை மகன் எனக்
கொடி வழி உரிமையுடையதாக இருந்தது. பேரரசுக்கு உரிய
திறையும் தேவைப்படும்போது படை உதவியும் அளித்தல் நாயக்க
மன்னர்களின் கடமையாக இருந்தது. பாளையக்காரர்களிடமிருந்தும்,
அமர கிராமங்களிலிருந்தும் அலுவலர்கள் மூலம் பெறப்படும் வரிப்
பணம் நாயக்க அரசுக்கு உரிய முக்கிய வருவாயாக இருந்தது.
பாளையக்காரர்கள் நாயக்க அரசருக்குத் தேவைப்படும் போது
படை உதவி அளிக்க வேண்டும்.
    சிற்றூர்களில் கர்ணம், மணியக்காரர் தலையாரி முதலிய
பன்னிருவர் அடங்கிய ஆயக்காரர் முறை இருந்தது. கள்ளர்,
மறவர்களின் ஊர்களில் மணியக்காரர் ‘அம்பலக்காரர்’ என
அழைக்கப்பெற்றார். கர்ணம்,     தலையாரி, மணியக்காரர்
ஆகியோரால் தண்டல் செய்யப் பெற்ற வரிப் பணத்தை அரசு
அலுவலர்களிடம் சேர்ப்பார்கள். அவர் அதனைச் சரிபார்த்து,
பிரதானிக்கு அனுப்புவார் இவ்வாறு வரிப்பணம் இருமுறை
கணக்குப் பார்க்கப் பெறுவதால் அது ‘இருசால்’ எனப்பெற்றது.
நாயக்கர் கால நாட்டமைப்பு
ஒரு பெரிய மண்டலம் சீர்மை, வளநாடு, சாவடி (உசாவடி),
நாடு, கோட்டம், பற்று என்ற உட்பிரிவுகளை உடையதாக
விளங்கிற்று.ஊர்கள் பண்டாரவாடை, அமரம், இனாம் என்ற மூன்று
பகுப்புகளில் அடங்கியிருந்தன. பண்டார வாடை என்பது பேரரசின்
நேரடி நிர்வாகத்தில் இருந்த ஊர்களாகும். அமரம் என்பது நாயக்க
அரசுக்கு உரிய ஊர்களாகும். இனாம் அல்லது மானிய கிராமம்
என்பது தனிநபர்களுக்காக அரசால் வழங்கப்பட்ட நிலங்கள் உள்ள
ஊராகும். மதுரை நாட்டில் பாளையம் என்ற பகுப்பின் கீழ்ப் பல
ஊர்கள் திகழ்ந்தன.
மதுரை நாயக்க அரசின் தலைநகரங்கள்
    மதுரைப் பெருநாடு, பிரிவுபெறாத சேலம், கோயம்புத்தூர்,
திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களையும்,
திருவிதாங்கூரின் ஒரு பகுதியையும் தன்னகத்தே கொண்டு
திகழ்ந்தது. கி.பி. 1535-1615 வரை மதுரை நகரே இப்பெரு நாட்டின்
தலைநகரமாக விளங்கியது. பின்னர் கி.பி. 1616 முதல் 1634 வரை
திருச்சிராப்பள்ளி தலைநகராக விளங்கியது.கி.பி. 1634-இல் மீண்டும்
மதுரைக்குமாற்றம் பெற்ற தலைநகரம் கி.பி. 1664 வரை அதே
நிலையில் இருந்தது. பின்னர் கி.பி. 1665 இலிருந்து 1734 வரை
மீண்டும் திருச்சிராப்பள்ளியே தலைநகரமாக விளங்கலாயிற்று.
நாயக்கர் காசுகள்
    தமிழகத்தில் ஆட்சிபுரிந்த நாயக்கர்கள் விசயநகரப் பேரரசின்
நாணயங்களைப்     புழக்கத்தில்     கொண்டிருந்தபோதும்,
தங்களுக்கெனத்     தனியாகவும்     காசுகளை     வெளியிட்டு
வந்தனர். மதுரை, தஞ்சை நாயக்கர்கள் வெளியிட்ட பல காசுகள்
கிடைத்துள்ளன. அக்காசுகளில் நாயக்க அரசர்களின் பெயர்களும்
காணப்பெறுகின்றன. சில காசுகளில் நாயக்க அரசர்களின்
உருவங்களும், தெய்வ உருவங்களும் உள்ளன. தரங்கம்பாடி,
நாகப்பட்டிணம் போன்ற இடங்களில் வணிக மையம் அமைத்த
டேனியர், டச்சுக்காரர், போர்த்துகீசியர் போன்றவர்கள் நாயக்க
அரசர்களின் அனுமதி பெற்று, அவர்கள் கண்காணிப்பின் கீழ்
தங்களுக்கெனத் தனியாகக் காசுகளை வெளியிட்டனர்.
சமயம்
    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாயக்க அரசர்களில்
பெரும்பாலானோர்     வைணவச்     சார்புடையவர்களாகத்
திகழ்ந்தபோதும், சிலர் சைவ சமயச் சார்புடையவர்களாகவும்
விளங்கினர். சமணம், கிறித்தவம், இசுலாம் போன்ற பிற
மதத்தவர்களுக்கு ஆக்கம் கொடுத்த சமயப் பொறையுடைமை
நாயக்க மன்னர்களுக்கு இருந்தது.
கலை
    விசயநகரப் பேரரசர்களும் நாயக்க அரசர்களும் கோயில்களை
விரிவுபடுத்துவதிலும், உயர்ந்த கோபுரங்களைக் கட்டுவதிலும்,
மிகுந்த ஆர்வம் காட்டியதால் கோயிற்கலை தமிழகத்தில்
தழைத்தது. பதினொரு நிலைக் கோபுரங்கள் கட்டுவது, ஐந்து
அல்லது ஏழு திருச்சுற்றுக்களுடன் கோயில்களை விரிவுபடுத்துவது,
மிகுந்த வேலைப் பாடுகளுடன் உள்ள மண்டபங்களைக் கட்டுவது
போன்ற பணிகள் தமிழகம் முழுவதும் நிகழ்ந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர்,
திருவண்ணாமலை, திருவரங்கம், மன்னார்குடி ஆகிய இடங்களில்
உள்ள உயர்ந்த கோபுரங்கள் நாயக்கர்களின் கொடையாகும்.
ஓவியக் கலைக்கு மிகுந்த ஆக்கம் தந்தனர் மதுரை, திருவரங்கம்,
பட்டீச்சரம், திருவலஞ்சுழி போன்ற இடங்களில் உள்ள ஓவியங்கள்
குறிப்பிடத்தக்கவையாகும்.
    மதுரை நாயக்கர் மகால், தஞ்சாவூர் அரண்மனை, செஞ்சிக்
கோட்டை அரண்மனை ஆகியவை நாயக்கர் காலக் கட்டடக்
கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

link:
http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314553.htm