கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகில் உள்ள காரமடை என்னும் ஊரில் அமைந்துள்ள இக்கோவில் ஏறக்குறைய 500 வருடம் பழமை வாய்ந்தது . கொங்கு பகுதிகளில் இருக்கும் வைணவ தளங்களில் புகழ்பெற்றது.
பொருளடக்கம்[மறை] |
[தொகு]வரலாறு
இப்பகுதியில் அதிகமாக காரை பசுக்கள் மற்றும் காரை மரங்கள் இருந்ததன் காரணமாக இவ்வூருக்கு இப்பெயர் வந்தது . ஒருகாலத்தில் இங்குள்ள தொட்டிய நாயக்கர் பிரிவை
சேர்ந்த மக்கள் ஆடு . மாடுகளை அதிக அளவில் வைத்து இருந்தனர் .அந்த
கூடத்தில் இருந்த ஒரு மாடு காரை பசு தனியாக சென்று வருவதை கால்நடைகளை
மேய்க்க கொண்டு சென்ற கம்பளத்து ஆண் ஒருவர் காண்கிறார் . அவர் அம்மாட்டின்
பின் தொடர்ந்து சென்று நடப்பதை பார்க்கிறார். அக்காரை மாடு பசுமாடுடன்
உறவு கொண்டு இருப்பதைப் பார்த்த அவர் கோவத்தில் கத்தியினால் அம்மாட்டின்
உறுப்பை அறுக்கிறார் . அம்மாட்டில் இருந்து ரத்தம் சொட்டுகிறது .
அவ்வுறுப்பு விழுந்த இடம் சுயம்பு லிங்கமாக மாறியது . இதனைக் கண்ட அந்த
தொட்டியர் தனது கண்பார்வையை இழக்கிறார் . தனது தவறை உணர்ந்த அவர் இது
தெய்வத்தின் செயல் என்று நம்பினார் . அன்று அவரின் கனவில் தோன்றிய
பெருமாள் தனக்கு கோவில் கட்டி , சந்தனக் காப்பு நடத்து என்று கூறினார் .
அவரும் அக்கோவிலை கட்டி பூஜை செய்தார் . பெருமாள் மக்களின் முன் தோன்றி சத்திரியர்பட்டத்தை தொட்டிய நாயக்கர்களுக்கு தந்ததாக கோவில் செய்தி கூறுகிறது . [1]
[தொகு]நம்பிக்கைகள்
திருமலை நாயக்கர் கொடிய
நோய் ஒன்றில் அவதிப்பட்டார் அவர் இக்கோவிலுக்கு வந்து வேண்டியதால் அந்நோய்
தீர்ந்தது . அந்நோய் தீர்ந்த காரணத்தால் தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள்
வழிபட்டு வந்த சிறிய கோவிலை கோபுரங்கள் அமைத்து தற்போது உள்ள கோவிலை
அமைத்தார் . இக்கோவிலில் உள்ள காரை என்னும் ஒரு வகை மரம் தளவிரிட்சமாக
கொண்டுள்ளது . இம்மரத்தில் கயிறு கட்டினால் குழந்தை பாக்கியம் , திருமண
யோகம் வரும் என்று நம்புகின்றனர் .
[தொகு]திருவிழாக்கள்
மாசி மாதம் நடைபெறும் திருவிழா , மற்றும் வைகுண்ட ஏகாதசி போன்ற நாட்களில் தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகம் , ஆந்திரம் போன்ற பகுதிகளில் இருந்து பலர் இக்கோவிலுக்கு வருகின்றனர் . இங்கு நடைபெறும் தேர்த்திருவிழா புகழ்பெற்றது .
- மாசி மகம்
- புரட்டாசி சனிக்கிழமைகள்
- வைகுண்ட ஏகாதசி
போன்ற நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் .
[தொகு]பூஜை நேரம்
காலை
5 .30 மணி முதல் இரவு ஒன்பது மணிவரை கோவில் திறந்தே இருக்கும் .கோவிலுக்கு
செல்ல கோவை மாநகர் பேருந்துகளில் 3A, 3B, 3C, 3D, 3E, 3F, 3G, 4A
செல்லலாம் .
No comments:
Post a Comment