Sunday, 20 November 2011

எட்டப்பன் உருவான கதை*

எட்டப்பன் உருவான கதை*

எட்டயபுர மன்னர்களின்
அரச வம்சத்தினரின் பெயர் பட்டியலை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்த
பரம்பரையினரின் தொடக்க கால வரலாற்று விஷயங்களைத் தெரிந்து கொள்வதும்
இந்தக் கட்டுரை தொடருக்கு முக்கியமானதாக அமைகின்றது.
இவர்களது இனம் மற்றும் மொழி பற்றி குறிப்பிடும் போது Etaiyapuram Past and
present இவ்வாறு குறிப்பிடுகின்றது.



"The chief castes are, Naidus or Naicks of the Kambalam,
sections of the Vaduga caste; all three are agricultural, and Telugu
speaking, but differ in most other respects.  The Poligar of Etaiyapuram
belongs to the Kambala subdivision of the Vaduga caste. the Vadugas are, as
the name indicates, North country people, and hence foreigners...(Page 4)
இவர்களின்  மூதாதையர் வடக்கிலிருந்து வந்தவர்கள்; தெலுங்கைத் தாய்மொழியாகக்
கொண்டவர்கள். இவர்கள் கம்பளத்து நாயக்கர் எனச் சொல்லப்படும் ஒரு
குழுவினர்.    வடக்கிலிருந்து பெரும் அளவில் தெற்கு நோக்கி  பெயர்ந்து
வந்தவர்களில் இந்த கம்பளத்து நாயக்கர் குழுவினரின் எண்ணிக்கை அதிகம்.  அவ்வாறு
வந்தவர்களில் பெறும்பாலோர் மதுரைக்கு மேற்கே அடைக்கலம் தேடி வந்து அங்கே
குடியேறியுள்ளனர். 



16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இவ்வாறு வந்த பலர்
இப்பகுதிகளில் தங்கி ஆட்சி செயயத் தொடங்கினர்.
நாயக்கர்களின் ஆட்சியின் போது கம்பளத்தார்கள் அரசனிடம் தஞ்சம் புகுந்து
அரச படைகளில், அரசரின்
அரசாங்கத்தில் என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.
10வது பட்டமாகிய  குமார முத்து நாயக்கருக்கு இரண்டு மகன்கள். இவர்கள் நல்லம
நாயக்கர், வடலிங்கம நாயக்கர் ஆகியோர். நல்லம நாயக்கர்  விஜயநகரை ஆண்டு வந்த
சம்பு ராஜா அரண்மனையில் நிகழ்ந்த ஒரு விழாவில கலந்து கொள்ள வந்திருக்கின்றார்.
விஜயநகர ராஜாவின் கோட்டையின் தெற்கு வாசல் சோமன் என்ற ஒரு வீரனின் பாதுகாப்பில்
இருந்திருக்கின்றது. அந்த சோமனுக்கு 8 தம்பிகள். அவன் ஒரு மகாபெரிய வீரன்;
பலசாலியானவன். 




அவன் காலில் எப்போதும் ஒரு தங்கச் சங்கிலி
பொருந்தியிருக்குமாம்.  அப்போதிருந்த நடைமுறைப்படி  ராஜாவைப் பார்க்க
வருபவர்கள்  சோமனை மல்யுத்தத்தில் எதிர்த்து வென்று உள்ளே சென்று ராஜாவைப்
பார்க்கலாம். அல்லது அவன் காலில் அணிந்திருக்கும் அந்தத் தங்கச்
சங்கிலிக்குக் கீழே குணிந்து அவனுக்குப் பணிந்து சென்று பார்க்கலாம். இதில்
ஏதாவது ஒரு வழியில் தான் அரசனைப் பார்க்க முடியும் என்பது சட்டம்.
அரசரைப் பார்க்க விருப்பம் கொண்டிருந்த நல்லம நாயக்கர் சோமனுடன் மல்யுத்தம்
செய்வது என்று முடிவு செய்திருக்கின்றார். 



அவரும் பெரிய பலசாலியாக
இருந்திருக்க வேண்டும். மல்யுத்ததில் வென்று சோமனின் கழுத்தை தனது வாளால் வெட்டி
அந்தத் தலையை ஒரு கூரான ஈட்டியில் குத்தி எடுத்துக் கொண்டு அரசரைப் பார்க்கச்
சென்றிருக்கின்றார்.
ம்கா வீரனான நல்லம நாயக்கரின் வீரத்தைப் புகழ்ந்து பாராட்டிய அரசர் சோமனின் தலை
போன்ற ஒரு வடிவத்தைத் தங்கத்தால் செய்து அதனை நல்லம நாயக்கர் காலில் கட்டிக்
கொள்ள வேண்டும் என்று கூறியதோடு சோமனை இழந்து ஆதரவற்று இருந்த அவனது எட்டு
சகோதரர்களுக்கும் நல்லம நாயக்கரே பாதுகாப்பு தரவேண்டும் என்றும் கூற,  நல்லம
நாயக்கர் அந்த எட்டு சகோதரர்களையும் தத்தெடுத்துக் கொண்டிருக்கின்றார்.
இதனால் எட்டுபேர்களுக்கும் அப்பனானவன் எட்டப்பன் என்று அன்றிலிருந்து அவர்
பெயர் வழங்கப்பட்டிருக்கின்றார்.
இதனை Etaiyapuram Past and Present இப்படிக் கூறுகின்றது.
"




..and since he had spared the eight brothers of the defeated and dead
Soman, and had so adopted them, he would take the name of Ettappan
(Ettu=eight), (appan=father) in addition to the patronymic. The King also
granted him the privilege of two state fans, &c., in  addition to giving him
some lands and villages. Nallama Nayakar was taken round in procession and
granted leave to return to Chandraghiri. Since that time, the name Ettappan
is used by all legitimate successors to the Etaiyapuram Zamindhar .." (Page
14)
இதன் தொடர்ச்சியாக வம்சமணிதீபிகை நூலின் குறிப்பு இப்படி அமைகின்றது.
"..அதுமுதல்நாளது வரை எட்டப்பனென்ற பட்டப்பெயரானது இந்த இராஜாவின் வம்சத்திற்
பிறந்த இராஜாக்களுக்கு வழங்கி வருகின்றது. அப்படியே சோமத்தலைவிருதும் முதலில்
இந்த இராஜாவின் காலிற் கட்டின காமணன் தளவாய் வம்ஸசத்தர்களாலேயே பட்டாபிஷேக
காலத்தில் இராஜாக்களுடைய இடது காலிற் கட்டப்பட்டும் சந்திரகாவிக்
கொடியென்றவிருதும் முன்பிடித்தவன் வம்சஸ்தர்களாலேயே பிடிக்கப்பட்டும்
வருகிறது." (பக்கம் 28)
அன்று நல்லம நாயக்கர் காலில்
அணிந்திருத்த சோமனின் தலையின் வடிவமாக செய்யப்பட்ட தங்கச் சங்கிலி எட்டயபுர
அரச வம்சத்தினருக்கு மிக முக்கியச் சின்னமாக இன்றளவும் அமைந்திருக்கின்றது.
 




ஒவ்வொரு  பட்டாபிஷேகத்தின் போதும் இந்தச் சங்கிலி புதிய மன்னரின் காலில்
பொருத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது என்ற செய்தி வியக்க வைக்கின்றது.
ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாக இந்தச் சின்னங்கள் இப்பரம்பரையினரால்
பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது முக்கியமான விஷயமன்றோ..!

No comments:

Post a Comment