ஸ்ரீ விஜய ராஜசிங்கன் 1739 தொடக்கம் 1747 ஆம் ஆண்டுவரை இலங்கையின் கண்டி அரசை ஆண்டவன். தென்னிந்திய மதுரை நாயக்கர் மரபில் பிறந்த இவனே கண்டி நாயக்கர் மரபை உருவாக்கியவன் ஆவான். கண்டி அரச மரபின் கடைசி அரசனான ஸ்ரீ வீர பரக்கிரம நரேந்திரசிங்கன் மதுரை நாயக்க மரபைச் சேர்ந்த பெண்கள் இருவரை மணம் புரிந்திருந்தான். இருவருக்கும் பிள்ளைகள் இல்லை. இவனது இன்னொரு மனைவி மாத்தளைப் பகுதியின் பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாயினும் இளம் வயதிலேயே இறந்துவிட்டது. அரசனுக்கு அவனது ஆசைநாயகி ஒருத்திமூலம் ஒரு மகன் இருந்தான். அவனது பிறப்புக் காரணமாக அவனுக்கு அரசுரிமை கிடையாது. எனவே கண்டியின் மரபுரிமை வழக்கின்படி தனது மூத்த அரசியின் தம்பியைத் தனது வாரிசாக அரசன் தெரிந்தெடுத்தான். இவன் தனது தமக்கையார் மணமுடித்தகாலம் முதலே கண்டி அரண்மனையிலேயே வளர்ந்தவன். 1739 இல் நரேந்திரசிங்கன் காலமானான். அரசியின் தம்பி, ஸ்ரீ விஜய ராஜசிங்கன் என்னும் பெயருடன் சிம்மாசனம் ஏறினான்.இவன் ஒரு பண்பாடுள்ள அரசனாக விளங்கினான். சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும், கண்டியின் அரச மதமாக விளங்கிய புத்த சமயத்தின் வளர்ச்சியில் பெரும் அக்கறை காட்டினான். ஆளுயரப் புத்தர் சிலைகளை படுத்த, நின்ற மற்றும் இருந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மலைக் குகைகளில் செதுக்குவித்தான்.இவனது காலத்தில் இலங்கையில் கரையோரப் பகுதிகளை ஆண்டுவந்த ஒல்லாந்தருடன், வணிகம் தொடர்பில் பல பிணக்குகள் ஏற்பட்டன. இவன் பல கிறிஸ்தவ தேவாலயங்களை இடித்தான். போத்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளையும் எடுத்தான். 1796 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஒல்லாந்தரிடமிருந்து அதனைக் கைப்பற்றியதிலிருந்து யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமானது. 1796 ஆம் ஆண்டிலிருந்து 1948 ல் யாழ்ப்பாணத்தையும் இலங்கையின் ஒரு பகுதியாக விட்டுச் செல்லும் வரை இவ்வாட்சி நீடித்தது. |
Friday, 18 November 2011
ஸ்ரீ விஜய ராஜசிங்கன் வரலாறு - இலங்கை வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment