விஜயநகரப் பேரரசின் கீழ் தமிழகம் வரும்
முன்னும் தமிழகத்தின் பெரும்பகுதிகள்வேறு இரு அந்நிய ஆட்சிகளின் கீழ்
இருந்தன. அவ்வரசுகள் வடபகுதியை ஆண்ட கன்னட ஹொய்சளர்கள் (கி.பி.1225-1343) மற்றும் தென்பகுதியை ஆண்ட மாபார் சுல்தான்கள்
(கி.பி.1335-1378). அவ்வாட்சிக் காலம் தனியே ஆராயத் தக்கது. தமிழகத்தின்
நாயக்கர் ஆட்சியை அறிய விஜயநகரப் பேரரசின் முக்கியநிகழ்வுகளை அறிய
வேண்டியுள்ளது.
இராணி கங்காதேவியின் மதுரா விஜயத்தில் பின்வரும் புனைவு ஒன்று உண்டு:
"சம்புவராயனை வென்றதும் குமார கம்பணன் காஞ்சியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரது கனவில் தேவ வடிவில் மதுரை மாதேவி (மீனாட்சி?) மதுரையின் அலங்கோல நிலையை வருணித்து, மனித உலகம் கண்டிராத ஒரு ஒளி மிக்க வாளைக் கம்பணன் கையில் தந்து மறைந்தாள்".
(தமிழர்களைத் தெலுங்கர் ஆள அங்கயற்கண்ணியே ஆசி தருகிறாள் !?)
முதலாம் புக்கருக்குப் பின் ஆட்சிக்கட்டிலேறிய இரண்டாம் அரிகர ராயர் (கி.பி.1377-1404) காலத்திலேயே மதுரைப் பகுதிகளிலிருந்து சுல்தான்கள் ஆட்சிமுற்றிலும் துடைக்கப்பட்டது. தமிழகப் பகுதிகளை வேலூர், செஞ்சி, தஞ்சை, மதுரை என நான்கு மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒருமண்டலேசுவரரை நியமித்தார் அரிகர ராயர். இவர்களும் ராயரது அரச மரபினரே.
இரண்டாம் ஹரிஹரருக்குப் பின் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்தவர்களுள்குறிப்பிடத்தக்கவர் இரண்டாம் தேவராயர் (கி.பி.1426-1446). கேரளத்தையும் இலங்கையையும் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டு வந்தவர் இவர். இப்போர்களில் இவருக்கு உறுதுணையாயிருந்தவர்கள் பேரரசுக்குப் பணிந்து அப்போது கொற்கையிலிருந்தும் தெங்காசியிலிருந்தும் சிற்றரசர்களாக நேர்ந்தபாண்டிய அரச மரபினரே ஆவர். இவர் காலத்துத் தமிழக மண்டலங்களுக்கானமகாமண்டலேசுவரர் (தண்டநாயகர்) இலக்கண்ணராயர்.
இந்த இரண்டாம் அரிகரர் காலத்திலேயே தமிழகம் படைவீடு ராஜ்யம் (வேலூர்), சந்திரகிரி ராஜ்யம் (சந்திரகிரி), சோழ ராஜ்யம் (தஞ்சை), மதுரை ராஜ்யம், திருவதிகை ராஜ்யம் (செஞ்சி) என ஐந்து மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு, ராயஅரசமரபைச் சாராதவர்களும் மண்டலாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். இவருக்குப் பின் வந்த இச் சங்கமப் பரம்பரையினர் திறமையற்றவர்கள்.
கி.பி. 1485 இல் சந்திரகிரி ராஜ்ய மண்டலாதிபதியாக இருந்த சாளுவ நரசிம்மன் பேரரசரானார். இவருக்குப்பின் இவர் மகன் இம்மடி நரசிம்மன். இவர்களைச் சாளுவப் பரம்பரையினர் என்பர். இவர்களும் பலிஜா வகுப்பினரே எனினும் இவர்களின் தாய்மொழி கன்னடம். இவர்களுக்குப் பின் பேரரசைக் கைப்பற்றியவர்இவர்களிடம் படைத்தலைவராயிருந்த நரச நாயக்கர். இவரே துளுவப் பரம் பரையின் முதல்வர். துளுவப் பரம்பரையினரும் சாளுவரை ஒத்த மரபினரே.
![]() |
| மன்னர் கிருஷ்ண தேவராயர் |
மகாமண்டலேசுவரருக்குக் கீழ்ப்பட்டிருந்த இராஜ்யங்கள் எனப்பட்ட பிரிவுகளுக்குப் பதிலாக நாயக்கர் முறை இவரது காலம் முதலாகவே தோன்றியது. மகாமண்டலேசுவரர் பதவி மரபுவழிப்பட்டதாக விளங்கவில்லை. ஆனால் நாயக்கர் பதவிமரபு வழிப்பட்டதே. பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் தலைமையில் செஞ்சியிலும் (கி.பி.1509), விசுவநாத நாயக்கர் தலைமையில் மதுரையிலும் (கி.பி.1529) நாயக்கராட்சிகள்நிறுவப்பட்டன. கிருஷ்ண தேவராயரின் மறைவுக்குப் (கி.பி.1530) பின் கி.பி.1532-லேயே செவ்வப்ப நாயக்கர் தலைமையில் தஞ்சையில் நாயக்கராட்சிநிறுவப்பட்டது.
தன்னாட்சி அமைப்புகளின் அழிவும் ஆயக்கர் முறையும்
தமிழகத்தில் ஊர், நாடு, சபை போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பிற்காலச் சோழர்களின் காலத்தில் தன்னாட்சி (Self-rule) கொண்டிருந்தன. வரி வாங்கவும், பஞ்ச காலங்களில் வரித் தள்ளுபடி செய்யவும் அதிகாரம் பெற்றிருந்தன. கோயில்களை மேற்பார்வை செய்தன. அறநிலையப் பொறுப்பேற்றுக் கண்காணித்தன. பொது மக்களிடம் பணம் வாங்கி, வைப்பு நிதியாக்கி, தேவையான காலங்களில் மக்களுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் வழங்கும் வங்கிகளாகவும் இருந்தன. நிலங்களை விற்கும் உரிமையும், தானியர் முதலான கோவில் அலுவலர்களை நியமிக்கும் அதிகாரமும் இவ்வமைப்புகளுக்கு இருந்தன.
விஜயநகரப் பேரரசின் நேரடி ஆட்சிக் காலமான கி.பி.15-ஆம் நூற்றாண்டிலேயே - அப் பேரரசின் பகராளிகள் (பிரதிநிதிகள்) மதுரை, தஞ்சை, செஞ்சி முதலான பகுதிகளிலிருந்து அதிகாரம் செலுத்தி வந்த காலத்திலேயே - இச்சிற்றூராட்சி முறை ஒழிக்கப்பட்டு, பன்னிருவர் அடங்கிய ஆயக்கர் முறை (Ayakar System) தோற்றுவிக்கப்பட்டது. எல்லா நிலமும் அரசருடையதே என்றானதால், நிலவுரிமை பெற்றிருந்த தமிழ்க்குலங்கள் பலவும் குத்தகை விவசாயக் குடிகளாயின. ( விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள் என்பதை நினைவில் கொள்க.) படைப்பற்றுகள் என்ற பெயரில் படைவீரர்களுக்கு மானியமாகவும் வழங்கப்பட்டன.
ஆயக்கர் முறையிலுள்ள பன்னிருவரில் மணியம், கர்ணம், தலையாரி ஆகிய மூவரும்அரசால் நியமிக்கப்படுபவர்கள். கிராமத்தின் வரி வருவாய், நிலப் பரப்பு, எல்லைகள், நீர்நிலைகள் குறித்த விவரங்களைப் பதிவு செய்பவர் கர்ணம். கர்ணத்தின் உதவியுடன் வரி வசூலிப்பவர் மணியம் (மணியக்காரர்). ஊர்க்காவல்பணி செய்பவர் தலையாரி. ஆயக்கர் முறையிலுள்ள மற்ற ஒன்பதின்மர் சிற்றூர் மக்களின் பணிகளுக்குத் தேவையான தட்டார், கருமார், தச்சர், குயவர், புரோகிதர், செருப்புத் தைப்போர், வண்ணார், மயிர் வினைஞர், நீர்வழங்குநர் ஆகியோர். இவர்கள் அரசால் நியமிக்கப்படுவதில்லை. இவர்களுக்கு மானியமாக நிலம் வழங்கப்பட்டது. அதற்கு ஜோடி (Quit-Rent) என்ற வரி செலுத்தவேண்டியிருந்தது. இந்த ஆயக்கர் முறையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் வரையில் தமிழகத்தில் இருந்தது.
தெலுங்கர் மற்றும் கன்னடர் குடியேற்றம்
விஜயநகரப் பேரரசு தமிழ்ப் பகுதிகளில் வேர்விட்டு நிலைபெற்ற இவ்விரு நூற்றாண்டுகளிலேயே பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் தமிழகத்தில்குடியேறினர். கன்னடர்களும் குடியேறினர்.
"தமிழகம் தெலுங்கர்களான விஜயநகர வேந்தர்களின் ஆட்சியில் இருந்தபோது, தெலுங்கர்கள் இந்நாட்டில் வந்து குடியேறாமலா இருப்பார்கள்? தெலுங்கர் ஆட்சியில் தெலுங்கர் குடியேறுவது இயற்கை. ஆதலால், தெலுங்கர்களான கம்மவார்களும் நாயக்கர்களும் ரெட்டியார்களும் வேறு கன்னடர்களும் அலுவலர்களாகவும் போர்வீரகளாகவும் வணிகர்களாகவும் தமிழ்நாட்டில் குடியேறினார்கள் " என்பார் அ.கி. பரந்தாமனார்.
ஆளும் சாதியினரான பலிஜா நாயுடுகள் (தெலுங்கு & கன்னடம்), பலிஜா (காப்பு) சாதியின் கிளையினரெனச் சொல்லப்படும் கவரா நாயுடுகள், கம்பளத்து நாயுடுகள், வளையல்கார நாயுடுகள் ஆகியோரும், கம்மா நாயுடுகள், தெலுங்குமற்றும் கன்னடப் பார்ப்பனர்கள், ரெட்டியார்கள், ராஜூக்கள், ஆரிய வைசியர் எனப்படும் கோமுட்டிச் செட்டியார்கள், பேரிச் செட்டியார்கள், தெலுங்கு & கன்னடத் தேவாங்கச் செட்டியார்கள், 24 மனைத் தெலுங்குச் செட்டியார்கள், தொட்டிய நாயக்கர்கள், தெலுங்கு பேசும் சக்கிலியர்கள், வண்ணார்கள், ஒட்டர்கள், சாலியர்கள், தொம்பர்கள், கன்னட ஒக்கலிகர்கள், பட்டுநூல்காரர் எனப்படும் செளராஷ்டிரர்கள் எனப் பற்பல தெலுங்கு / கன்னடச் சாதியினரும் தமிழகத்தில்குடியேறினர்.
விஜயநகரப் பேரரசுக்கு முந்திய கன்னடர்களான ஹொய்சளர்களின் தமிழகத்தின்மீதான ஒரு நூறாண்டு கால ஆட்சிக்காலத்திலேயே கன்னடப் பார்ப்பனர்கள், கன்னட ஒக்கலிகர்கள் தமிழகத்தில் குடியேறியிருந்தனர். விஜயநகரப் ஆட்சியின் துவக்கத்திலேயே ஹொய்சளரை வீழ்த்தி கருநாடகம் விஜயநகரப் பேரரசுக்கு உட்பட்டதாலும் பேரரசின் ஆட்சியில் தெலுங்கு, கன்னடம் என இரு மொழிகளைத்தாய்மொழியாகக் கொண்ட பரம்பரைகளும் இருந்ததாலும் இக்காலத்தில் பெரும்எண்ணிக்கையிலான தெலுங்கர்கள் மட்டுமின்றி கன்னடர்களும் தமிழகத்தில் குடியேறினர்.
இதனால்தான் விஜயநகரப் பேரரசுக் காலம் என்பது தெலுங்கு இலக்கியத்திற்குமட்டுமின்றி கன்னட இலக்கியத்திற்கும், சமஸ்கிருத இலக்கியத்திற்கும்பொற்காலமாகவே இருந்தது. தமிழுக்கு...?

No comments:
Post a Comment