திரு கிருஷ்ணசாமி குள்ளப்ப நாயக்கர்
மதுரைக்கு பக்கத்தில் வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள
சந்தையூர் ஜாமீன்தாரர் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தை சேர்ந்த இவரை பற்றிய
மதுரை ஆவணகளில் உள்ள செய்தியை தமிழ் ஆக்கம் செய்து உங்களுக்கு
சமர்பிகின்றேன் .
சந்தையூர் ஜமின் வரலாறு :
சந்தையூர் ஜமின் ஏனைய
கம்பளத்தார் ஜமின்களை போல மிகபழமை வாய்ந்தது . துவாபர யுகத்தில் இக்கம்பள
மக்கள் கிருஷ்ணரை வணங்கியதாகவும் விஷ்ணு இவர்களுக்கு ஆசி வழங்கி என்றும்
குறைவு இல்லாமல் இருப்பீர் என்றும் , நீங்கள் சொல்லும் வாக்கு பலிக்கும்
என்றும் கூறியதாக இக்குல மக்களால் நம்பபடுகிறது . சுமார் ஆயிரம் வருடம் முன்பு தமிழ்நாட்டு எல்லை பகுதியில் உள்ள ஆந்திர மாநிலம் சந்திரகிரி மற்றும் சில ஊர்களை குள்ளப்ப நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்துள்ளார் . இவ்வாறாக இருக்கையில் விஜயநகர மன்னரை ( சொந்தகாரரை ) பார்க்க சென்றுள்ளார் குள்ளப்பர் , ஆனால் விஜயநகர கோட்டைக்கு அவ்வளவு எளிதாக யாரும் செல்ல முடியாது . கோட்டை வாசலில் சோமன் என்ற வீரன் ஒருவன் இருப்பான் அவனிடம் சண்டையிட்டு அவனை வென்றால் தான் கோட்டைக்குள் யாரும் செல்ல முடியும் . யாராலும் அடக்கமுடியாத அந்த சோமனை குள்ளப்ப நாயக்கர் மற்றும் அவரின் 8 சகோதரர்கள் அடக்கி மன்னரை சந்தித்தனர் . இவர்களின் வீரத்தை கண்டு வியந்த மன்னர் இவர்களுக்கு சாமரம் , அணிகலன் போன்ற பரிசுகளை கொடுத்து பாராட்டி அனுப்பினார் .
முகமதியர்களின் படையெடுப்பில் தெற்கு நோக்கி கம்பளத்தார்கள் வருகையில் குள்ளப்ப நாயக்கர் வம்சமும் தமிழகத்தில் மதுரைக்குப் பக்கத்தில் வந்து குடியேறினர் . மதுரை பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட நேரம் என்பதால் இவ்வம்சத்தை சேர்ந்தவர்கள் பாண்டியரிடம் சென்று தாங்கள் வாழும் பகுதியை தாங்களே ஆள வேண்டும் என்றும் தங்களின் முன்னிலமையையும் எடுத்து கூறினர். பாண்டியர் கம்பளதார்களிடம் நீங்கள் மதுரை பகுதியில் உள்ள கள்ளர்களை அடக்கி காவல் செய்வீர் என்றும் , திசைகாவல் பொறுப்பை கம்பளதார்களுக்கு வழங்குகின்றேன் என்று கூறினார் .
கம்பளத்தார்கள் அங்குள்ள கள்ளர்களை அடக்கி " கருக்கோட்டன் பட்டியில் "" கோட்டை அமைத்து கி.பி.1102 - 1900 வரை இவர்களே இப்பகுதிக்கு ஆட்சி செய்து வந்துள்ளனர் . அரசர்களாகவும் , ஆங்கிலேய ஆட்சி காலத்தில் ஜமின்களாகவும் இருந்து வந்துள்ளனர் .
பரவலாக கிருஷ்ணசாமி குள்ளப்ப நாயக்கரை பற்றிய ஆவணங்கள் அதிக அளவில் உள்ளன ( ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழந்தவர் ) என்பதால் இருக்க கூடும் .
மிகவும் வீரமிக்கவர் என்றும் , அனைவரிடமும் பாசம் செலுத்துபவர் என்றும் , கம்பளத்தார் சட்டதிட்டங்களை கடுமையாக கடைபிடிப்பவர் என்றும் ஆங்கிலேயன் இவரை பற்றி எழுதி உள்ளான் .
உண்மை வரலாறு :
1000 வருடங்களுக்கு முன்பே வந்தவர்கள் கம்பளத்தார்கள்
- தமிழகத்தில் குடியேறிய முதல் வேற்று மொழி பேசக்கூடியவர்கள் .
- வடுகர் என்று முதலில் அழைக்க பட்டவர்கள் ( வடக்கில் இருந்து வந்தவர்கள் )
- கம்பளதார்களின் உதவியால் தான் தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி வந்தது , அதனால் தான் பெரும்பாலான பாளையம் இவர்களால் ஆளப்பட்டுள்ளது . கம்பளத்தார் என்பது ஒரு இட பெயர் , இவர்களின் ஜாதி என்று பார்த்தல் காப்பு பலிஜா இனத்தை சேர்ந்தவர்கள் .
- வடுகர் என்றால் முரடர் என்று யாழ்ப்பான அகராதி கூறுகின்றது . முதலில் வந்த வடுகர் ( கம்பளத்தார் ) மிகவும் முரட்டு தனமாக இருந்ததால் ஆட்சி அதிகாரங்களை கடுமையாக வீரத்தால் பல போரில் வென்றதால் இவ்வாறு பொருள்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் .
- தமிழ்நாட்டில் 15 ஆம் நூற்றாண்டில் குடிபெயர்ந்தவர்கள் தற்போதுள்ள காப்பு , பலிஜா , கவரா இனத்தை சேர்ந்தவர்கள் . இவர்களும் கம்பளத்தார்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் 500 வருட காலங்களில் தெலுங்கு அதிக வளர்ச்சி அடைந்த காரணத்தால் பலிஜா , கவரா வகுப்பினர் சற்று நல்ல தெலுங்கில் பேசுவர் . கம்பளத்தார் வரும் காலத்தில் தெலுங்கும் , தமிழும் கலந்த நிலையில் தற்போது இவர்கள் பேசும் மொழியை போல தான் ஆந்திராவில் பேசி இருப்பர் என்று ஆராய்ச்சி மக்கள் கூறுகிறார்கள் . கம்பள மக்கள் பிற இனத்தை சேர்ந்தவர்களை தங்கள் பக்கம் கூட சேர்க்காமல் வாழ்ந்து வந்ததால் இன்றும் இவர்கள் பழமையோடும், வீரத்தோடும் வாழ்கிறார்கள் .
- இவ்வாறு பலிஜா , கவரா , கம்பளத்தார் ஒரே ஜாதியினர் என்றாலும் மொழியில் சிறிது வேறுபாடு , நாயக்கர்கள் பொதுவாக அதிக ஜாதி பற்று கொண்டவர்கள் என்பதால் ஒரே கிளை , வம்சம் பார்த்து தான் திருமணம் செய்து கொள்கின்றனர் .
பிற இனத்தை சேர்ந்தவர்களான் தெலுங்கு செட்டியார் , கம்மா , ஆரிய வைசியர் போன்றோர் 17 ஆம் நூற்றாண்டில் வந்தவர்கள் .
ஆயிரம் வருடங்களாக தமிழ் மண்ணில் நிலைத்து , 800 வருடம் தமிழகத்தை ஆட்சி செய்து அதற்கு முன்னும் ஆந்திராவை ஆட்சி செய்தும் வரலாறு நெடுகிலும் ஆட்சி செய்தே அதிகாரம் படைத்தே வாழ்ந்த ஒரு இனத்தை யாராவது சொல்ல முடியுமா ?
No comments:
Post a Comment